உள்ளடக்கத்துக்குச் செல்

மாவலமயீனி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மாவலமயீனி
မော်လမြိုင်မြို့
மாவலமயீனி is located in Myanmar
மாவலமயீனி
மாவலமயீனி
Location of Mawlamyine, Myanmar (Burma)
ஆள்கூறுகள்: 16°29′N 97°37′E / 16.483°N 97.617°E / 16.483; 97.617
நாடு மியான்மர்
மாநிலம்மொன் மாநிலம்
மாவட்டம்மாவலமயீனி மாவட்டம்
நகராட்சிமாவலமயீனி நகராட்சி
மக்கள்தொகை
 (2014 மக்கள்தொகை கணக்கின்படி)[1]
 • நகரம்2,89,388
 • நகர்ப்புறம்
2,53,734
 • நாட்டுப்புறம்
35,654
 • Ethnicities
Mons Burmans Chinese Indians Karens
 • Religions
Theravada Buddhism Christianity Islam இந்து சமயம்
நேர வலயம்ஒசநே+6.30 (MST)
இடக் குறியீடு57
[2]

மாவலமயீனி மியான்மரின் உள்ள மொன் மாநிலத்தின் தலைநகரம். இந்நகரம் மியான்மரின் நான்காவது பெரிய தலைநகரம்.[3][4] யங்கோன் நகரத்தில் இருந்து 300 கிமீ தென்கிழக்கிலும் மற்றும் சல்வீன் ஆறு வாய்பகுதியில் இருக்கும் தாடோன் நகரத்தில் இருந்து 70 கிமீ தெற்கிலும் அமைந்திருக்கிறது. இதுவே மொன் மாநிலத்தில் மிகப்பெரிய நகரம் மற்றும் தென்கிழக்கு மியான்மரின் முக்கிய வர்த்தக மையமாகவும் மற்றும் முக்கிய கடல் துறைமுக நகரமாகவும் உள்ளது.[5]

பெயர்க்காரணம்

[தொகு]

மாவலமயீனி என்ற மொன் பெயர் முன்னர் மொல்மீன் என்றழைக்கப்பட்டது. இதன் பொருள் காயம்பட்ட கண் என்பதாகும். [6] இப்பெயர் மொட்-மா-லம் என்பதில் இருந்து உருவாகியிருக்கலாம். இதன் பொருள் அழிக்கப்பட்ட ஒரு கண் என்பதாகும். பழைய கதைகளின் படி மொன் இராச்சியத்தின் மன்னர் ஒருவருக்கு மூன்றாவது கண் ஒன்று இருந்திருக்கிறது. அதை கொண்டு அருகில் உள்ள மற்ற இராச்சியங்களில் நடக்கும் நிகழவுகளை அறிந்துகொள்ள முடிந்தது. ஆகையால் அருகாமை இராச்சியத்தின் சேர்ந்த இளவரசி ஒருவரை இவருக்கு திருமணம் செய்து கொடுத்து அந்த மூன்றாவது கண்னை அழித்தனர்.[7] ஆகவே அழிக்கப்பட்ட கண் என்பது மொன் மொழியில் மாவலமயீனி என்றாயிற்று.

வரலாறு

[தொகு]

1479 ஆம் ஆண்டில் ஹன்தன்வாடி பெகுவை ஆண்ட மன்னர் தாம்மாசீதி உருவாக்கிய கல்யானி கல்வெட்டுகளில் மாவலமயீனி நகரை 32 வது- மயோ என்று குறிக்கப்பட்டுள்ளது. இது மார்டாபன் பிரிவில் இருக்கும் 32 மொன் நகரங்களை குறிப்பதாகும்.

மேலும் பார்க்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. The 2014 Myanmar Population and Housing Census The Union Report Census Report Volume 2. Department of Population, Ministry of Immigration and Population. May 2015. p. 59. Archived from the original on 2016-03-06. பார்க்கப்பட்ட நாள் 2021-08-12.
  2. "National Telephone Area Codes". Myanmar Yellow Pages. Archived from the original on 2010-11-20. பார்க்கப்பட்ட நாள் 2018-01-01.
  3. "Myanmar: largest cities and towns and statistics of their population:calculation 2010". Archived from the original on 19 September 2012. World Gazetteer
  4. "Population of Cities in Myanmar (2017)". worldpopulationreview.com. பார்க்கப்பட்ட நாள் 2017-10-22.
  5. "Mawlamyine or Moulmein". allmyanmar.com. பார்க்கப்பட்ட நாள் 2009-02-03. {{cite web}}: Italic or bold markup not allowed in: |publisher= (help)
  6. Dictionary of Modern Spoken Mon by H.L. Shorto (1962, Oxford University Press).
  7. Myanmar Travel Information பரணிடப்பட்டது 2016-03-23 at the வந்தவழி இயந்திரம். Accessed 16 August 2015
"https://ta.wikipedia.org/w/index.php?title=மாவலமயீனி&oldid=3791651" இலிருந்து மீள்விக்கப்பட்டது