உள்ளடக்கத்துக்குச் செல்

மார்கரெட் மீட்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மார்கரெட் மீட்
மார்கரெட் மீட் 1950 இல்
பிறப்பு(1901-12-16)திசம்பர் 16, 1901
பிலெடெல்பியா, பென்சில்வேனியா, ஐக்கிய அமெரிக்கா
இறப்புநவம்பர் 15, 1978(1978-11-15) (அகவை 76)
நியூ யார்க் சிட்டி, நியூ யார்க், ஐக்கிய அமெரிக்கா
கல்வி
பணிமானுடவியலாளர்
வாழ்க்கைத்
துணை
 • 1923–28  லூதர் கிரெசுமேன்
 • 1928–35  ரியோ பார்ச்சூன்
 • 1936–50  கிரகரி பேட்சன்
பிள்ளைகள்மேரி சி. பேட்சன் (பிறப்பு 1939)
விருதுகள்1970  கலிங்கா விருது

மார்கரெட் மீட், (Margaret Mead, டிசம்பர் 16, 1901 – நவம்பர் 15, 1978) : ஓர் அமெரிக்க மானுடவியல் ஆய்வாளராவார். 1960 மற்றும் 1970 களில் ஊடகங்களால் அதிகம் பேசப்பட்ட எழுத்தாளரும் பேச்சாளரும் ஆவார்.[1] நியூ யார்க் நகரத்தில், பர்னார்டு கல்லூரியில் முதுகலைப்பட்டம் பெற்ற மீட் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றார். மார்கரெட் மீட் அறிவியல் முன்னேற்றத்திற்கான் அமெரிக்கக் கூட்டமைப்பின் தலைவராகவும் தொண்டாற்றினார்.[2]

மீட், மானுடவியலில் நவீன அமெரிக்க, மேற்கத்தியக் கலாச்சாரத்தின் தொடர்பாளாராக இருந்தார், ஆனால் ஒரு கல்வியாளராகச் சர்ச்சைக்குரியவரகவே இருந்தார்.[3] தெற்கு பசிபிக் மற்றும் தென்கிழக்கு ஆசிய மரபுவழிக் கலாச்சாரங்கள் குறித்த மனப்போக்குகளை விவரிக்கும் அவரது அறிக்கைகள், 1960 களில் பாலியல் புரட்சியில் தாக்கத்தை ஏற்படுத்தின. பாரம்பரிய மேற்கத்திய மத வாழ்வுச் சூழலில் சொல்லப்பட்ட விரிவான பாலியல் மரபுகளை அவர் ஆதரித்தார்.

பிறப்பு[தொகு]

பிலடெல்பியாவில் ஐந்து குழந்தைகளில் முதல் குழந்தையாக மீட் பிறந்தார். ஆனால் பென்சில்வேனியாவின் டாயில்ஸ்டவுன் பகுதியில் வளர்ந்தார். இவருடைய தந்தை எட்வர்ட் செர்வுட் மேட், பென்சில்வேனியாவின் வார்டன் பல்கலைக் கழகத்தில் நிதியியல் பேராசிரியராக இருந்தார். இவரது தாயார் எமிலி மீட்,[4] இத்தாலியிலிருந்து புலம்பெயர்ந்தோரைப் பற்றி ஆய்வு செய்த ஒரு சமூகவியலாளராவார்.[5]

இளமை, குடும்பம்[தொகு]

மீடின் சகோதரி கேத்தரின் ஒன்பது மாதக் குழந்தையாக இருந்தபோதே 1906-1907 இல் இறந்தார். இது மீடுக்கு மிகவும் அதிர்ச்சி தரத்தக்க சம்பவமாக இருந்தது. ஏனெனில் அவர்தான் அக்குழந்தைக்கு பெயரிட்டவராவார். இறந்த சகோதரியின் எண்ணங்கள், மீடின் பகல் கனவுகளில் பல ஆண்டுகளாக ஊடுருவியிருந்தது.[6]:347–348 இவருடைய குடும்பம் அடிக்கடி இடம்பெயர்ந்து செல்லவேண்டியிருந்ததால் மீட் தனது 11 ஆம் வயதுவரை தனது பாட்டி வீட்டில் வளர்ந்தார். அங்கேயே தனது துவக்கக்கல்வியையும் தொடர்ந்தார். பின்னர், பென்சில்வேனியாவில் லகாஷா என்ற இடத்தில் இருந்த பக்கிங்ஹாம் நண்பர்கள் பள்ளியில் அவரது குடும்பத்தாரால் சேர்க்கப்பட்டார்.[7] 1912 முதல் 1926 வரை, பென்சில்வேனியாவின் லாங்க்லாண்ட் என்ற இடத்தில் இவரது குடும்பத்திற்குச் சொந்தமான பண்ணை ஒன்று இருந்தது.[8] மீட் பல்வேறு மதப்பார்வைகள் கொண்ட குடும்பத்தில் பிறந்தவர். இவர் கிறித்துவத்தைப் பற்றி முழுமையாக அறிந்தவராயினும், உண்மையான கடவுள் விசுவாசத்தை வெளிப்படுத்தும் ஓர் மதவடிவத்தை அவர் தேடிக்கொண்டிருந்தார்.[9]

அச்சமயத்தில் இவர், ஐக்கிய அமெரிக்காவின் எபிஸ்கோபல் தேவாலயத்தைக் கண்டறிந்தார். மீட் தேடிய ஓரு உண்மை விசுவாத்தை அடையும் மதச்சடங்குகள் செய்யும் தேவாலயமாக அது விளங்கியது.[9] 1919 இல் டெபாவ் பல்கலைக்கழகத்தில் ஓராண்டு படித்தார். பின்னர் தனது கல்வியை பர்னார்டு கல்லூரிக்கு மாற்றிக்கொண்டார். இங்கு ’முட்டாள்தனமான பத்தொன்பதாம் நூற்றாண்டின் வாதங்கள்’ என்ற மானுடவியல் ஆய்வைக் கண்டறிந்தார்.[10]

கல்வி[தொகு]

1923 இல் மீட் தனது இளங்கலைப் பட்டத்தை பர்னார்டு கல்லூரியில் பெற்றார். பின்னர் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் பிரான்ஸ் போயஸ், முனைவர் ரூத் பெனெடிக்ட் ஆகியோரிருடன் தனது கல்வியைத் தொடர்ந்தார்.1924 இல் தனது முதுகலைப்பட்டம் பெற்றார்.[11] 1925 இல் சமோவா மக்களைப் பற்றிய கள ஆய்வில் ஈடுபட்டார்.[12] 1926 ஆல் நியூ யார்க்கில் உள்ள இயற்கை வரலாற்றுக்கான அமெரிக்க அருங்காட்சியகத்தில் பொருட்களைக் கண்காணிக்கும் உதவிப்பொறுப்பாளராக பணியில் சேர்ந்தார்.[13] 1929 இல் கொலம்பியாப் பல்கலைக்கழகத்தில் தனது முனைவர் பட்டத்தைப் பெற்றார்.[14]

மேற்கோள்கள்[தொகு]

 1. "Margaret Mead As a Cultural Commentator". Margaret Mead: Human nature and the power of culture. அமெரிக்கக் காங்கிரசு நூலகம். பார்க்கப்பட்ட நாள் 2008-03-08.
 2. "AAAS Presidents". aaas.org. AMERICAN ASSOCIATION FOR THE ADVANCEMENT OF SCIENCE. பார்க்கப்பட்ட நாள் 13 October 2018.
 3. Horgan, John. "Margaret Mead's bashers owe her an apology". Scientific America.
 4. "Shaping Forces – Margaret Mead: Human Nature and the Power of Culture (Library of Congress Exhibition)". Loc.gov. பார்க்கப்பட்ட நாள் 2010-09-29.
 5. ""Margaret Mead" by Wilton S. Dillon" (PDF). பார்க்கப்பட்ட நாள் 2010-09-29.
 6. Howard 1984.
 7. Stella, Nicole and Jenifer (July 18, 2005). New Hope, Lahaska, and Buckingham (PA) (Images of America). Arcadia Publishing. p. 46. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0738537969.
 8. "National Historic Landmarks & National Register of Historic Places in Pennsylvania". CRGIS: Cultural Resources Geographic Information System. Archived from the original (Searchable database) on 2007-07-21. பார்க்கப்பட்ட நாள் 2019-01-15. Note: This includes Jeffrey L. Marshall (October 1999). "National Register of Historic Places Inventory Nomination Form: Longland" (PDF). Archived from the original (PDF) on 2013-05-25. பார்க்கப்பட்ட நாள் 2012-09-30.
 9. 9.0 9.1 Mead 1972, ப. 76–77
 10. "Margaret Mead and Humanity's Coming of Age". The Attic. பார்க்கப்பட்ட நாள் 18 July 2018.
 11. "Encyclopædia Britannica's Guide to Women's History". Britannica.com. பார்க்கப்பட்ட நாள் 2010-09-29.
 12. Mead 1977
 13. "Margaret Mead". Webster.edu. 1901-12-18. Archived from the original on 2000-05-19. பார்க்கப்பட்ட நாள் 2010-09-29.
 14. Liukkonen, Petri. "Margaret Mead". Books and Writers (kirjasto.sci.fi). Finland: Kuusankoski Public Library. Archived from the original on 10 February 2015. {{cite web}}: Italic or bold markup not allowed in: |website= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=மார்கரெட்_மீட்&oldid=3587868" இலிருந்து மீள்விக்கப்பட்டது