உம்ரா
Jump to navigation
Jump to search
ஹஜ் |
---|
ஹஜ் தயார் படுத்துதல் |
வரிசைகிரமமான ஹஜ் செயல்கள் |
ஹஜ் உடைய மாதம் |
![]() |
உம்றா (Umrah, அரபு மொழி: عمرة) என்பது இசுலாமியர்களின் ஒரு புனிதப் பயணமாகும். எந்த நேரத்தில் வேண்டுமானாலும் இஹ்றாமுடன் மக்காவிற்குச் சென்று திருக்கஃபாவை தவாஃப் செய்தல், ஸயீ செய்தல், தலை முடியை அகற்றுதல் அல்லது குறைத்தல் முதலிய கடமைகளைச் செய்து இறைவனை வணங்குவது 'உம்றா' ஆகும். இது ஹஜ் கடமையைப் போன்று கடமையில்லை எனினும் ஆயுளில் ஒரு முறையாவது உம்றா செய்வது ஹனஃபி மத்ஹபுப்படி பலமான ஸுன்னத்தும், ஷாஃபி மத்ஹபுப்படி பர்லுமாகும். ஹஜ்ஜின் நிபந்தனைகள் உம்றாவிற்கும் பொருந்தும்.
உசாத்துணை[தொகு]
- எஸ். நாகூர் மீரான், முன்னாள் சுற்றுலாத்துறை மற்றும் தமிழ்நாடு மாநில ஹஜ் குழு தலைவர்(வாழ்த்துரை)மற்றும் மு. அபுல் ஹசன், முன்னாள் செயலாளர் தமிழ்நாடு மாநில ஹஜ் குழு, முகவுரையுடன்,"ஹஜ்ஜும் உம்றாவும்", தமிழ்நாடு மாநில ஹஜ் குழு வெளியீடு. 9-2-1995