ஷவ்வால்
ஷவ்வால் (ஆங்கிலம்:Shawwal) என்பது இஸ்லாமிய ஆண்டின் பத்தாவது மாதமாகும். இஸ்லாமிய நாட்காட்டி ஒரு சந்திர நாட்காட்டியானதால் கிரெகொரியின் நாட்காட்டியுடன் ஒப்பிடும்போது இது ஆண்டிற்காண்டு நகருவது போன்று காட்சியளிக்கும்.
இது புனித ரமலான் மாதத்தை அடுத்து வருகிறது. அனைத்து உலக முஸ்லிம்களும் ரமலான் மாதம் முழுவதும் நோன்பு இருந்து ஷவ்வால் மாதத்தின் தலைப்பிறை தென்பட்ட பின் ஷவ்வால் மாதத்தின் முதல் நாளில் நோன்பு பெருநாளை கொண்டாடுவார்கள்.
இஸ்லாமிய நாட்காட்டி என்பது ஒரு சந்திர நாட்காட்டி ஆகும். அமாவாசை மற்றும் முதல் பிறை தோன்றும் போது போது சிறிது காலம் வித்தியாசப் பட்டு தொடங்கும். சந்திர ஆண்டு சூரிய ஆண்டை விடக் 11 முதல் 12 நாட்கள் குறைவாக இருப்பதால், ஷவ்வால் மாதம் எல்லா காலப் பருவங்களிலும் மாறிவரும்.
நிகழ்வுகள்
[தொகு]- ஹிஜ்ரி 3 வருடம் ஷவ்வால் மாதம் 3 ம் நாள் - உஹது யுத்தம்
- ஹிஜ்ரி 5 வருடம் ஷவ்வால் மாதம் 10 ம் நாள் - அல் அஹ்ஜாப் யுத்தம்[1]
- ஹிஜ்ரி 8 வருடம் ஷவ்வால் மாதம் - தாயிப் யுத்தம்[2]
ஷவ்வால் மாதத்தில் 6 நோன்பு நோற்பது சிறந்தது.[3]
காலக் கணிப்பு
[தொகு]முற்றிலும் சந்திரனின் சுழற்சியை அடிப்படையாக கொண்ட இஸ்லாமிய நாட்காட்டி சந்திர கணக்கீட்டின் படி பின்வருமாறு ஷவ்வால் மதிப்பிடப்பட்டுள்ளது.
ஹிஜ்ரி | முதல் நாள் (CE / AD) | இறுதி நாள் (CE / AD) |
---|---|---|
1437 | 6 ஜூலை 2016 | 3 ஆகஸ்ட் 2016 |
1438 | 26 ஜூன் 2017 | 23 ஜூலை 2017 |
1439 | 15 ஜூன் 2018 | 13 ஜூலை 2018 |
1440 | 4 ஜூன் 2019 | 3 ஜூலை 2019 |
1441 | 24 மே 2020 | 21 ஜூன் 2020 |
1442 | 13 மே 2021 | 10 ஜூன் 2021 |
ஷவ்வால் மாதம் 2016 தொடக்கம் 2021 வரை |