உள்ளடக்கத்துக்குச் செல்

பெரிய வால் பக்கி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பெரிய வால் பக்கி
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
கேப்ரிமுல்கசு
இனம்:
கே. மேக்ருருசு
இருசொற் பெயரீடு
கேப்ரிமுல்கசு மேக்ருருசு
கார்சூபீல்டு, 1821

பெரிய வால் பக்கி (Large-tailed nightjar)(கேப்ரிமுல்கசு மேக்ருருசு) என்பது பக்கி குருவி வகைகளுள் கேப்ரிமுல்கிடே சிற்றினங்களுள் ஒன்றாகும். இது தெற்கு இமயமலை அடிவாரம், தெற்கு ஆசியா, தென்கிழக்காசியா மற்றும் வடக்கு ஆத்திரேலியாவில் காணப்படுகிறது. இந்த இனம் ஆத்திரேலியா, வங்காளதேசம், பூடான், புரூணை, கம்போடியா, சீனா, இந்தியா, இந்தோனேசியா, லாவோஸ், மலேசியா, மியான்மர், நேபாளம், பாக்கித்தான், பப்புவா நியூ கினி, பிலிப்பீன்சு, சிங்கப்பூர், தாய்லாந்து, கிழக்கு திமோர் மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகளில் வசிப்பதாகும்.[1] இதன் இயற்கையான வாழிடங்கள் மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டல ஈரமான தாழ் நில காடுகள், மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டல சதுப்புநில காடுகள் மற்றும் மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டல ஈரமான மலைக் காடுகள் ஆகும்.

மலேசியாவில் இரவுநேரங்களில் இடுகாடுகளில் இருப்பதாக அறியப்படுகிறது. எனவே இதன் பொதுவான பெயர் புருங் டுகாங் குபுர் ("சாவு குருவி)[1] தோன்றியதாகும்.

படங்கள்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 BirdLife International (2016). "Caprimulgus macrurus". IUCN Red List of Threatened Species 2016: e.T22725708A94900378. doi:10.2305/IUCN.UK.2016-3.RLTS.T22725708A94900378.en. https://www.iucnredlist.org/species/22725708/94900378. பார்த்த நாள்: 15 November 2021. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=பெரிய_வால்_பக்கி&oldid=3320135" இலிருந்து மீள்விக்கப்பட்டது