மீசின் பக்கி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மீசின் பக்கி
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
கேப்ரிமுல்கசு
இனம்:
கே. மீசி
இருசொற் பெயரீடு
கேப்ரிமுல்கசு மீசி
சாங்கெசுடர் & உரோசந்தால், 2004

மீசின் பக்கி (கேப்ரிமுல்கசு மீசி) என்பது 2004 ஆம் ஆண்டில் புதியதாக விவரிக்கப்பட்டது. இது பக்கி குடும்பத்தின் (கேப்ரிமுல்கிடே) பறவை ஆகும்.

இது இந்தோனேசியாவின் புளோரெசு மற்றும் சும்பா தீவுகளில் காணப்படும் பெரிய வால் கொண்ட பக்கி ஆகும். . உருவவியல் வேறுபாடின்மைக் காரணமாக முன்னர் இது தனிச் சிற்றினமாக அங்கீகரிக்கப்படவில்லை. சான்க்சுடெரும் உரோசெந்தாலும் இதனைக் குரல் அடிப்படையில் விவரித்து தனிச்சிற்றினமாக அறிவித்தனர். இது இந்தோனேசிய சிறு சுண்டாத் தீவுகளில் வசிக்கும் பெரிய வால் கொண்ட பக்கி சிற்றினங்களிலிருந்து நன்கு வேறுபடுகிறது.

லைடனில் உள்ள இயற்கை வரலாற்று அருங்காட்சியகத்தின் முன்னாள் கண்காணிப்பாளரான செருர்லோப் மீசின் நினைவாக இந்த சிற்றினப் பெயர் இடப்பட்டது.

மேற்கோள்கள்[தொகு]

  1. BirdLife International (2016). "Caprimulgus meesi". IUCN Red List of Threatened Species 2016: e.T22732941A95052248. doi:10.2305/IUCN.UK.2016-3.RLTS.T22732941A95052248.en. https://www.iucnredlist.org/species/22732941/95052248. பார்த்த நாள்: 11 November 2021. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=மீசின்_பக்கி&oldid=3616815" இலிருந்து மீள்விக்கப்பட்டது