உள்ளடக்கத்துக்குச் செல்

சத்கீரா மாவட்டம்

ஆள்கூறுகள்: 22°21′N 89°05′E / 22.35°N 89.08°E / 22.35; 89.08
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வங்காளதேசத்தில் சத்கீரா மாவட்டத்தின் அமைவிடம்

சத்கீரா மாவட்டம் (Satkhira District) (வங்காள மொழி: সাতক্ষীরা জেলা, தெற்காசியாவின் வங்காளதேச நாட்டின் அறுபத்தி நான்கு மாவட்டங்களில் ஒன்றாகும். இம்மாவட்டம் குல்னா கோட்டத்தில் அமைந்துள்ளது. வங்காளதேசத்தின் தென்மேற்கில் அர்பங்கச்சியா ஆற்றின் கரையில் அமைந்த இம்மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் சத்கீரா நகரத்தில் அமைந்துள்ளது.

மாவட்ட எல்லைகள்

[தொகு]

இம்மாவட்டத்தின் வடக்கில் ஜெஸ்சூர் மாவட்டமும், தெற்கில் வங்காள விரிகுடாவும் , கிழக்கில் குல்னா மாவட்டமும், மேற்கில் இந்திய மாநிலமான மேற்கு வங்காளத்தின் வடக்கு 24 பர்கனா மாவட்டமும் எல்லைகளாக உள்ளது.

மாவட்ட நிர்வாகம்

[தொகு]

குல்னா கோட்டத்தில் 3817.29 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட சத்கீரா மாவட்டத்தை நிர்வாக வசதிக்காக எட்டு துணை மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இம்மாவட்டம் இரண்டு நகராட்சி மன்றங்களும், எழுபத்தி ஒன்பது கிராம ஒன்றியக் குழுக்களும், 916 வருவாய் கிராமங்களும், 1440 கிராமங்களையும் கொண்டுள்ளது.

இம்மாவட்டத்தின் அஞ்சல் சுட்டு எண் 9400 ஆகும். தொலைபேசி குறியிடு எண் 0471 ஆகும்.

இம்மாவட்டம் நான்கு நாடாளுமன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது.

பொருளாதாரம்

[தொகு]

வேளாண்மைப் பொருளாதாரத்தை மட்டும் நம்பியுள்ள இம்மாவட்டத்தில் ராய்மங்கோல், காளிந்தி, காக்சியாளி, கபதக்கியா, பங்கசியா, ஹரியவங்க, மலோஞ்சா, பேட்னா, சுனார், இஷாமதி முதலிய ஆறுகள் பாய்வதால் இம்மாவட்டம் நீர் வளமும், நில வளமும் கொண்டுள்ளது.

இங்கு நெல், சணல், புகையிலை, உருளைக்கிழங்கு, மிளகு, கடுகு, கோதுமை, மா, விளாச்சி, தென்னை, கொய்யா மற்றும் காய்கறிகள் பயிரிடப்படுகிறது. [1][2]

இம்மாவட்டத்தில் 86 பால்பண்ணைகள், 322 கோழிப் பண்ணைகள், 3650 இரால் பண்னைகள், 66 குஞ்சு பொறிப்பகங்களும் மற்றும் ஒரு கால்நடை இனப் பெருக்க மையமும் உள்ளது.

ஏற்றுமதிப் பொருட்கள்

[தொகு]

இரால் மீன்கள், அரிசி, சணல் பொருட்கள், கோதுமை, வெற்றிலை, கால்நடைகளின் தோல் இம்மாவட்டத்திலிருந்து பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.

மக்கள் தொகையியல்

[தொகு]

3817.29 சதுர கிலோ மீட்டர் பரப்பு கொண்ட இம்மாவட்டத்தின் 2011-ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி (இறுதி முடிவு அறிவிக்கப்படவில்லை) மக்கள் தொகை 19,85,959 ஆக உள்ளது. அதில் ஆண்கள் 9,82,777 ஆகவும், பெண்கள் 10,03,182 ஆகவும் உள்ளனர். பாலின விகிதம் 98 ஆண்களுக்கு 100 பெண்கள் வீதம் உள்ளனர். ஆண்டு மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் 0.62% ஆக உள்ளது. மக்கள் தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் 520 நபர்கள் வீதம் வாழ்கின்றனர். மாவட்ட சராசரி எழுத்தறிவு 52.1% ஆக உள்ளது.[3]இம்மாவட்டத்தின் பெரும்பாலான மக்கள் இசுலாமிய சமயத்தைப் பின்பற்றுபவர்களாகவும், வங்காள மொழியைப் பேசுபவர்களாகவும் உள்ளனர்.

கல்வி

[தொகு]

வங்காளதேசத்தின் பிற மாவட்டங்களைப் போன்று, இம்மாவட்டத்திலும் நான்கு படிகள் கொண்ட கல்வி அமைப்புகள் உள்ளது. அவைகள்: ஐந்தாண்டு படிப்புகள் கொண்ட தொடக்கப்பள்ளிகளும் (கிரேடு 1 – 5), ஐந்தாண்டு படிப்புகள் கொண்ட இடைநிலைப் பள்ளிகளும் (கிரேடு 6 – 10), இரண்டாண்டு படிப்பு கொண்ட மேனிலைப் பள்ளிகளும் (கிரேடு 11 – 12), நான்கு ஆண்டு படிப்பு கொண்ட இளநிலை பட்டப் படிப்பு மற்றும் ஒராண்டு கால முதுநிலை பட்டப் படிப்பு கொண்ட பல்கலைக்கழகங்களும், கல்லூரிகளும் உள்ளது. வங்காள மொழியுடன், ஆங்கில மொழியும் அனைத்து நிலைகளிலும் கற்பிக்கப்படுகிறது.

தட்ப வெப்பம்

[தொகு]

சத்கீரா மாவட்டத்தின் ஆண்டு சராசரி அதிகபட்ச வெப்பம் 35.5° செல்சியஸ் (95.9°F) ஆகவும்; குறைந்தபட்ச வெப்பம் 12.5°செல்சியஸ் (54.5 °F) ஆகவும் உள்ளது. ஆண்டு சராசரி மழைப் பொழிவு 1710 மில்லி மீட்டராகும். [4]

தட்பவெப்ப நிலைத் தகவல், சத்கீரா மாவட்டம்
மாதம் சன பிப் மார் ஏப் மே சூன் சூலை ஆக செப் அக் நவ திச ஆண்டு
உயர் சராசரி °C (°F) 25
(77)
27.8
(82)
32.8
(91)
33.9
(93)
33.9
(93)
32.8
(91)
30.6
(87)
30.6
(87)
31.7
(89)
30.6
(87)
28.9
(84)
25.6
(78)
30
(86)
தாழ் சராசரி °C (°F) 11.7
(53)
15
(59)
20
(68)
23.9
(75)
25
(77)
25.6
(78)
25.6
(78)
25
(77)
25
(77)
22.8
(73)
17.8
(64)
12.8
(55)
20.6
(69)
பொழிவு mm (inches) 8
(0.3)
23
(0.9)
30
(1.2)
71
(2.8)
145
(5.7)
295
(11.6)
353
(13.9)
325
(12.8)
267
(10.5)
142
(5.6)
25
(1)
8
(0.3)
1,689
(66.5)
ஆதாரம்: Weatherbase[5]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Jamalpur District Information
  2. "Jamalpur District Information". Archived from the original on 2017-01-03. பார்க்கப்பட்ட நாள் 2017-01-22.
  3. Community Report Satkhira Zila June 2012[தொடர்பிழந்த இணைப்பு]
  4. Climate Summary
  5. "Weatherbase.com". Weatherbase. 2013. Retrieved on 30 May 2013.

22°21′N 89°05′E / 22.35°N 89.08°E / 22.35; 89.08

"https://ta.wikipedia.org/w/index.php?title=சத்கீரா_மாவட்டம்&oldid=3552730" இலிருந்து மீள்விக்கப்பட்டது