முஃகர்ரம்
| முஃகர்ரம் | |
|---|---|
ஈரானில் 2016-ஆம் ஆண்டு நடைபெற்ற ஆஷூரா ஊர்வலம் | |
| பூர்வீகப் பெயர் | ٱلْمُحَرَّم (அரபி) |
| நாட்காட்டி | இசுலாமிய நாட்காட்டி |
| மாத எண் | 1 |
| நாட்களின் எண்ணிக்கை | 29–30 (பிறை நிலவின் நேரடிப் பார்வையைப் பொறுத்தது) |
| குறிப்பிடத்தக்க நாட்கள் | ஆஷுரா |
முஃகர்ரம் (முஹர்ரம், மொஹரம், முகரம், அரபி: محرم) என்பது இஸ்லாமிய ஆண்டின் முதலாவது மாதமாகும். இசுலாமிய ஆண்டின் நான்கு புனித மாதங்களில் இதுவும் ஒன்று. இசுலாமிய நாட்காட்டி ஒரு சந்திர நாட்காட்டியானதால், கிரெகொரியின் நாட்காட்டியுடன் ஒப்பிடும்போது இது ஆண்டிற்காண்டு நகருவது போன்று காட்சியளிக்கும். இந்த மாதத்தில் சண்டைகள், புனிதப் போர் புரிவதாயினும் தடை செய்யப்பட்டுள்ளது. சில இசுலாமியர், இம்மாதத்தின் ஒன்பதாம் நாளிலும் மற்றும் பத்தாம் நாளிலும் உண்ணா நோன்பு இருத்தல் வழமையாகும். முஃகர்ரம் மாதத்தின் பத்தாம் நாள் (அரபு மொழியில் ஆசூரா) அன்று தியாகத் திருநாளாகக் கொண்டாடப்பட்டு அன்று சியா இசுலாமியர் உண்ணாதிருப்பர்.
தோற்றம்
[தொகு]முஃகர்ரம் (பொருள்: 'புனிதமானது') என்பது இஸ்லாமிய நாட்காட்டியின் முதல் மாதமாகும்; இது அதிகபட்சமாக முப்பது நாட்களைக் கொண்டது. இம்மாதத்தில் போர் புரிவது தடைசெய்யப்பட்டுள்ளது; இத்தடை இஸ்லாத்தின் வருகைக்கு முன்பிருந்தே நடைமுறையில் இருந்து வருகிறது. 'முஃகர்ரம்' என்ற சொல் "முஹர்ரம் சஃபர்" (பொருள்: 'புனிதமான சஃபர்') என்பதன் சுருக்கமாகும். பண்டைய அரபு நாட்காட்டியில், புனிதமானதாகக் கருதப்பட்ட 'ஸஃபர் I' மாதத்தையும், புனிதமற்றதாகக் கருதப்பட்ட 'ஸஃபர் II' மாதத்தையும் வேறுபடுத்திக் காட்டுவதற்காகவே, இப்பெயர் பயன்படுத்தப்பட்டது. இருப்பினும், காலப்போக்கில் 'முஃகர்ரம்' என்ற அந்த அடைமொழிச் சொல்லே ஆண்டின் முதல் மாதத்தின் பெயராக மாறியது.
முஃகர்ரம் மாதமும், ஆசூரா நோன்பும்
[தொகு]முஃகர்ரம் பண்டிகை (Remembrance of Muharram) கர்பாலா போரில் முகம்மது நபியின் பேரனான ஹுசைன் இப்னு அலி கொல்லப்பட்டதை சியாக்களால் நினைவுகூறப்படுகிறது.
சியா முஸ்லிம்கள் தவிர்ந்த ஏனைய இசுலாமியர் முஹர்ரம் மாதத்தின் பத்தாவது நாளில் வைக்கப்படும் நோன்பானது, தான் கடவுள் என்று கூறிய அரசன் ஃபிர்அவ்ன் மற்றும் படைகளை கடலில் மூழ்கடித்து மூஸா (அலை) அவர்களை காப்பாற்றியதற்காக, அல்லாஹ்விற்கு நன்றி செலுத்துவதற்காக வைக்கப்படுவதாகும்.[1]
நிகழ்வுகள்
[தொகு]சந்திர கணக்கீட்டின்படி, பின்வருமாறு முஃகர்ரம் மதிப்பிடப்பட்டுள்ளது [2]
- முஃகர்ரம் 01: இந்தியாவில் ஹஜரத் அம்மா சாகேப் பீவி ஹபிப கதறி இறந்த ஆண்டு
- முஃகர்ரம் 10: ஆசூரா நோன்பு
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2017-07-13. Retrieved 2014-06-01.
- ↑ http://www.staff.science.uu.nl/~gent0113/islam/ummalqura.htm
வெளியிணைப்புகள்
[தொகு]| இ நா | முதல் நாள்(பொ ஊ / அ டொ) | கடைசி நாள்(பொ ஊ / அ டொ) |
|---|---|---|
| 1431 | 18 டிசம்பர் 2009 | 15 சனவரி 2010 |
| 1432 | 7 டிசம்பர் 2010 | 4 சனவரி2011 |
| 1433 | 26 நவம்பர் 2011 | 25 டிசம்பர் 2011 |
| 1434 | 15 நவம்பர்2012 | 13 டிசம்பர் 2012 |
| 1435 | 4 நவம்பர் 2013 | 3 டிசம்பர் 2013 |
| 1436 | 25 அக்டோபர் 2014 | 22 நவம்பர் 2014 |
| 1437 | 14 அக்டோபர் 2015 | 12 நவம்பர் 2015 |
| 2010 முதல் 2015 வரை முஃகர்ரம் தேதிகள் உள்ளன | ||
| 1442 | ஆகஸ்ட் 21,2020 | ____ |
| அளவீடு | |
|---|---|
| வாரம் | |
| சூரியமாதம் / இராசி | |
| தமிழ் மாதங்கள் | |
| கிரெகொரியன் | |
| சந்திர மாதம் | |
| இசுலாமிய நாள் |
|
| இசுலாமிய மாதம் | |
| தமிழ் ஆண்டுகள் | |
| நாட்காட்டிகள் | |
| கடிகாரம் | |
| பருவ காலம் | |
| அறிவியல் | |
| காலம் | |
| பிற | |