மாலிக் தினார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
துறவி மாலிக் தினார்
மாலிக் தினாரின் கல்லறை
போதகர், இறையியலாளர், மெய்யியலாளர், துறவி
பிறப்புகூபா, ஈராக், ஈராக்கு[1]
இறப்புபொ.ச.748
தளங்கரை, காசர்கோடு, கேரளம், இந்தியா
முக்கிய திருத்தலங்கள்மாலிக் தினார் பள்ளிவாசல், தளங்கரை, காசர்கோடு, கேரளம், இந்தியா
செல்வாக்கு செலுத்தியோர்அலீ, பசுராவின் ஆசன்

மாலிக் தினார் (Malik Dinar) (இறப்பு:748 ),[2] ஓர் பாரசீக அறிஞரும், பயணியுமாவார். சேரமான் பெருமாளுக்குப் பிறகு இந்தியத் துணைக் கண்டத்தில் இஸ்லாத்தை பரப்புவதற்காக இந்தியாவுக்கு வந்த முதல் அறியப்பட்ட முஸ்லிம்களில் இவரும் ஒருவராவார்.[3][4]

அவர் இறந்த சரியான இடம் குறித்து வரலாற்றாசிரியர்கள் உடன்படவில்லை என்றாலும், அவர் காசராகோட்டில் இறந்தார் என்பதும், இவர், காசர்கோடு, தளங்கரையில் உள்ள மாலிக் தினார் பள்ளிவாசலில் அடக்கம் செய்யப்பட்டார் என்பதும் பரவலாக ஏற்றுக்கொள்ளப்படுகிறது.

தாஃபியீன்களின் (இசுலாமிய தீர்க்கதரிசி முகம்மதுவின் தோழர்களைப் பார்த்த மக்கள்) வழிவந்தவராக அறியப்படும் இவர், சுன்னி இசுலாமியர்களிடையே நம்பகமான பாரம்பரியவாதி என்று அறியப்படுகிறார். இவர் அசன் அல்-பசிரியின் சீடரான காபூலைச் சேர்ந்த ஒரு பாரசீக அடிமையின் மகனாவார். பொ.ச.பி 748-49ல் பசுராவில் கணிசமான அழிவை ஏற்படுத்திய பிளேக் தொற்றுநோய்க்கு சற்று முன்பு இவர் இறந்தார். இவரது மரணம் நிகழ்ந்தது 744-45 அல்லது கி.பி 747-48 ஆக இருக்கலாமென மாற்றுக் கருத்துக்களும் உள்ளன.[5]

மாலிக் தினார் பள்ளிவாசலின் காட்சி

பசுராவின் போதகரும் தார்மீகவாதியுமான மாலிக், திருக்குர்ஆனின் நகலெடுப்பாளராக இருந்தார். [6] மேலும் வேதத்தின் பல்வேறு வாசிப்புகளின் கேள்விகளுக்கு ஆர்வம் காட்டியதாகத் தெரிகிறது. [7]

மாலிக் தீனார் உருசு[தொகு]

கேரளாவிற்கு மாலிக் தீனர் வந்ததைக் கொண்டாடும்விதமாக "மாலிக் தினார் உருசு" என்பதை இந்திய முஸ்லிம்கள் ஏற்பாடு செய்து ஆண்டுதோறும் நடத்தி வருகிறார்கள். இது புனித முஃகர்ரம் மாதத்தில் நடத்தப்பட்டு ஒரு மாதம் நீடிக்கும். இதில் சியாரத் (கல்லறைக்கு வருகை), கொடி ஏற்றம் மற்றும் அன்னதானம் போன்ற பல்வேறு சடங்குகள் நடக்கின்றன. [8]

மேலும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. Al-Dhahabi, Siyar a`lam al-nubala', vol. 5, p. 362.
  2. Al-Hujwiri, "Kashf al-Mahjoob", 89
  3. Ibn Nadim, "Fihrist", 1037
  4. "History". Malik Deenar Grand Juma Masjid. Archived from the original on 13 January 2012. பார்க்கப்பட்ட நாள் 18 November 2011.
  5. Pellat, Ch., “Mālik b. Dīnār”, in: Encyclopaedia of Islam, Second Edition, Edited by: P. Bearman, Th. Bianquis, C.E. Bosworth, E. van Donzel, W.P. Heinrichs.
  6. Pellat, Ch., “Mālik b. Dīnār”, in: Encyclopaedia of Islam
  7. Ibn al-D̲j̲azarī, Ṭabaḳāt al-ḳurrāʾ, ii, 36
  8. "Official Website of Malik Deenar". Archived from the original on 2015-08-01. பார்க்கப்பட்ட நாள் 2012-10-05.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மாலிக்_தினார்&oldid=3567434" இலிருந்து மீள்விக்கப்பட்டது