உள்ளடக்கத்துக்குச் செல்

மாலிக் தினார் பள்ளிவாசல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மாலிக் தினார் பள்ளிவாசல்
2018 ஆம் ஆண்டு புதுப்பிக்கப்பட்ட பள்ளிவாசலின் தோற்றம்
அடிப்படைத் தகவல்கள்
அமைவிடம்தளங்கரை, காசர்கோடு மாவட்டம், கேரளம்
புவியியல் ஆள்கூறுகள்12°29′06″N 74°59′20″E / 12.4849°N 74.9890°E / 12.4849; 74.9890
சமயம்சன்னி
நிலைபள்ளிவாசல் மற்றும் தர்கா
செயற்பாட்டு நிலைசெயல்பாட்டில் உள்ளது

மாலிக் தினார் பள்ளிவாசல் (Malik Dinar Mosque) என்பது தென்னிந்தியாவின் கேரள மாநிலத்தின் காசர்கோடு மாவட்டத்தில் அமைந்துள்ள இந்தியாவின் பழமையான பள்ளிவாசல்களில் ஒன்றாகும். உள்ளூரில் மாலிக் தினார் மசூதி மற்றும் மாலிக் தினார் ஜும்மா மசூதி என்றும் அதிகாரப்பூர்வமாக ஹஸ்ரத் மாலிக் தினார் பெரிய ஜும்மா மசூதி என்றும் அழைக்கப்படுகிறது.

வரலாறு

[தொகு]

காசர்கோடு மேற்கு கடற்கரையில் பல ஆண்டுகளாக இசுலாத்தின் மையமாக பெருமளவில் முக்கியத்துவத்தைப் பெற்றது இது. இது இந்தியாவில் இசுலாத்தை பரப்ப வந்த மாலிக் தினார் என்பவரால் நிறுவப்பட்டதாக நம்பப்படும் முதல் பத்து பள்ளிவாசல்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.[1] இசுலாமிய நாட்காட்டி 22 இல் (கி.பி 642/643) கட்டி முடிக்கப்பட்டதாக நம்பப்படும் இது, இந்தியாவின் பழமையான மசூதிகளில் ஒன்றாகும். இரண்டு மாடி மசூதி கேரள-இசுலாமிய பாரம்பரிய பாணியில் கட்டப்பட்டது.[2] மேலும் 2018 இல் இசுலாமிய பாணியில் விரிவாக மறுவடிவமைப்பு செய்யப்பட்டது. பள்ளிவாசல் மற்றும் தர்காவைத் தவிர, வளாகத்தில் ஒரு மதராசா, கல்லறை மற்றும் அனாதை இல்லம் ஆகியவையும் இருக்கிறது.

இந்த பள்ளிவாசல் 1809 ஆம் ஆண்டு புதுப்பிக்கப்பட்டது.[3][4] 2018 ஆம் ஆண்டில் டி. ஏ. அப்துல் ரகுமான் ஹாஜியின் வழிகாட்டுதலின் கீழ் கூடுதல் இறக்கைகள், குவிமாடங்கள் மற்றும் மினாரெட் சேர்க்கப்பட்டு விரிவாக மறுவடிவமைப்பு செய்யப்பட்டது.

இருப்பிடம்

[தொகு]

மாவட்டத்தில் மிகச் சிறந்ததும், கவரக்கூடிய ஒன்றான இந்த பள்ளிவாசல் தளங்கரையில் அமைந்துள்ளது. தளங்கரை கடற்கரையானது காசர்கோடு நகரின் மேற்குப் பகுதியில் தொடருந்து நிலையத்திற்கு அருகில் உள்ளது.

புனிதக் கல்லறை

[தொகு]

இந்த பள்ளிவாசல் வளாகத்தில் தாஃபியீன்களில் (இஸ்லாமிய தீர்க்கதரிசி முகம்மதுவின் தோழர்களைப் பார்த்த மக்கள்) ஒருவரான மாலிக் தினாரின் கல்லறை உள்ளது. இந்த இடம் முஸ்லிம்களால் புனிதமானதாக கருதப்படுகிறது.[5] காசர்கோட்டில் உள்ள மற்றொரு குறிப்பிடத்தக்க பள்ளிவாசல், நகரத்தின் மையத்தில் உள்ள தெருவாத்து பள்ளிவாசல் ஆகும்.

யாத்ரீக மையம்

[தொகு]

தளங்கரை பள்ளிவாசல் காசர்கோடு மாவட்டத்தின் ஒரு முக்கிய யாத்ரீக மையமாகும்.

மாலிக் தினார் உருசு

[தொகு]

மாலிக் தினார் உருசு என்பது இங்கு நிகழ்த்தப்படும் ஒரு முக்கிய ஆண்டு விழாவாகும். இது கேரளாவிற்கு மாலிக் தினார் வந்ததைக் கொண்டாடும்விதமாக இந்திய முஸ்லிம்கள் ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு முக்கிய விழாக்களில் ஒன்றாகும். இது புனித முஃகர்ரம் மாதத்தில் நடத்தப்பட்டு ஒரு மாதம் நீடிக்கும். இதில் சியாரத் (கல்லறைக்கு வருகை), கொடி ஏற்றம் மற்றும் அன்னதானம் போன்ற பல்வேறு சடங்குகள் நடக்கின்றன.[6]

புகைப்படங்கள்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. ↑ Prange, Sebastian R. (2018). Monsoon Islam: Trade and Faith on the Medieval Malabar Coast. கேம்பிறிட்ஜ் பல்கலைக்கழகப் பதிப்பகம். p. 98.
  2. ↑ "Malik Dinar Mosque, Kasaragod" (photo gallery). Kerala Tourism. 2025. Retrieved 19 January 2025.
  3. ↑ "Malik Dinar Mosque". Kerala Tourism. 2025. Retrieved 19 January 2025.
  4. ↑ Rao, Bindu Gopal (2016-07-11). "Malik Deenar Mosque" (Includes an image and description of the mosque, prior to its 2018 renovation). தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. Retrieved 19 January 2025.
  5. ↑ Menon, A. Sreedhara (1978). Cultural heritage of Kerala: an introduction. East-West Publications. p. 58.
  6. ↑ "Home page". Malik Deenar Mosque. Archived from the original on 1 August 2015. Retrieved 2012-10-05.