பொருள்சார் பண்பாடு
Jump to navigation
Jump to search
பொருள்சார் பண்பாடு (Material culture) என்பது, மக்களுக்கும் அவர்களால் உருவாக்கப்பட்ட அல்லது மாற்றத்துக்கு உள்ளாக்கப்பட்ட பொருட்களுக்கும் இடையிலான தொடர்புகள் குறித்த பல்துறை ஆய்வுப்புலம் ஆகும். இந்த ஆய்வுப்புலம் அப்பொருட்களின் செய்முறை, வரலாறு, பாதுகாப்பு, அவை குறித்த விளக்கம் என்பவற்றையும் உள்ளடக்குகிறது. இத்துறைக்கான கோட்பாடுகளும், வழிமுறைகளும் கலை வரலாறு, தொல்லியல், மானிடவியல், வரலாறு, வரலாற்றுப் பாதுகாப்பு, நாட்டாரியல், அருங்காட்சியகவியல் போன்றவை உள்ளிட்ட சமூக அறிவியல் துறைகளில் இருந்து பெறப்படுகின்றன.