குல்னா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
குல்னா
খুলনা
நகரம்
நாடு வங்காளதேசம்
கோட்டம்குல்னா கோட்டம்
மாவட்டம்குல்னா மாவட்டம்
பரப்பளவு
 • நகரம்59.57 km2 (23.00 sq mi)
ஏற்றம்9 m (30 ft)
மக்கள்தொகை (2012)[1]
 • அடர்த்தி14,364/km2 (37,200/sq mi)
 • பெருநகர்1,435,422
கல்வியறிவு59.1%[2]
இணையதளம்Khulna City Corporation Official Khulna District

குல்னா (Khulna, வங்காள மொழி: খুলনা ) வங்காள தேசம் நாட்டில் அமைந்துள்ள நகரம் ஆகும். இது குல்னா மாவட்டத்தின் தலைநகர் ஆகும். இந்நகர் வங்காளதேசத்தின் தென்மேற்குப் பகுதியில் ருப்ஷா மற்றும் பாய்ரப் ஆற்றங்கரையில் அமைந்துள்ளது. இந்நகரின் ஆற்றங்கரைத் துறைமுகம் வங்காளதேசத்தின் பழமையான ஆற்றங்கரைத் துறைமுகங்களுள் ஒன்று ஆகும். இந்நகரம் குல்னா மாவட்டம் மற்றும் குல்னா கோட்டத்திற்கு நிர்வாகத் தலைமையிடம் ஆகும்.

இந்நகரம் வங்காளதேசத்தின் மூன்றாவது பெரிய நகரம் ஆகும். முதலிரண்டு நகரங்கள் முறையே தாக்கா மற்றும் சிட்டகொங் ஆகும். நாட்டின் முக்கியமான தொழிற்சாலைகள் இந்நகரில் அமைந்துள்ளன. இந்நகரின் மக்கட்தொகை 2007 ஆம் ஆண்டின் கணக்குப்படி 10,00,000 ஆகும். தற்போது 14,35,422 பேர் இருக்கக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.[3]

இந்நகர் வங்காளதேசத்தின் தலைநகரான தாக்கா நகரிலிருந்து 333 கிலோமீட்டர்கள் தொலைவில் அமைந்துள்ளது. இப்பகுதியில் அமைந்திருந்த குல்னேஸ்வரி கோயிலின் பெயராலே இந்நகருக்கு இப்பெயர் வந்தது. இந்நகரின் கல்வியறிவு 59.1% ஆகும்.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. [1] 2010 Population Estimate. Retrieved on 19 August 2010.
  2. 2.0 2.1 "Khulna". Banglapedia. Archived from the original on 30 நவம்பர் 2009. பார்க்கப்பட்ட நாள் 5 சனவரி 2010.
  3. (pdf-file) பரணிடப்பட்டது 2009-04-19 at the வந்தவழி இயந்திரம் 2007 Population Estimate. Retrieved on 19 August 2009.
"https://ta.wikipedia.org/w/index.php?title=குல்னா&oldid=3792425" இலிருந்து மீள்விக்கப்பட்டது