ஆத்ம ராம பாண்டுரங்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஆத்மராம பாண்டுரங்

ஆத்மராம பாண்டுரங் (Atmaram Pandurang) அல்லது ஆத்மராம பாண்டூரங் துர்காதேகர் (Atmaram Pandurang Turkhadekar) என்பவர் 1823-1898 ஆம் ஆண்டு காலத்தில் வாழ்ந்த ஓர் இந்திய மருத்துவர் மற்றும் சமூக சீர்திருத்தவாதி ஆவார். ஆங்கிலப் புத்தகங்கள் இவரது பெயரை சுருக்கமாக துர்காத் என்று குறிப்பிடுகின்றன [1]. இவரும் பம்பாய் இயற்கை வரலாற்று சங்கத்தைச் சேர்ந்த சாகாராம் அர்ச்சூன் என்பவரும் சேர்ந்து பிரார்தன சமாச்யத்தை நிறுவினார்கள் [2]. இவர் கிராண்டு மருத்துவக் கல்லூரியில் பட்டப்படிப்பை முடித்தார். மராத்தி மற்றும் சமசுகிருதம் என்ற இருமொழிகளிலும் பண்டிதரான தாதோபா பண்டுரங் (18 மே 1814-17 அக்டோபர் 1882) ஆத்மராம பாண்டுரங்ஙின் சகோதரராவார். 1879 ஆம் ஆண்டில் பம்பாய் மாநகர செரிப்பாக ஆத்ம ராம பாண்டூரங் சிறிது காலம் பணியாற்றினார் [3].

பாண்டுரங் யேசுவந்த் மற்றும் யசோதாபாய் ஆகியோருக்கு மகனாக ஆத்மராம் பாண்டுரங் பிறந்தார். புதிதாக திறக்கப்பட்ட கிராண்டு மருத்துவக் கல்லூரியில் படித்தார். மருத்துவர் பாகு தாயி லேடு உள்ளிட்டோர் இக்கல்லூரியில் படித்த முதல் தொகுதி மாணவர்களாவர். ஒரு பட்டயப் படிப்பை முடித்த இவர் பிவாண்டியில் பணிபுரிந்தார். பெரியம்மை தடுப்பூசியின் அவசியம் குறித்த பிரச்சார இயக்கம் ஒன்றையும் இவர் நடத்தினார். பின்னாளில் 1868 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட அரசியலமைப்பு 14 தொற்று நோய் சட்டத்தை இயற்றுவதற்கு உதவினார். புகழ்பெற்ற மகாராச் அவதூறு வழக்கில் இவர் முக்கிய சாட்சியாக இருந்தார். வாதியானவர் பால்வினை நோயால் பாதிக்கப்பட்டிருந்தார் என்பதற்கான ஆதாரங்களை இவ்வழக்கில் முன்வைத்தார் [4]. ஆத்மரம் பாண்டுரங் ஒரு தத்துவ சீர்திருத்தவாதியாகச் செயற்பட்டார், குழந்தை திருமணம் உட்பட பல இந்து மரபுகளை எதிர்த்தார். சிறுமிகளின் திருமணத்திற்கான குறைந்தபட்ச வயது இருபதாக இருக்க வேண்டும் என்று அவர் நம்பினார் [5]. 31 மார்ச் 1867 அன்று பிரார்த்தனா சமாச்யம் இவரது வீட்டில் நிறுவப்பட்டது. கேசப் சந்திர சென் அவர்களின் கருத்துகளால் இவர் ஈர்க்கப்பட்டார். சாதி முறையை பகிரங்கமாக கண்டனம் செய்தல், விதவை-மறுமணம் அறிமுகப்படுத்துதல், பெண் கல்வியை ஊக்குவித்தல் மற்றும் குழந்தை திருமணத்தை ஒழித்தல் ஆகியவை சமாச்யம் தொடங்கப்பட்ட நேரத்தில் அதன் கொள்கைகளாக இருந்தன. பந்தர்கார் இலவச நூலகத்தை உருவாக்குவதற்கும் இவர் உதவினார் [6]. 1879 இல் பம்பாய் மாநகர செரீப்பாக தேர்ந்தெடுக்கப்பட்டார் [7].

பாண்டுரங் மிகவும் படித்த குடும்பத்தைச் சேர்ந்தவர் ஆவார். நாடு முழுவதும் அக்காலத்தில் இருந்த சீர்திருத்தவாதிகள் இவரது நட்பு வட்டத்திற்குள் அறிமுகம் ஆகியிருந்தனர், 1878 ஆம் ஆண்டில் இரவீந்திரநாத் தாகூர் இங்கிலாந்திற்குச் செல்ல பம்பாய் வந்தபோது, இவருடைய இல்லத்தில் தங்கினார். பாண்டூராங்கின் இரண்டாவது மகளான அன்னபூர்ணா அல்லது அனாவின் உதவியுடன் ஆங்கிலத்தை மேம்படுத்திக் கொண்டார். அவர்கள் இருவரும் ஒருவருக்கொருவர் ஈர்க்கப்பட்டனர். தாகூர் தனது கவிதைகள் பலவற்றை இவர் நினைவாக எழுதினார் (அவர் அவரை "நளினி" என்று குறிப்பிட்டார்). இருப்பினும் அனா பரோடாவில் வரலாற்று மற்றும் ஆங்கில இலக்கியத்தின் பேராசிரியராக இருந்த எரால்டு லிட்டில்டேலை திருமணம் செய்து கொண்டார்.

அனாவின் மூத்த சகோதரர் மொரேசுவார் ஆத்மராம் செய்முறை வேதியியல் துறையில் தங்கப்பதக்கம் பெற்றார். 1867 ஆம் ஆண்டில் லண்டன் பல்கலைக்கழக கல்லூரியில் கணித மற்றும் புவியியலில் புவியியல் பிரிவுகளில் சிறப்புநிலையைப் பெற்றார். பரோடாவில் உள்ள ராச்குமார் கல்லூரியின் முதுகெலும்பாக செயலாற்றினார் [8]. மற்றொரு மகள் மானெக் துர்கத் 1892 ஆம் ஆண்டில் பம்பாயில் மருத்துவம் மற்றும் அறுவை சிகிச்சைக்கான உரிமத்தைப் பெற்றார். அதே வருடத்தில் தாதாபாய் நௌரேச்யின் மகள் மேனெக்காயும் அதே தேர்வில் பெற்றார் [9][10]. 1862 இல் பிறந்த மற்றொரு மகன் தினையேசுவர் ஆத்மரம் துர்கத் கிராண்டு மருத்துவக் கல்லூரியிலும், எடின்பர்க் பல்கலைக்கழகத்திலும் 1890-91 வரை படித்தார். அவர் ஆஃப்கைன் நிறுவனத்திலும் கிண்டியில் உள்ள கிங் தடுப்பு மருந்துகள் நிறுவனத்தின் இயக்குநராகவும் பணியாற்றினார். அனோபிலிசு கொசுக்கள் குறித்த ஆய்வுக்காக கொடைக்கானலிலும் பணியாற்றினார் [11].


மேற்கோள்கள் [தொகு]

 1. Report of Annual Meeting of Ramabai Association. 11 March, 1890. Ramabai Association. 1890. https://archive.org/stream/reportofannualme1890rama#page/n7/mode/2up/. 
 2. Millard W. S. (1932). "The founders of the Bombay Natural History Society.". Journal of the Bombay Natural History Society 35. No. 1 & 2: 196–197. https://archive.org/stream/journalofbomb35121931bomb#page/196/mode/2up. 
 3. Ramanna, Mridula (2002). Western Medicine and Public Health in Colonial Bombay, 1845-1895. Orient Blackswan. பக். 46. 
 4. Reuben, Rachel (2005). "The Indian Founders". Hornbill (April–June): 13–15. 
 5. Gidumal, Dayaram (1889). The status of woman in India. Bombay: Fort Printing Press. பக். 245–251. https://archive.org/stream/cu31924023088796#page/n363/mode/2up/. 
 6. Sastri, Sivanath (1912). A history of the Brahmo Samaj. 2. Calcutta: R Chatterjee. பக். 412, 432. https://archive.org/stream/in.ernet.dli.2015.237162/2015.237162.History-Of#page/n427/mode/2up. 
 7. Directory Of Bombay City Province 1939. பக். 86. 
 8. "Latest Telegrams". The Express and Telegraph: p. 2. 24 October 1867. http://trove.nla.gov.au/newspaper/article/207673248. 
 9. "Foreign Notes. India". The Englishwoman's Review of Social and Industrial Questions 24: 72. 1893. https://archive.org/stream/englishwomansrev24newy#page/72/mode/1up/. 
 10. Ramanna, Mridula (2012). Health Care in Bombay Presidency, 1896-1930. Primus Books. பக். 139. 
 11. Gupta, Uma Das, தொகுப்பாசிரியர் (2010). Science and Modern India: An Institutional History, c.1784-1947: Project of History of Science, Philosophy and Culture in Indian Civilization, Volume XV, Part 4. Pearson Education India. பக். 587. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆத்ம_ராம_பாண்டுரங்&oldid=2784502" இருந்து மீள்விக்கப்பட்டது