மினிக்காய் தீவு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மினிக்காய்
மாலிக்கு
தீவு
மினிக்காய் தீவின் செயற்கோள் படம்
மினிக்காய் தீவின் செயற்கோள் படம்
Countryஇந்தியா
இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்இலட்சத்தீவுகள்
இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்மினிக்காய் தீவு
மக்கள்தொகை (2001)
 • மொத்தம்9,495
Languages
 • Officialமலையாளம்
நேர வலயம்இசீநே (ஒசநே+5:30)
அஞ்சல் குறியீடு682559
மினிக்காய் தீவின் தென்மேற்கு கோடியில் அமைந்துள்ள பவளப் பாறைக் கூட்டங்கள்

மினிக்காய் தீவு (Minicoy) அரபுக்கடலில், இலட்சத்தீவுக் கூட்டத்தின் தென்கோடியில் அமைந்துள்ளது. மினிக்காய் தீவின் மொத்த பரப்பளவு 4.22 சதுர கிலோ மீட்டர். உள்ளூர் மக்கள் மினிக்காய் தீவினை மாலிக்கு (Maliku) என்று அழைக்கின்றனர். இத்தீவின் நிர்வாகம், இந்திய நடுவண் அரசின் நேரடிக் கட்டுப்பாட்டில் உள்ளது. இலட்சத்தீவுக் கூட்டத்தில், மினிக்காய் தீவு இரண்டாவது பெரிய தீவாகும். மிகச் சிறந்த கடற்கரை சுற்றுலாத் தலமாகும்.[1]

மாலத்தீவிலிருந்து 139 கிலோ மீட்டர் தொலைவிலும், இலட்ச்த்தீவிலிருந்து 450 கிலோ மீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது. மினிக்காய் மக்களின் முதன்மை தொழில் மீன் பிடித்தலும் படகோட்டுதலுமே.

மினிக்காய் தீவு மக்களின் நாகரீகம் மற்றும் கலாசாரம், இலட்சத்தீவு மக்களின் கலாசாரத்திலிருந்து முற்றிலும் வேறுபட்டுள்ளது. ஆனால் மாலத்தீவு மக்களின் பழக்க வழக்கங்கள், நாகரீகம் மற்றும் கலாசாரத்திற்கு ஒத்துப் போகிறது. இம்மக்கள், மருமக்கதாயம் எனும் குடும்ப அமைப்பில் வாழ்கின்றனர்.

மக்கட்தொகை[தொகு]

2011ஆம் ஆண்டு, இந்திய மக்கட் தொகை கணக்கீட்டின் படி,[2] மினிக்காய் திவின் மக்கட்தொகை 9,495 மட்டுமே. (ஆண்கள் 49%; பெண்கள் 51%) படிப்பறிவு 82% ஆக உள்ளது. உள்ளுர் மக்கள் தங்களை மாலிக்குன்கள் என்று அழைத்துக் கொள்கின்றனர். மினிக்காய் மக்களின் முதன்மை சமயம் இசுலாம்.

கிராமங்கள்[தொகு]

மினிக்காய் தீவில், வடக்கிலிருந்து தெற்காக 11 கிராமங்கள் அமைந்துள்ளன. அவைகள்:

  1. கேண்டிஃபார்ட்டி ( Kendifarty)
  2. ஃபல்லெச்செரி (Fallessery)
  3. குடெஹி (Kudehi)
  4. ஃபுன்ஹிலொலு (Funhilolu)
  5. அலூடி (Aloodi)
  6. செடிவலு (Sedivalu)
  7. ராம்மெடு (Rammedu)
  8. பொடுஅத்திரி (Boduathiri)
  9. ஔமாகு (Aoumagu)
  10. படா, மினிக்காய் (Bada, Minicoy)

தட்ப வெப்பநிலை[தொகு]

தட்பவெப்ப நிலைத் தகவல், மினிக்காய் தீவு
மாதம் சன பிப் மார் ஏப் மே சூன் சூலை ஆக செப் அக் நவ திச ஆண்டு
பதியப்பட்ட உயர்ந்த °C (°F) 32.3
(90.1)
33.0
(91.4)
34.1
(93.4)
34.8
(94.6)
34.9
(94.8)
33.8
(92.8)
33.2
(91.8)
32.7
(90.9)
33.0
(91.4)
32.9
(91.2)
33.0
(91.4)
33.1
(91.6)
34.9
(94.8)
உயர் சராசரி °C (°F) 30.7
(87.3)
31.0
(87.8)
31.8
(89.2)
32.5
(90.5)
32.1
(89.8)
30.8
(87.4)
30.6
(87.1)
30.3
(86.5)
30.3
(86.5)
30.7
(87.3)
30.8
(87.4)
31.0
(87.8)
31.05
(87.89)
தினசரி சராசரி °C (°F) 27.0
(80.6)
27.4
(81.3)
28.4
(83.1)
29.3
(84.7)
29.1
(84.4)
28.0
(82.4)
27.8
(82)
27.5
(81.5)
27.6
(81.7)
27.7
(81.9)
27.5
(81.5)
27.5
(81.5)
27.9
(82.22)
தாழ் சராசரி °C (°F) 23.2
(73.8)
23.6
(74.5)
24.8
(76.6)
26.0
(78.8)
26.1
(79)
25.1
(77.2)
25.1
(77.2)
24.7
(76.5)
24.8
(76.6)
24.7
(76.5)
24.1
(75.4)
23.9
(75)
24.68
(76.42)
பதியப்பட்ட தாழ் °C (°F) 18.1
(64.6)
18.4
(65.1)
18.9
(66)
20.5
(68.9)
19.5
(67.1)
20.2
(68.4)
19.5
(67.1)
19.5
(67.1)
20.1
(68.2)
20.3
(68.5)
17.8
(64)
19.0
(66.2)
17.8
(64)
பொழிவு mm (inches) 13
(0.51)
23
(0.91)
21
(0.83)
60
(2.36)
189
(7.44)
293
(11.54)
230
(9.06)
241
(9.49)
184
(7.24)
147
(5.79)
145
(5.71)
67
(2.64)
1,613
(63.5)
ஈரப்பதம் 74 74 72 73 76 80 79 80 79 78 77 76 76.5
சராசரி மழை நாட்கள் 1.7 1.7 1.6 4.9 12.1 19.4 15.7 16.1 13.6 11.1 9.1 5.3 112.3
சூரியஒளி நேரம் 281.8 261.8 281.2 255.4 208.7 136.7 173.5 186.0 191.5 222.1 217.8 248.0 2,664.5
ஆதாரம்: NOAA (1971-1990) [3]

மேற்கோள்கள்[தொகு]

  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2014-07-19. பார்க்கப்பட்ட நாள் 2014-07-06.
  2. "Census of India 2001: Data from the 2001 Census, including cities, villages and towns (Provisional)". Census Commission of India. Archived from the original on 2004-06-16. பார்க்கப்பட்ட நாள் 2008-11-01.
  3. "Minicoy Climate Normals 1971-1990". National Oceanic and Atmospheric Administration. பார்க்கப்பட்ட நாள் 25 December 2012.

வெளி இணைப்புகள்[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Minicoy Island
என்பதில் ஊடகங்கள் உள்ளன.

மேலும் படிக்க[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மினிக்காய்_தீவு&oldid=3610576" இலிருந்து மீள்விக்கப்பட்டது