துல் கஃதா
துல் கஃதா | |
---|---|
அகழ்ப்போரின் போது அலீ இப்னு அபு தாலிப் (இடது), அமுர் இப்னு அபு தால்வுத் (வலது) ஆகியோருக்கு இடையேயான சண்டையின் ஓவியம் | |
பூர்வீகப் பெயர் | ذُو ٱلْقَعْدَة (அரபு மொழி) |
நாட்காட்டி | இசுலாமிய நாட்காட்டி |
மாத எண் | 11 |
நாட்களின் எண்ணிக்கை | 29-30 (நிலாவின் பிறையின் உண்மையான கண்காணிப்பைப் பொறுத்தது) |
குறிப்பிடத்தக்க நாட்கள் |
|
துல் கஃதா (Dhu al-Qa'dah, அரபு மொழி: ذُو ٱلْقَعْدَة) என்பது இசுலாமிய நாட்காட்டியின் 11-ஆவது மாதமாகும்.
இது "இருக்கும் இடத்தின் உரிமையாளர்" என்று பொருள்படலாம் - உட்கார்ந்திருக்கும் போது ஆக்கிரமிக்கப்பட்ட இடம்.
போர் தடைசெய்யப்பட்ட இசுலாத்தின் நான்கு புனித மாதங்களில் இதுவும் ஒன்றாகும், எனவே இது "போர்நிறுத்தங்களின் ஆசான்" என்று அழைக்கப்படுகிறது.
உதுமானியரின் காலத்தில், துருக்கிய மொழியில் இது "சில்கேட்" (Zi'l-ka'dé) ஆகும்.[1][2]
காலம்
[தொகு]இசுலாமிய நாட்காட்டி என்பது ஒரு சந்திர நாட்காட்டி ஆகும், அமாவாசையின் முதல் பிறை பார்க்கும்போது மாதங்கள் தொடங்கும். இசுலாமிய சந்திர நாட்காட்டி ஆண்டு வெப்பமண்டல ஆண்டை விட 11 முதல் 12 நாட்கள் குறைவாக இருப்பதால், பருவங்கள் முழுவதும் துல்-கதா இடம்பெயர்கிறது. சவூதி அரேபியாவின் உம்முல்-குரா நாட்காட்டியின் அடிப்படையில் துல்-கதாவின் மதிப்பிடப்பட்ட தொடக்க, முடிவு தேதிகள் பின்வருமாறு:[3]
ஹிஜ்ரி (AH) | முதலாவது நாள் (பொஊ/கிபி) | கடைசி நாள் (பொஊ/கிபி) |
---|---|---|
1443 | 31 மே 2022 | 29 சூன் 2022 |
1444 | 21 மே 2023 | 18 சூன் 2023 |
1445 | 9 மே 2024 | 6 சூன் 2024 |
1446 | 29 ஏப்பிரல் 2025 | 27 மே 2025 |
1447 | 18 ஏப்பிரல் 2026 | 17 மே 2026 |
இசுலாமிய நிகழ்வுகள்
[தொகு]- 5 ஹிஜ்ரி – அகழ்ப்போரில் முசுலிம்கள் பங்கேற்றனர்.
- 7 ஹிஜ்ரி – முதலாவது புனிதப் பயணம் - முகம்மது நபியும் அவரது தோழர்களும் உம்ராவிற்காக மக்கா திரும்பினர்.
- 8 துல் கஃதா – ஹிஜ்ரி 8-ல் ஹஜ் முசுலிம்களுக்குக் கடமையாக்கப்பட்டது.
- 25 துல் கஃதா – கஃபாவின் அடியில் பூமி போடப்பட்ட நாள், இப்றாகீமும், இயேசுவும் பிறந்த நாள்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Youssof, R. (1890). Dictionnaire portatif turc-français de la langue usuelle en caractères latins et turcs. Constantinople. p. 642.
{{cite book}}
: CS1 maint: location missing publisher (link) - ↑ Youssof, R. (1890). Dictionnaire portatif turc-français de la langue usuelle en caractères latins et turcs. Constantinople. p. 632.
{{cite book}}
: CS1 maint: location missing publisher (link) - ↑ Umm al-Qura calendar of Saudi Arabia