மிலேட்டசின் இப்போடமஸ்
மிலேட்டசின் இப்போடமஸ் (Hippodamus of Miletus (/hɪˈpɒdəməs/; கிரேக்க மொழி: Ἱππόδαμος ὁ Μιλήσιος, Hippodamos ho Milesios; 498 – கி.மு. 408) என்பவர் ஒரு பண்டைய கிரேக்க கட்டடக் கலைஞர், நகர்ப்புற திட்ட வடிவமைப்பாளர், மருத்துவர், கணிதவியலாளர், வானியலாளர், மெய்யியலாளர் ஆவார். இவர் "ஐரோப்பிய நகரத் திட்டமிடலின் தந்தை" எனக் கருதப்படுகிறார். மேலும் நகர தளக்கோலம் "இப்போடாமியன் வரைபடம்" ( நகர அமைப்பு ) என்ற பெயரால் அழைக்கப்படுகிறது.
இப்போடமஸ் மிலேட்டசில் பிறந்தார் மற்றும் கிமு 5 ஆம் நூற்றாண்டில், பண்டைய கிரேக்க பாரம்பரிய சகாப்தத்தின் பொற் காலத்தில் வாழ்ந்தார். இவரது தந்தை யூரிஃபோன் என்பவராவார். அரிஸ்டாட்டிலின் கூற்றுப்படி, அரசியலில் நேரடியான அனுபவம் இல்லாமல், அரசாங்கத்தின் கோட்பாட்டை எழுதிய முதல் எழுத்தாளர் ஹிப்போடமஸ் ஆவார். [1]
இவரது கிரேக்க நகரங்களுக்கான வடிவமைப்பு திட்டங்கள் ஏதென்ஸ் நகரத்தில் கூட பொதுவான சிக்கலான, குழப்பமான பகுதிகள் ஒழுங்குமுறையால் சீரமைக்கப்பட்டு வகைப்படுத்தப்பட்டது.
ஆளுமை
[தொகு]அரிசுட்டாட்டில், இசுட்ராபோ, ஸ்டோபேயஸ், ஹெசிசியஸ், போட்டியஸ், தியானோ ஆகியோரின் படைப்புகளில் இவர் குறிப்பிடப்படுகிறார்.
இவர் தன்னை எல்லோரும் கவனிக்க வேண்டும் என்ற ஆசை கொண்டு அதன்படி நடந்து கொண்டவர். இவர் குறித்து அரிசுட்டாட்டில் தன் அரசியல் என்ற நூலில், "நீண்ட முடியை வளர்த்தவராகவும், விலை உயர்ந்த ஆபரணங்களை அணிந்திருந்தார். இதனால் இவரை நிரம்ப பகட்டானவர் என்று எல்லோரும் நினைத்தனர். ஆயினும் இவர் விலை மலிவான, ஆனால் வெப்பம்தரும் சாதாரண உடைகளையே கோடைக் காலத்திலும், குளிர்காலத்திலும் அணிந்துவந்தார்." என்றார். [2]
சாதனைகள்
[தொகு]"சிறந்த நாடு"
[தொகு]அரிஸ்டாட்டில் ( அரசியலில் ii.8) படி, இப்போடமஸ் நகரத் திட்டமிடலின் முன்னோடியாக இருந்தார். மேலும் இவர் 10,000 ஆடவர் [2] (சுதந்திரமான ஆண் குடிமக்கள்) வசிக்கும் ஒரு சிறந்த நகரத்தை வடிவமைத்தார். அதே நேரத்தில் ஒட்டுமொத்த மக்கள் தொகை (பெண்கள், குழந்தைகள், அடிமைகள் உட்பட) 50,000 ஐ எட்டும். இவர் நகரங்களின் நடைமுறைச் சிக்கல்களை ஆய்வு செய்து அவற்றை அரசு நிர்வாக அமைப்புடன் இணைத்தார். இதன் விளைவாக, இவர் குடிமக்களை மூன்று வகைகளாகப் பிரித்தார் (போர்வீரர்கள், கைவினைஞர்கள், 'உழவர்கள்'), நிலத்தையும் மூன்றாகப் பிரித்தார் (புனிதமானது, பொதுப் பயன்பாட்டுக்கானது, தனியார்).
அரிஸ்டாட்டில் தன் எழுத்துகளில், ஹிப்போடமஸின் "சிறந்த நாடு" என்ற திட்டத்தை விமர்ச்சித்தார். இத்திட்டமானது ஒரு வகுப்பார் மட்டும் ஆயுதங்களை ஏந்துவதை ஏகபோகமாக்ககியது. இது "வேளாண் மக்கள்" மற்றும் "தொழிலாளர்கள்" ஆயுதம் தாங்கும் வர்க்கத்தால் ஒடுக்கப்படுவதற்கு வழிவகுக்கும் என்று வாதிட்டார். [3] அரிஸ்டாட்டிலின் சொந்த அரசியல் கருத்தாக்கமானது ஒரு பெரிய நடுத்தர வர்க்கத்தை உள்ளடக்கியது, அதில் ஒவ்வொரு குடிமகனும் சுய சட்டம், ஆயுதம் தாங்குதல், வேலை செய்தல் ஆகிய மூன்று செயல்பாடுகளையும் நிறைவேற்றினர். [3]
நகர்ப்புற திட்டமிடல்
[தொகு]அரிஸ்டாட்டிலின் கூற்றுப்படி, இவர் நகர நிர்மாண திடங்களில் கவனம் செலுத்திய முதல் நகர்ப்புற திட்டமிடு வல்லுநர். இவர் ஏதென்சின் துறைமுகப் பகுதியான பீரேயாசை ஒழுக்குபடுத்தி சீரமைப்பதற்கு வரைபடத்தை தயாரித்துக் கொடுத்தார்.
குறிப்புகள்
[தொகு]- ↑ Lytton, Edward Bulwer Lytton, Baron (1847). Athens, its rise and fall : with views of the literature, philosophy, and social life of the Athenian people. p. 144.
{{cite book}}
: CS1 maint: multiple names: authors list (link) - ↑ 2.0 2.1 Aristotle, Politics 2.1267b
- ↑ 3.0 3.1 Halbrook, Stephen P. (1984). That Every Man Be Armed: the evolution of a Constitutional Right. University of New Mexico Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-945999-28-3.