மிருணாளினி தேவி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மிருணாளினி தேவி
மிருணாளினி தேவி
பிறப்புபாபதாரினி ராய் சவுத்ரி
1 மார்ச்சு 1874
தக்சிந்திகி, வங்காள மாகாணம், இந்தியா
இறப்பு23 நவம்பர் 1902 (வயது 28)
தாகூர் மாளிகை, ஜோரசங்கோ, வங்காளம், இந்தியா
தேசியம்இந்தியர்
வாழ்க்கைத்
துணை
பிள்ளைகள்5, இரதிந்திரநாத் தாகூர் உட்பட

மிருணாளினி தேவி (Mrinalini Devi-1 மார்ச் 1874[1][2]-23 நவம்பர் 1902) ஒரு மொழிபெயர்ப்பாளர் மற்றும் நோபல் பரிசு பெற்ற கவிஞர், தத்துவவாதி, எழுத்தாளர் மற்றும் இசைக்கலைஞர் இரவீந்திரநாத் தாகூரின் மனைவி ஆவார். இவர் ஜெஸ்சூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர். இங்கு இவருடைய தந்தை தாகூர் தோட்டத்தில் பணிபுரிந்தார்.[3] 1883ஆம் ஆண்டு ஒன்பது வயதில் தாகூரை மணந்தார்.

இளமை[தொகு]

மிருணாளினி தேவி, பிரித்தானிய இந்தியாவில் (தற்போது வங்காளதேசத்தின் குல்னாவில்) அப்போதைய வங்காள மாகாணத்தின் ஜெஸ்சூரில் உள்ள புல்தாலா கிராமத்தில் பெனிமதோப் ராய் சவுத்ரி மற்றும் தாக்ஷயோனி ஆகியோருக்கு மகளாகப் பிறந்தார். இவர் பிறந்த தேதி சரியாகத் தெரியவில்லை. ஒரு வாழ்க்கை வரலாற்றாசிரியரின் மதிப்பீட்டின்படி, இவர் 1 மார்ச் 1874[4] பிறந்தார் என்றும் மற்றொருவர் 1872-இல் பிறந்தார் என்றும் தெரிவிக்கின்றார்.[1] திருமணத்திற்கு முன்பு மிருணாளினி தேவி பாபதாரிணி என்று அழைக்கப்பட்டார். இருப்பினும், இது இவரது முறையான பெயரா அல்லது புனைபெயரா என்பது தெரியவில்லை. உள்ளூர் கிராமப் பள்ளியில் முதலாம் வகுப்பு வரை படித்தார்.[4] இவரது தந்தை தாகூர் தோட்டத்தில் பணிபுரிந்தார்.[3]

திருமணம்[தொகு]

இரவீந்திரநாத் தாகூருடன் மிருணாளினி தேவி, c. 1883

இரவீந்திரநாத் தாகூரின் மூத்த சகோதரர் ஜோதிரிந்திரநாத் தாகூர், இவருடைய மைத்துனர்கள் ஞானதானந்தினி தேவி மற்றும் காதம்பரி தேவி மற்றும் இரவீந்திரநாத்தின் மருமகன் சுரேந்திரநாத் தாகூர் ஆகியோரால் மணமகன் குடும்ப உறுப்பினர்கள் ஒரு சடங்கான பக தேகா . இரவீந்திரநாத் தனது குடும்ப உறுப்பினர்களுடன் ஜஷோரிலிருந்து மிருணாளினி தேவியின் வீட்டிற்குச் சென்றார் என்பது தெரிந்தாலும், அவர் திருமணச் சடங்கில் பங்கேற்றாரா என்பது தெரியவில்லை.[4][5]

மணமகளின் வீட்டில் நடக்கும் பாரம்பரியத் திருமணத்தைப் போலன்றி, மிருணாளினி தேவி, இரவீந்திரநாத்தின் தந்தை தேவேந்திரநாத் தாகூரின் விருப்பப்படி கொல்கத்தாவில் ஜோராசங்கோ தாக்கூர் பாரியில் உள்ள மகரிசி பவனில் இரவீந்திரநாத் தாகூரை மணந்தார். பிரம்ம சமாஜ முறைப்படி இத்திருமணம் நடந்தது. திருமணத்தின் போது இவருக்கு 9 வயது. தாகூருக்கு இருபத்தி இரண்டு வயது. இவர்கள் 24 மார்கழி 1290-இல் திருமணம் செய்து கொண்டனர், இது கிரிகோரியன் நாட்காட்டியின்படி சுமார் 9 திசம்பர் 1883 ஆகும்.[4][3]

திருமணத்திற்குப் பிறகு, இரவீந்திரநாத் இவருக்கு "மிருணாளினி" என்று பெயர் வைத்தார். தாகூர் வாழ்க்கை வரலாற்றாசிரியர்கள் இந்தப் பெயர் "நளினி" உடன் ரைம் செய்ய வடிவமைக்கப்பட்டுள்ளது என்று கருதுகின்றனர். இந்தப் பெயரை இவர் அன்புடன் அன்னபூர்ணா துர்காத் (ஆத்மாராம் பாண்டுரங்கின் மகள்) என்று அழைத்தார்.[4][3][6]

மிருணாளினி தேவி திருமணமான உடனேயே வீட்டு வேலைகளைச் செய்யக் கட்டாயப்படுத்தவில்லை. தேவேந்திரநாத் அவளையும் ஹேமேந்திரநாத் தாகூரின் மனைவி க்ஷிநாதனுவையும் லொரேட்டோ ஹவுஸ் பள்ளியில் அவர்களுக்கு ஆங்கிலம் கற்பிக்க அனுமதித்தார். இவர்களுக்குப் புத்தகங்கள், சிலேட்டுகள் மற்றும் பள்ளி சீருடைகளையும் வாங்கிக் கொடுத்தார். ஒரு வருடம் பள்ளியில் படித்த பிறகு, இரவீந்திரநாத் அவருக்கு சமசுகிருதம் கற்பிக்க பண்டிட் ஹேரம்பச்சந்திர பித்யரத்னாவை வீட்டு ஆசிரியராக நியமித்தார். இவரது மூத்த சகோதரர் பிரேந்திரநாத்தின் மகன் பாலேந்திரநாத் அவளுக்கு ஆங்கிலம், பெங்காலி மற்றும் சமசுகிருத இலக்கியங்களைக் கற்றுக் கொடுத்தார். மார்க் டுவெய்ன் இவருக்குப் பிடித்த எழுத்தாளர் ஆனார்.[4] இவரது இளைய மகள் மீராவின் நாட்குறிப்பின் படி, ஒரு சம்பவத்தினைப் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்:

சாந்திநிகேதனின் இரண்டாவது மாடி வராண்டாவில் மேஜை விளக்கு எரிகிறது. அம்மா கையில் ஒரு ஆங்கில நாவல் இருக்கிறது. அவள் அதைப் படித்து என் பாட்டிக்கு மொழிபெயர்த்து வருகிறாள்.[4]

மகாபாரதம் மற்றும் கதா உபநிஷத்தின் சாந்தி பர்வத்தை மிருணாளினி தேவி மொழிபெயர்த்தார். கதா உபநிஷத் தற்போது விஸ்வபாரதி பல்கலைக்கழகத்தில் பாடத்திட்டத்தில் வைக்கப்பட்டுள்ளது. இவை தவிர, தாக்கூர் பாரியில் நடந்த நாடகங்களிலும் பங்கேற்றார். ராஜா ஓ ராணியின் முதல் நாடகத்தில், இவர் நாராயணி வேடத்தில் நடித்தார்.[4]

1902-இல், இரவீந்திரநாத் சாந்திநிகேதனில் பிரம்மச்சரிய ஆசிரமம் என்ற பள்ளியை நிறுவினார். இந்தப் பள்ளிக்கு நிதியளிக்க மிருணாளினி தேவி தனது திருமண நகைகளில் பெரும்பாலானவற்றை விற்றார்.[4][7]

குழந்தைகள்[தொகு]

1886ஆம் ஆண்டு அக்டோபர் 25ஆம் தேதி, மிருணாளினி தேவி தனது முதல் குழந்தையைப் பெற்றெடுத்தார். மாதுரிலதா என்ற மகளுக்குப் பேலா என்று செல்லப்பெயர் சூட்டப்பட்டார்.[4] 1888-இல், இவர் இரதிந்திரநாத் என்ற மகனைப் பெற்றெடுத்தார். 1891-இல், இவர் ரேணுகா என்ற மகளைப் பெற்றெடுத்தார். மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, இவர் மீரா என்ற மற்றொரு மகளைப் பெற்றெடுத்தார். 1896-இல், இவரது இளைய குழந்தை சமீந்திரநாத் பிறந்தார்.[4]

இறப்பு[தொகு]

1902ஆம் ஆண்டின் நடுப்பகுதியில், மிருணாளினி தேவி கடுமையாக நோய்வாய்ப்பட்டார். அதன்பிறகு, இவரும் இரவீந்திரநாத்தும் செப்டம்பர் 12 அன்று சாந்திநிகேதனிலிருந்து கொல்கத்தாவுக்குச் சென்றனர். இவரது நோயைக் கண்டறிய மருத்துவர்கள் தவறியதால், நவம்பர் 23ஆம் தேதி இரவு இவர் உயிரிழந்தார்.[4]

பண்பு[தொகு]

சமகாலப் பதிவுகளின்படி, மிருணாளினி தேவி சிறந்த ஆளுமை கொண்ட பெண்ணாகக் கருதப்படுகிறார்.[4]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 Stephanie Olsen (6 October 2015). Childhood, Youth and Emotions in Modern History: National, Colonial and Global Perspectives. Palgrave Macmillan UK. பக். 287. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-137-48484-0. https://books.google.com/books?id=YBzeCgAAQBAJ&pg=PT287. 
  2. Accessions List, India. Library of Congress Office.. 1975. https://books.google.com/books?id=mrjvtxPZrEEC&q=Mrinalini+Devi+1874. 
  3. 3.0 3.1 3.2 3.3 (in bn). Dainik Janakantha. 27 January 2017 இம் மூலத்தில் இருந்து 31 May 2019 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20190531185823/http://web.dailyjanakantha.com/details/article/245353/%25E0%25A6%25B0%25E0%25A6%25AC%25E0%25A7%2580%25E0%25A6%25A8%25E0%25A7%258D%25E0%25A6%25A6%25E0%25A7%258D%25E0%25A6%25B0%25E0%25A6%25A8%25E0%25A6%25BE%25E0%25A6%25A5%25E0%25A7%2587%25E0%25A6%25B0-%25E0%25A6%259C%25E0%25A7%2580%25E0%25A6%25AC%25E0%25A6%25A8%25E0%25A7%2587-%25E0%25A6%25AE%25E0%25A7%2583%25E0%25A6%25A3%25E0%25A6%25BE%25E0%25A6%25B2%25E0%25A6%25BF%25E0%25A6%25A8%25E0%25A7%2580/. 
  4. 4.00 4.01 4.02 4.03 4.04 4.05 4.06 4.07 4.08 4.09 4.10 4.11 4.12 মৃণালিনী [Mrinalini] (in Bengali). Anandabazar Patrika. 22 October 2016. Archived from the original on 31 May 2019. பார்க்கப்பட்ட நாள் 31 May 2019.
  5. (in bn). Rising BD. 10 September 2015 இம் மூலத்தில் இருந்து 31 May 2019 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20190531185821/http://www.risingbd.com/art-literature-news/124244. 
  6. "Who Was 'Nalini', The Marathi Girl Rabindranath Tagore Once Fell in Love With". The Better India (in அமெரிக்க ஆங்கிலம்). 2018-07-05. பார்க்கப்பட்ட நாள் 2019-07-30.
  7. পাতা:চিঠিপত্র (প্রথম খণ্ড)-রবীন্দ্রনাথ ঠাকুর.pdf/২০১ - উইকিসংকলন একটি মুক্ত পাঠাগার. bn.wikisource.org (in Bengali). பார்க்கப்பட்ட நாள் 2019-07-30.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மிருணாளினி_தேவி&oldid=3903495" இலிருந்து மீள்விக்கப்பட்டது