பேகர்காட் மாவட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search


வங்காளதேசத்தில் பேகர்காட் மாவட்டத்தின் அமைவிடம்

பேகர்காட் மாவட்டம் (வங்காள: বাগেরহাট জেলা) தெற்காசியாவின் வங்காளதேச நாட்டின் அறுபத்தி நான்கு மாவட்டங்களில் ஒன்றாகும். இம்மாவட்டம் குல்னா கோட்டத்தில் அமைந்துள்ளது. வங்காளதேசத்தின் தெற்கில் அமைந்த இம்மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் பேகர்காட் நகரம் ஆகும்.[1]இம்மாவட்டத்தில் கங்கை ஆறும் - பிரம்மபுத்திரா ஆறும் ஒன்று கூடுகிறது.

மாவட்ட எல்லைகள்[தொகு]

பேகர்காட் மாவட்டத்தின் வடக்கில் பரித்பூர் மாவட்டமும், தெற்கில் வங்காள விரிகுடாவும், கிழக்கில் பிராஜ்பூர், பர்குனா மற்றும் கோபால் கஞ்ச் மாவட்டத்தின் சில பகுதிகளும், மேற்கில் குல்னா மாவட்டமும் எல்லைகளாக உள்ளது.

மாவட்ட நிர்வாகம்[தொகு]

3959.11 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட பேகர்காட் மாவட்டத்தை நிர்வாக வசதிக்காக பேகர்காட் சதர், மொல்லர்காட், பக்கிர்காட், மங்களா, கச்சுவா, ராம்பால், சரண்கோலா, மொரல்கஞ்ச் மற்றும் சித்தல்மரி என ஒன்பது துணை மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது.

இம்மாவட்டம் மூன்று நகராட்சி மன்றங்களையும், எழுபத்தி ஆறு கிராம ஒன்றியக் குழுக்களையும், 697 வருவாய் கிராமங்களையும், 1048 கிராமங்களையும் கொண்டுள்ளது. இம்மாவட்டத்தின் அஞ்சல் சுட்டு எண் 9300 ஆகும். தொலைபேசி குறியிடு எண் 0468 ஆகும். இம்மாவட்டம் நான்கு நாடாளுமன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது.

பொருளாதாரம்[தொகு]

இம்மாவட்டத்தின் பொருளாதாரம் வேளாண்மையைச் சார்ந்து உள்ளது. இம்மாவட்டத்தில் மங்களா ஆறு, மதுமதி ஆறு, சீலா ஆறு, ஹரிக்கதா ஆறு, பேலேஷ்வரி ஆறு, பதுரியா ஆறு, பங்க்ரா ஆறு, தரதானா ஆறு, பன்குச்சி ஆறு, பஸ்குர் ஆறு முதலிய ஆறுகள் பாய்வதால் நீர் வளமும், மண் வளமும் மிக்கதாக உள்ளது.

எனவே இம்மாவட்டத்தில் நெல், சணல், வாழை, தென்னை, வெற்றிலை, பாக்கு, உருளைக்கிழங்கு, காய்கறிகள் முதலியன பயிரிடப்படுகிறது.[2] இரால் மீன்கள் இம்மாவட்டத்திலிருந்து அதிகமாக வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாகிறது.

வங்காள தேசத்தின் இரண்டு முக்கிய துறைமுகங்களில் ஒன்றான மங்களா துறைமுகம் இம்மாவட்டத்தில் உள்ளது.

மக்கள் தொகையியல்[தொகு]

3959.11 சதுர கிலோ மீட்டர் பரப்பு கொண்ட இம்மாவட்டத்தின் 2011-ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி (இறுதி முடிவு அறிவிக்கப்படவில்லை) மக்கள் தொகை 14,76,090 ஆக உள்ளது. அதில் ஆண்கள் 7,40,138 ஆகவும், பெண்கள் 7,35,952 ஆகவும் உள்ளனர். ஆண்டு மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் -0.47 % ஆக உள்ளது. பாலின விகிதம் 101 ஆண்களுக்கு 100 பெண்கள் வீதம் உள்ளனர். மக்கள் தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் 373 நபர்கள் வீதம் வாழ்கின்றனர். மாவட்ட சராசரி எழுத்தறிவு 59.0 % ஆக உள்ளது.[3]இம்மாவட்டத்தின் பெரும்பாலான மக்கள் இசுலாமிய சமயத்தைப் பின்பற்றுபவர்களாகவும், வங்காள மொழியைப் பேசுபவர்களாகவும் உள்ளனர்.

கல்வி[தொகு]

வங்காளதேசத்தின் பிற மாவட்டங்களைப் போன்று, இம்மாவட்டத்திலும் நான்கு படிகள் கொண்ட கல்வி அமைப்பு உள்ளது. அவைகள்: ஐந்தாண்டு படிப்புகள் கொண்ட தொடக்கப் பள்ளிகளும் (கிரேடு 1 – 5), ஐந்தாண்டு படிப்புகள் கொண்ட இடைநிலைப் பள்ளிகளும் (கிரேடு 6 – 10), இரண்டாண்டு படிப்பு கொண்ட மேனிலைப் பள்ளிகளும் (கிரேடு 11 – 12), நான்கு ஆண்டு படிப்பு கொண்ட இளநிலை பட்டப் படிப்பு மற்றும் ஒராண்டு கால முதுநிலை பட்டப் படிப்பு கொண்ட பல்கலைக்கழகங்களும், கல்லூரிகளும் உள்ளது. வங்காள மொழியுடன், ஆங்கில மொழியும் அனைத்து நிலைகளிலும் கற்பிக்கப்படுகிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. Kamal, HM Khaled (2012). "Bagerhat District". in Sirajul Islam; Jamal, Ahmed A.. Banglapedia: National Encyclopedia of Bangladesh (Second ). Asiatic Society of Bangladesh. http://en.banglapedia.org/index.php?title=Bagerhat_District. 
  2. Bagerhat District Information
  3. [ http://203.112.218.66/WebTestApplication/userfiles/Image/Census2011/Khulna/Bagerhat/Bagerhat%20at%20a%20glance.pdf Community Report Bagerhat Zila June 2012 ]

வெளி இணைப்புகள்[தொகு]

22°40′00″N 89°48′00″E / 22.66667°N 89.80000°E / 22.66667; 89.80000ஆள்கூற்று: 22°40′00″N 89°48′00″E / 22.66667°N 89.80000°E / 22.66667; 89.80000

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேகர்காட்_மாவட்டம்&oldid=2177681" இருந்து மீள்விக்கப்பட்டது