குல்னா மாவட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வங்கதேசத்தில் குல்னா மாவட்டத்தின் அமைவிடம்

குல்னா மாவட்டம் (Khulna District, வங்காள மொழி: খুলনা জেলা) வங்காளதேசம் நாட்டின் மாவட்டங்களுள் ஒன்று. இம்மாவட்டத்தின் தலைநகர் குல்னா ஆகும். இம்மாவட்டம் குல்னா கோட்டத்தில் (Khulna Division) அமைந்துள்ளது. இம்மாவட்டத்தின் மொத்தப் பரப்பளவு 4394.46 சதுர கிலோமீட்டர்கள் ஆகும். இதன் எல்லைகளாக ஜெஸ்சூர் மாவட்டம், நராய்ல் மாவட்டம், பேகர்காட் மாவட்டம், சத்கீரா மாவட்டம் ஆகிய மாவட்டங்கள் அமைந்துள்ளன. இம்மாவட்டத்தில் உள்ளோரில் 58.71% பேர் கல்வியறிவு பெற்றுள்ளனர்.[1]

வரலாறு[தொகு]

இம்மாவட்டம் வங்காளதேசத்தின் மூன்றாவது பெரிய மாவட்டம் ஆகும். குல்னா என்ற பெயர் இந்துக் கடவுளான குல்னேஸ்வரி என்ற பெயரிலிருந்து வந்தது. 1947 ஆம் ஆண்டின் கணக்கின்படி இம்மாவட்டதின் மக்கள் தொகையில் இந்துக்கள் 52% பெரும்பான்மையினராக இருந்தனர். தற்போது முஸ்லீம்கள் 80% மக்கட்தொகையுடன் பெரும்பான்மையினராக உள்ளனர்.

மதம்[தொகு]

குல்னா மக்களின் மதம்
மதம் சதவீதம்
இசுலாம்
73.45%
இந்து
25.28%
கிறித்தவம்
0.67%
பௌத்தம்
1.25%

வழிபாட்டிடங்கள்[தொகு]

இம்மாவட்டத்தில்,

உள்ளன.

மேற்கோள்கள்[தொகு]

  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". 2014-07-07 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2013-12-27 அன்று பார்க்கப்பட்டது.
"https://ta.wikipedia.org/w/index.php?title=குல்னா_மாவட்டம்&oldid=3550761" இருந்து மீள்விக்கப்பட்டது