மாற்றத்திற்கான இளம் பெண்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மாற்றத்திற்கான இளம் பெண்கள்
Young Women for Change
உருவாக்கம்ஏப்ரல் 2011 (2011-04)
வகைஇலாப நோக்கற்ற அமைப்பு, அரசு சார்பற்ற அமைப்பு
நோக்கம்ஆப்கானிசுத்தானில் பெண்கள் உரிமைகள்
தலைமையகம்
உறுப்பினர்கள்
தன்னார்வலர்கள்
முக்கிய நபர்கள்
அனித ஐதாரி, நூர் சகான்
வலைத்தளம்youngwomenforchange.org (in active)

மாற்றத்திற்கான இளம் பெண்கள் (Young Women for Change) ஆப்கானித்தான் நாட்டின் காபூல் நகரில் பெண்களின் உரிமைக்காக உருவாக்கப்பட்ட இலாப நோக்கற்ற ஓர் அமைப்பாகும் . இது 2011 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் நிறுவப்பட்டது. இவர்கள் பாலின சமத்துவத்திற்காக பிரச்சாரம் செய்கிறார்கள். மேலும் ஆப்கானித்தான் முழுவதும் பெண்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதற்கு இவர்கள் பாடுபடுகிறார்கள்.[1] [1] மாற்றத்திற்கான இளம் பெண்கள் அமைப்பு ஆப்கானித்தான் இளைஞர்களுக்குப் புதியது என்றாலும் நன்கு அறியப்பட்ட ஓர் அமைப்பாகும். [2]

இந்த அமைப்பு மார்ச் 2011 இல் இரண்டு ஆப்கான் பெண்கள், நூர்சகான் அக்பர் என்ற 21 வய்து பெண்ணும் அனிதா ஐதாரி , என்ற 20 வய்து பெண்ணும் சேர்ந்து மாற்றத்திற்கான இளம் பெண்கள் அமைப்பை நிறுவினர். இதன்பிறகு, இளம் ஆப்கானியப் பெண்களும் ஆண்களும் கூடி, அங்கு சேர்ந்து தன்னார்வத்துடன் வேலை செய்தனர். [3] பெரும்பாலும் 18 முதல் 25 வயதுக்குட்பட்ட பெண்கள் சுமார் 30 பேர் தன்னார்வலர்களாகக் கூடினர். [2] அமைப்பின் வலைத்தளத்தின்படி, மாற்றத்திற்கான இளம் பெண்கள் அமைப்புக்கு நன்கொடைகள் மற்றும் நிதி திரட்டும் நிகழ்வுகளிலிருந்து மட்டுமே நிதிகிடைத்து வருகிறது.[4]

மாற்றத்திற்கான இளம் பெண்கள் அமைப்பினர் 2012 ஆம் ஆண்டு சூலை மாதத்தில் ஆப்கானித்தான் வரலாற்றில் தெருத் துன்புறுத்தலை கண்டித்து முதல் அணிவகுப்பை நடத்தினர். அமைப்பின் உறுப்பினர்கள் ஆப்கானித்தான் நாட்டில் பாலியல் துன்புறுத்தல் பற்றிய முதல் பெரிய அளவிலான ஆய்வையும் மேற்கொண்டனர். சர்வதேச மகளிர் தினம்அன்று ஆப்கானித்தான் நாட்டில் முதன் முதலாகப் காபூலின் மையப்பகுதியில் பெண்கள் இணைய மையத்தையும் தொடங்கினர். உள்நாட்டு வன்முறைக்குப் பலியான சகர் குல்" என்ற பெண்ணின் பெயர் இம்மையத்திற்குச் சூட்டப்பட்டது. [3] [5] [6] எழுத்தறிவு, மொழி மற்றும் கணினி திறன்களைக் கற்பிக்கும் கல்வி மையத்தையும் இந்த அமைப்பு திறந்துள்ளது. [4]

செயல்பாடுகள்[தொகு]

பெண்கள் இணைய மையம்[தொகு]

மாற்றத்திற்கான இளம் பெண்கள் அமைப்பினர் 8 மார்ச் 2012 அன்று மத்திய காபூலில் ஆப்கானித்தானின் முதலலாவது பெண்கள் மட்டும் இருக்கும் இணைய மையத்தைத் திறந்தனர். உறுப்பினர்களின் கூற்றுப்படி இந்த பெண்கள் மட்டும் இணைய மையத்தை திறப்பதன் நோக்கம் "பெண்கள் பயப்படாமல் இணையத்தைப் பயன்படுத்த பாதுகாப்பான ஓர் இடத்தை உருவாக்க வேண்டும்" என்பதுதான். [6] இந்த மையத்திற்கு "சகர் குல்" என்று பெயரிடப்பட்டுள்ளது. [6] சகர் குல் என்பவர் குடும்ப வன்முறையில் பாதிக்கப்பட்ட 15 வயது பெண்ணின் பெயராகும். அதிக பணம் கொண்டு வரவேண்டுமென்பதற்காக விபச்சாரியாக மாற மறுத்ததால் அவரது கணவர் மற்றும் குடும்பத்தினரின் சித்திரவதைகளால் உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் கடுமையாகப் பாதிக்கப்பட்டார். [3] [5]

துன்புறுத்தல் தொல்லை ஆராய்ச்சி[தொகு]

மாற்றத்திற்கான இளம் பெண்கள் அமைப்பு ஆப்கானித்தானில் பாலியல் துன்புறுத்தல் பற்றிய முதல் பெரிய அளவிலான ஆய்வை நடத்தியுள்ளனர். ஆப்கானித்தானில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அரிதாகவே ஆய்வு செய்யப்படுகின்றன மற்றும் அடித்தல் மற்றும் பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டுகள் பொதுவாக ஆப்கான் அதிகாரிகளால் விசாரிக்கப்படுவதில்லை. ஆனால் இதுபோன்ற சந்தர்ப்பங்களில் பெண்கள் பொதுவாக "வீட்டிலிருந்து தப்பித்தல்" அல்லது "தார்மீக" குற்றவாளிகள்ள் என்று பெயரிடப்படுகிறார்கள். [3]

தெரு துன்புறுத்தல் எதிர்ப்புப் பேரணி[தொகு]

மாற்றத்திற்கான இளம் பெண்கள் அமைப்பு 14 ஜூலை 2012 அன்று ஆப்கானித்தான் வரலாற்றில் தெரு துன்புறுத்தல் எதிர்ப்பு அணிவகுப்பை நடத்தியுள்ளனர். அவர்களுடன் ஐம்பதுக்கும் மேற்பட்ட இளைஞர்கள் இணைந்தனர். இந்த நடைப்பயணத்திற்கு காவல்துறை ஆதரவளித்தது மற்றும் ஊடகங்களும் அதை அறிவித்தன. [3] [7]

தெரு துன்புறுத்தல் பற்றிய ஆவணப்படம்[தொகு]

மாற்றத்திற்கான இளம் பெண்கள், அமைப்பு காபூலில் இளைஞர்களுக்கு தெருத் துன்புறுத்தல் பற்றிய ஆவணப்படத்தை படமாக்கியுள்ளனர். அனிதா ஐதாரி தயாரித்த இந்த படத்திற்கு எனது நகரமும் என்று பெயரிடப்பட்டுள்ளது. [8]

தலைமைத்துவம்[தொகு]

நூர்சகான் அக்பர் 2014 ஆம் ஆண்டு அமைப்பை விட்டு விலகியதிலிருந்து, அனிதா ஐதாரி தலைமையில் இயங்குகிறது.

இதையும் பார்க்கவும்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "Young Women for Change: Afghan women standing up for their rights". Amnesty International. பார்க்கப்பட்ட நாள் January 4, 2013.
  2. 2.0 2.1 Samarqandi, Shahzadeh. "تلاش زنان جوان افغان برای تغییر". Radio Zamaneh. Archived from the original on டிசம்பர் 25, 2018. பார்க்கப்பட்ட நாள் January 4, 2013. {{cite web}}: Check date values in: |archive-date= (help)Samarqandi, Shahzadeh. "تلاش زنان جوان افغان برای تغییر" பரணிடப்பட்டது 2018-12-25 at the வந்தவழி இயந்திரம். Radio Zamaneh. Retrieved January 4, 2013.
  3. 3.0 3.1 3.2 3.3 3.4 "Young Women for Change". Guardian. 24 November 2012. பார்க்கப்பட்ட நாள் January 4, 2013."Young Women for Change". Guardian. 24 November 2012. Retrieved January 4, 2013.
  4. 4.0 4.1 "About Us". Young Women for Change website. பார்க்கப்பட்ட நாள் January 4, 2013."About Us". Young Women for Change website. Retrieved January 4, 2013.
  5. 5.0 5.1 "Afghanistan: Girl Power". Aljazeera English. 17 May 2012. Archived from the original on 25 டிசம்பர் 2018. பார்க்கப்பட்ட நாள் January 4, 2013. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  6. 6.0 6.1 6.2 "Women-only internet cafe opens in Kabul". The Irish Times. March 9, 2012. பார்க்கப்பட்ட நாள் January 4, 2013.
  7. "Walk against Street Harassment". Young Women for Change website. பார்க்கப்பட்ட நாள் January 11, 2013.
  8. "Programs". Young Women for Change website. பார்க்கப்பட்ட நாள் January 11, 2013.

 

புற இணைப்புகள்[தொகு]