பத்துக்காலிகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
Decapoda

Temporal range: Devonian–recent
Haeckel Decapoda.jpg
"பத்துக்காலிகள்" எர்னஸ்ட் கெக்கலின் 'குன்ச்ட்போர்மென் டெர் நேட்டர், 1904
அறிவியல் வகைப்பாடு e
திணை: விலங்கு
தொகுதி: கணுக்காலிகள்
துணைத் தொகுதி: கிறஸ்டேசியா
வகுப்பு: மலக்கோஸ்டிரக்கா
சூப்பர் வரிசை: யூகரிடியா
வரிசை: பத்துக்காலிகள்

Latreille, 1802
Suborders

Dendrobranchiata Pleocyemata See text for superfamilies.

பத்துக்காலிகள் (Decapoda) என்பவை ஓடுடைய கணுக்காலி துணைத்தொகுதியில் உள்ள மலக்கோஸ்டிரக்கா வகுப்பில் அடக்கிய வரிசை உயிரினங்களாகும். இந்த வரிசையில் கிரேபிஷ், நண்டுகள், கடல் நண்டுகள், கடல் மற்றும் நன்னீர் இறால் அடங்கியுள்ளன. பெரும்பாலான பத்துக்காலிகள் தோட்டி விலங்குகளாக உள்ளன. இந்த வரிசையில் சுமார் 2,700 பேரினங்களின் கீழ் 15,000 சிற்றினங்கள் உள்ளன. சுமார் 3,300 சிற்றினங்கள் புதைபடிவ இனங்களாக உள்ளன.[1] இவற்றில் பாதி உயிரினங்கள் நண்டுகள் மற்றும் இறால் வகைகளாகும் (சுமார் 3,000 இனங்கள்). அனோமுரா (ஹெர்மிட் நண்டுகள், பீங்கான் நண்டுகள், சிங்கி இறால் (சுமார் 2500 இனங்கள்) ஆகியவை மீதமுள்ளவற்றில் பெரும்பகுதியை உருவாக்குகின்றன. ஆரம்பகால புதைபடிவ பத்துக்காலிகள் டெவோனியன் காலபேலியோபேலிமான் ஆகும் . [2]

உடற்கூறியல்[தொகு]

பத்துக்காலிகளில் சுமார் 38 இணை உறுப்புகள் காணப்படுகின்றன.[3] பத்துக்காலி எனும் இந்தப் பெயரானது கிரேக்க வார்த்தையான δέκα (δέκα, deca- , "பத்து"), மற்றும் πούς / ποδός , -pod, "கால்") தோன்றியது. இந்த பத்து உறுப்புகள் கால்களாக கருதப்படுகின்றன. இவை மார்புகண்டத்தின் கடைசி ஐந்து கண்டங்களில் காணப்படும். இவைநடக்கும் கால்கள் எனப்படுகின்றன. பல பத்துக்காலிகளில், இவற்றில் ஓர் இணைக்கால்கள் நன்கு வளர்ச்சியடைந்து இடுக்கிப்போன்று காணப்படும். இவை கீலே என்று அழைக்கப்படுகின்றன. இந்த கால்கள் இடுக்கிக்கால்கள் (கெல்லிபீடுகள்) என அழைக்கப்படுகின்றன. இந்த நடக்கும்காளுக்கு முன்னால் மூன்று இணைதுருவுத்தாடை உதடுகள் உள்ளன. இவை உணவூட்டத்தில் உதவி புரிகின்றன. இதனுடைய தலைப்பகுதியில் ஐந்து இணை உறுப்புகள் உள்ளன. இவை வாயுறுப்புகள், உணர்கொம்பு, உணர்நீட்சி முதலியன. அடிவயிற்றில் மேலும் ஐந்து ஜோடி இணை உறுப்புகள் உள்ளன. இவை நீந்தும்கால்கள் என்று அழைக்கப்படுகின்றன. வால்கால்கள் என்று அழைக்கப்படும். கடைக் கண்டத்தில் ஓர் இணை உறுப்பு உள்ளது. இது வால்கூர்நீட்சியுடன் விசிறி போன்று காணப்படும்.[3]

வகைப்பாடு[தொகு]

பத்துக்காலிகளின் வகைப்பாடானது செவுள்களின் அமைப்பு, கால்கள் முதலியனவற்றோடு, இளம் உயிரிகளின் வளர்ச்சி முறைகளையும் உள்ளடக்கியது. இதன் அடிப்படையில் இந்த வரிசையானது இரு துணைவரிசைகளாகப் பிரிக்கப்படுகின்றன. அவை 1) டெண்ட்ரொபிராங்கிட்டா 2) பிலியோசிமெட்டா. டெண்ட்ரோபிராக்கிட்டாவில் இறால்கள் அடங்கியுள்ளன. உதாரணமாக வெள்ளை இறாலான லிட்டோபின்னேயஸ் செட்டிபெரஸா. பிற பிரிவுகள் பிலியோசிமெட்டாவில் உள்ளன. இந்த விலங்குகள் பெரும்பாலும் நீந்திச் செல்வதைக் காட்டிலும் நடந்தே (பிலிசிமேட்டா, ஸ்டெனோபோடிடே மற்றும் கரிடியா தவிர) செல்கின்றன. இவை ரெப்டாண்டியா எனும் சந்ததி பிரிவினைத் தோற்றுவிக்கின்றன[4]

இந்த வகைப்பாடானது டி கிரேவ் மற்றும் பலரது வகைப்பாடான சூப்பர் குடும்ப அடிப்படையில் அமைந்துள்ளது.[5]

வெள்ளைக்கால் இறால், Litopenaeus இறால் ( Dendrobranchiata : Penaeoidea )
Heterocarpus ensifer (Caridea: Pandaloidea)
ஆஸ்ட்ரோபோடமோபியஸ் பாலிப்ஸ் ( அஸ்டாசீடியா : அஸ்டகோயிடா )
Upogebia deltaura ( Gebiidea : Upogebiidae )
கலிபோர்னியா ஊசிமுனைத் கடல் நண்டு, Panulirus interruptus ( Achelata : Palinuridae )
Polycheles sculptus (Polychelida: Polychelidae)
ஆஸ்திரேலிய நிலம் துறவி நண்டு, Coenobita variabilis (Anomura: Paguroidea)
அட்லாண்டிக் நீல நண்டு, Callinectes sapidus (Brachyura: Portunoidea)

வரிசை பத்துக்காலிகள் லேட்ரில்லே, 1802

 • Suborder Dendrobranchiata Bate, 1888
  • Penaeoidea Rafinesque, 1815
  • Sergestoidea Dana, 1852
 • Suborder Pleocyemata Burkenroad, 1963
  • Infraorder Stenopodidea Bate, 1888
  • Infraorder Caridea Dana, 1852
   • Procaridoidea Chace & Manning, 1972
   • Galatheacaridoidea Vereshchaka, 1997
   • Pasiphaeoidea Dana, 1852
   • Oplophoroidea Dana, 1852
   • Atyoidea De Haan, 1849
   • Bresilioidea Calman, 1896
   • Nematocarcinoidea Smith, 1884
   • Psalidopodoidea Wood-Mason, 1874
   • Stylodactyloidea Bate, 1888
   • Campylonotoidea Sollaud, 1913
   • Palaemonoidea Rafinesque, 1815
   • Alpheoidea Rafinesque, 1815
   • Processoidea Ortmann, 1896
   • Pandaloidea Haworth, 1825
   • Physetocaridoidea Chace, 1940
   • Crangonoidea Haworth, 1825
  • Infraorder Astacidea Latreille, 1802
   • Enoplometopoidea de Saint Laurent, 1988
   • Nephropoidea Dana, 1852
   • Astacoidea Latreille, 1802
   • Parastacoidea Huxley, 1879
  • Infraorder Glypheidea Winckler, 1882
   • Glypheoidea Winckler, 1882
  • Infraorder Axiidea de Saint Laurent, 1979b
  • Infraorder Gebiidea de Saint Laurent, 1979
  • Infraorder Achelata Scholtz & Richter, 1995
  • Infraorder Polychelida Scholtz & Richter, 1995
  • Infraorder Anomura MacLeay, 1838
   • Aegloidea Dana, 1852
   • Galatheoidea Samouelle, 1819
   • Hippoidea Latreille, 1825a
   • Chirostyloidea Ortmann, 1892
   • Lithodoidea Samouelle, 1819
   • Lomisoidea Bouvier, 1895
   • Paguroidea Latreille, 1802
  • Infraorder Brachyura Linnaeus, 1758
   • Section Dromiacea De Haan, 1833
    • Dromioidea De Haan, 1833
    • Homolodromioidea Alcock, 1900
    • Homoloidea De Haan, 1839
   • Section Raninoida De Haan, 1839
   • Section Cyclodorippoida Ortmann, 1892
   • Section Eubrachyura de Saint Laurent, 1980
    • Subsection Heterotremata Guinot, 1977
     • Aethroidea Dana, 1851
     • Bellioidea Dana, 1852
     • Bythograeoidea Williams, 1980
     • Calappoidea De Haan, 1833
     • Cancroidea Latreille, 1802
     • Carpilioidea Ortmann, 1893
     • Cheiragonoidea Ortmann, 1893
     • Corystoidea Samouelle, 1819
     • Dairoidea Serène, 1965
     • Dorippoidea MacLeay, 1838
     • Eriphioidea MacLeay, 1838
     • Gecarcinucoidea Rathbun, 1904
     • Goneplacoidea MacLeay, 1838
     • Hexapodoidea Miers, 1886
     • Leucosioidea Samouelle, 1819
     • Majoidea Samouelle, 1819
     • Orithyioidea Dana, 1852c
     • Palicoidea Bouvier, 1898
     • Parthenopoidea MacLeay,
     • Pilumnoidea Samouelle, 1819
     • Portunoidea Rafinesque, 1815
     • Potamoidea Ortmann, 1896
     • Pseudothelphusoidea Ortmann, 1893
     • Pseudozioidea Alcock, 1898
     • Retroplumoidea Gill, 1894
     • Trapezioidea Miers, 1886
     • Trichodactyloidea H. Milne-Edwards, 1853
     • Xanthoidea MacLeay, 1838
    • Subsection Thoracotremata Guinot, 1977
     • Cryptochiroidea Paul'son, 1875
     • Grapsoidea MacLeay, 1838
     • Ocypodoidea Rafinesque, 1815
     • Pinnotheroidea De Haan, 1833

மேலும் காண்க[தொகு]

 

 • அட்லாண்டிக் டிகாபோட் இனங்களின் பட்டியல்
 • மலாக்கோஸ்ட்ராக்காவின் பைலோஜெனி
 1. Sammy De Grave; N. Dean Pentcheff; Shane T. Ahyong (2009). "A classification of living and fossil genera of decapod crustaceans". Raffles Bulletin of Zoology Suppl. 21: 1–109. http://rmbr.nus.edu.sg/rbz/biblio/s21/s21rbz1-109.pdf. 
 2. Robert P. D. Crean (November 14, 2004). "Order Decapoda: Fossil record and evolution". University of Bristol. மூல முகவரியிலிருந்து February 29, 2012 அன்று பரணிடப்பட்டது.
 3. 3.0 3.1 "Decapoda characters and anatomy". மூல முகவரியிலிருந்து 10 November 2013 அன்று பரணிடப்பட்டது.
 4. G. Scholtz; S. Richter (1995). "Phylogenetic systematics of the reptantian Decapoda (Crustacea, Malacostraca)". Zoological Journal of the Linnean Society 113 (3): 289–328. doi:10.1006/zjls.1995.0011. 
 5. G. Scholtz; S. Richter (1995). "Phylogenetic systematics of the reptantian Decapoda (Crustacea, Malacostraca)". Zoological Journal of the Linnean Society 113 (3): 289–328. doi:10.1006/zjls.1995.0011. 

வெளிப்புற இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பத்துக்காலிகள்&oldid=3040482" இருந்து மீள்விக்கப்பட்டது