மாயா கிருஷ்ண ராவ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மாயா கிருஷ்ண ராவ்
2012ல் மாயா கிருஷ்ண ராவ்
பிறப்பு1953
நியூயார்க், அமெரிக்கா
தேசியம்இந்தியர்
பணிநடனக் கலைஞர், நாடக இயக்குனர்

மாயா கிருஷ்ணா ராவ் (பிறப்பு 1953) ஒரு இந்திய நாடக கலைஞர், நகைச்சுவை நடிகர் மற்றும் சமூக ஆர்வலர் ஆவார். அவரது நன்கு அறியப்பட்ட நாடகங்களில் ஓம் ஸ்வாஹா, தஃபா எண். 180, ராவணமா மற்றும் ஹெட்ஸ் ஆர் மெண்ட் ஃபார் வாக்கிங் இன்டு ஆகியவை அடங்கும். அவர் சங்கீத நாடக அகாடமி விருதை (2010) பெற்றவர். இந்தியாவில் சகிப்பின்மையின் அதிகரிப்பை எதிர்த்து ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு அவர் அவ்விருதை திருப்பியனுப்பினார்.

சுயசரிதை[தொகு]

மாயா நியூயார்க் நகரில் 1953 இல் பிறந்தார்.[1] இளம் வயதிலேயே இந்தியாவுக்குக் குடிபெயர்ந்தார். 1960 களில் மலையாள நாடகத்துடன் தொடர்புடைய அவரது தாயார் பானுமதி ராவால் ஈர்க்கப்பட்டார்.[2] மாயா புது டெல்லியில் உள்ள மாடர்ன் பள்ளியில் படித்தார். டெல்லியில் உள்ள மிராண்டா ஹவுஸில் இளங்கலைப் பட்டப்படிப்பை முடித்தார். டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் அரசியல் அறிவியலில் முதுகலைப் பட்டம் பெற்றார்.[3] லீட்ஸ் பல்கலைக்கழகத்தில் நாடகக் கலைகளில் பட்டமும் பெற்றுள்ளார். அவர் பிரித்தானிய கூடுறவில் தங்கியிருந்த காலத்தில், நாட்டிங்ஹாமில் உள்ள "பெர்ஸ்பெக்டிவ்ஸ் தியேட்டர் கம்பெனி" மற்றும் "லீட்ஸ் ப்ளேஹவுஸ் தியேட்டர்-இன்-எஜுகேஷன் கம்பெனி" ஆகியவற்றுடன் சிறு தொடர்பைக் கொண்டிருந்தார்.

ராவ் ஒரு பயிற்சி பெற்ற கதகளி கலைஞராவார். மாம்புழா மாதவ பணிக்கர் மற்றும் சதானம் பாலகிருஷ்ணன் ஆகியோரிடம் நாடகப் பயிற்சியைப் பெற்றார்.[4]

கல்லூரி நாட்களிலிருந்தே, மாயா இடதுசாரி இயக்கத்தால் ஆழமாகத் தாக்கம் கொண்டார்.[5] அவர் "தியேட்டர் யூனியன்" என்ற தெரு நாடகக் குழுவின் இணை நிறுவனர் ஆவார். 1985 மற்றும் 1990 க்கு இடையில் புது தில்லியின் தேசிய நாடகப் பள்ளியில் நடிப்புத் துறையில் இணைப் பேராசிரியராக இருந்தார்.[6] அதன்பின் வருகை தரும் ஆசிரியராகத் தொடர்ந்தார். 2013 ஆம் ஆண்டில் அவர் டெல்லியில் உள்ள ஷிவ் நாடார் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக நியமிக்கப்பட்டார். அங்கு அவர் TEST (கல்வி மற்றும் சமூக மாற்றத்திற்கான அரங்கம்) என்ற முதுகலை டிப்ளமோ திட்டத்தை வடிவமைத்து கற்பித்தார். இது இந்தியாவில் உள்ள முதல் உயர்கல்விப் படிப்பாக உள்ளது. ராவின் நாடகங்கள் சமூக அரசியலின் கருப்பொருள்களால் வகைப்படுத்தப்படுகின்றன.[7] அவரது ஆரம்பகால நாடகங்களில், ஓம் ஸ்வாஹா, வரதட்சணை பற்றிய விமர்சனம் மற்றும் இந்திய கற்பழிப்பு சட்டத்தை எடுத்துரைக்கும் தஃபா எண். 180 ஆகியவை அடங்கும்.[8] அவரது தனி-கலைஞர் நாடகங்களில் ராவணமா, ஆர் யூ ஹோம் லேடி மக்பத்?, எ டீப் ஃப்ரைட் ஜாம் மற்றும் ஹெட்ஸ் ஆர் மெண்ட் ஃபார் வாக்கிங் இன்டு ஆகியவை குறிப்பிடத்தக்கவை. நைஜீரிய எழுத்தாளர் சிமாமண்டா அடிச்சியின் சிறுகதையை அடிப்படையாகக் கொண்ட மாயாவின் 2017 நாடகம் குவாலிடி ஸ்ட்ரீட், விமர்சன ரீதியான பாராட்டைப் பெற்றது.[9] அவரது 2012 ஆம் ஆண்டு நாடகம் வாக் 2012 ஆம் ஆண்டு டெல்லி கூட்டுப் பலாத்காரத்தை அடிப்படையாகக் கொண்டது.[10]

மாயா 2010 இல் இந்திய நாடகத்துறைக்கு அவர் ஆற்றிய பங்களிப்பிற்காக சங்கீத நாடக அகாடமி விருதைப் பெற்றார். 2015 தாத்ரி கும்பல் கொலைச் சம்பவத்தைத் தொடர்ந்து, இந்தியாவில் "சகிப்பின்மை அதிகரித்து வருகிறது" என்று கூறி விருதைத் துறந்தார்; இவ்விருதைத் துறந்த முதல் கலைஞர் இவரே ஆவார்.

அவர் தற்போது குடும்பத்துடன் டெல்லியில் வசித்து வருகிறார்.

நாடகங்கள்[தொகு]

  • லூஸ் வுமன் [11]
  • ஓம் ஸ்வாஹா
  • தஃபா எண். 180
  • கோல் தோ [12]
  • அ டீப் ஃப்ரைட் ஜாம்
  • ஹெட்ஸ் ஆர் மெண்ட் ஃபார் வாக்கிங் இன்டு
  • குவாலிட்டி ஸ்ட்ரீட்
  • தி நான்-ஸ்டாப் ஃபீல் குட் ஷோ
  • ஹேண்ட் ஓவர் ஃபிஸ்ட்- ஆணினத்தின் மீதான கண்ணோட்டங்கள்
  • லேடி மக்பத் ரீவிசிடட்
  • ராவணமா
  • வாக்
  • நாட் இன் மை நேம் [13]

மேற்கோள்கள்[தொகு]

  1. name="IT">"Theatre artist Maya Krishna Rao returns Sangeet Natak Akademi". இந்தியா டுடே. பார்க்கப்பட்ட நாள் 17 September 2018.
  2. name="ITF">"No other art that is as close to life as theatre". India Theatre Forum. 15 April 2014. Archived from the original on 8 ஜனவரி 2019. பார்க்கப்பட்ட நாள் 17 September 2018. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  3. name="ITF"
  4. name="SNA">"Sangeet Natak Akademi: All Awardees". Sangeet Natak Akademi. பார்க்கப்பட்ட நாள் 9 September 2018.
  5. name="IE">"Rage, in her name: Maya Krishna Rao, the face of protest theatre also wants to make audience laugh". https://indianexpress.com/article/lifestyle/art-and-culture/actor-maya-krishna-rao-the-face-of-protest-theatre-also-wants-to-make-audience-laugh-4762861/. பார்த்த நாள்: 9 September 2018. 
  6. name="SNA">"Sangeet Natak Akademi: All Awardees". Sangeet Natak Akademi. பார்க்கப்பட்ட நாள் 9 September 2018."Sangeet Natak Akademi: All Awardees". Sangeet Natak Akademi. Retrieved 9 September 2018.
  7. name="IT">"Theatre artist Maya Krishna Rao returns Sangeet Natak Akademi". இந்தியா டுடே. பார்க்கப்பட்ட நாள் 17 September 2018."Theatre artist Maya Krishna Rao returns Sangeet Natak Akademi". India Today. Retrieved 17 September 2018.
  8. name="IT"
  9. name="Arora">"Black, brown and in between". https://www.thehindu.com/entertainment/theatre/black-brown-and-in-between/article19807670.ece. பார்த்த நாள்: 17 September 2018. 
  10. name="Hindu">"Maya Krishna Rao". https://www.thehindu.com/books/maya-krishna-rao/article5642705.ece. பார்த்த நாள்: 9 September 2018. 
  11. https://indiaartfair.in/programme/maya-krishna-rao-loose-woman#:~:text=Loose%20Woman%20%E2%80%93%20directed%20and%20performed,her%20skin%2C%20as%20it%20were. {{cite web}}: Missing or empty |title= (help)
  12. name="Hindu">. https://www.thehindu.com/books/maya-krishna-rao/article5642705.ece. "Maya Krishna Rao". The Hindu. 1 February 2014. Retrieved 9 September 2018.
  13. . https://indianexpress.com/article/lifestyle/art-and-culture/actor-maya-krishna-rao-the-face-of-protest-theatre-also-wants-to-make-audience-laugh-4762861/. Nath, Dipanita (23 July 2017). "Rage, in her name: Maya Krishna Rao, the face of protest theatre also wants to make audience laugh". The Indian Express. Retrieved 9 September 2018.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மாயா_கிருஷ்ண_ராவ்&oldid=3925543" இலிருந்து மீள்விக்கப்பட்டது