உள்ளடக்கத்துக்குச் செல்

முனுகப்பட்டு மன்னார்சாமி சமேத பச்சையம்மன் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அருள்மிகு மன்னார்சாமி சமேத பச்சையம்மன் கோவில்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:திருவண்ணாமலை
அமைவிடம்:முனுகப்பட்டு, செய்யாறு வட்டம்[1]
சட்டமன்றத் தொகுதி:ஆரணி
மக்களவைத் தொகுதி:ஆரணி
கோயில் தகவல்
மூலவர்:பச்சையம்மன் அம்மன்
தாயார்:மன்னார்சாமி
வரலாறு
கட்டிய நாள்:பல்லாயிரம் ஆண்டுகளாக வழிபடும் இடமாக இருப்பினும், பத்தொன்பதாம் நூற்றாண்டு கோவில் அமைப்பு கொண்டுவரப்பட்டது. கோவிலை இன்னும் பெரிதாக 8 வருடம் முன் கட்டினார்கள்.

முனுகப்பட்டு மன்னார்சாமி சமேத பச்சையம்மன் கோயில் தமிழ்நாட்டில் திருவண்ணாமலை மாவட்டம், முனுகப்பட்டு என்னும் ஊரில் அமைந்துள்ள அம்மன் கோயிலாகும்.[1]

வரலாறு

[தொகு]

இக்கோயில் ஜமதக்னி முனிவரின் கால் பட்ட இடம். இக்கோவிலில் பில்லி, சூனியம், ஏவல் போன்ற வேலைகள் பலிக்காது. கிராமத்தின் நடுவில் உள்ளதால் சான்று கிடைப்பது அரிது. இக்கோவிலின் மண்ணை எடுத்து பல பச்சையம்மன் கோவில்கள் பிரதிஷ்டை செய்திருக்கிறார்கள். மிக பழமையான குலதெய்வ வழிபாடு உடைய கோவில். அம்மனுக்கு காவலாக இருக்கும் வாமுனி செம்முனியார் தன்னை வணங்கும் அனைவருக்கும் காவலாக இருக்கிறார்.

கோயில் அமைப்பு

[தொகு]

இக்கோயிலில் பச்சையம்மன் அம்மன், மன்னார்சாமி சன்னதிகளும், மன்னார்சாமி. நவகிரகம். உபசன்னதியும் உள்ளன. இக்கோயிலில் மூன்று நிலை கொண்ட ராஜகோபுரம் உள்ளது. இக்கோயில் உப கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. வழக்கு நிலுவையில் இருப்பதால் நடைமுறை நிருவாகியால் நிர்வகிக்கப்படுகிறது.[2]

பூசைகள்

[தொகு]

இக்கோயிலில் காமிகாகம முறைப்படி மூன்று காலப் பூசைகள் நடக்கின்றன. ஆடி மாதம் முக்கிய திருவிழா நடைபெறுகிறது.

ஞாயிற்று கிழமை ,மற்றும் திங்கள் கிழமை காலை முதல் இரவு 7  மணிவரை ஆலயம் திறந்து இருக்கும் .

மற்ற நாட்களில் பிற்பகல் 1 மணி முதல் 4 மணி வரை மூடப்பட்டு இருக்கும்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 1". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 2". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)