சிமாமந்த நாகொசி அதிச்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
சிமாமந்த நாகோசி அதிச்சி

2013 இல் அதிச்சி
தொழில் எழுத்தாளர்
நாடு நைஜீரியன்
கல்வி நிலையம் கிழக்கு கனெக்டிகட் மாநில பல்கலைக்கழகம்
ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம்
யேல் பல்கலைக்கழகம்
எழுதிய காலம் 2003–தற்சமயம் வரை
குறிப்பிடத்தக்க
படைப்பு(கள்)
பர்பீள் ஹிபிஸ்கஸ்” (2003)
ஆப் யெல்லோ சன் (2006)
அமெரிக்கனா (2013)
துணைவர்(கள்) இவரா இசஜ்
பிள்ளைகள் 1

சிமாமந்த நாகொசி அதிச்சி ( Chimamanda Ngozi Adichie 15 செப்டம்பர் 1977) என்பவர் நைசீரிய எழுத்தாளர், புதின ஆசிரியர், நூலாசிரியர் மற்றும் பெண்ணியலாளர் ஆவார். மகார்த்தர் ஜீனியஸ் க்ராண்ட் என்னும் விருது 2008 இல் இவருக்கு வழங்கப்பட்டது. டைம் இதழ் இவரைப் பாராட்டி எழுதியது. இவை யல்லாமல் இன்னும் பல விருதுகள் பெற்றுள்ளார்.[1]

ஆரம்பகால வாழ்க்கையும் கல்வியும்[தொகு]

அதிச்சி நைஜீரிய நாட்டில் எனுகுவில் ந்சுக்காவில் இக்போ குடும்பமொன்றில் ஆறு குழந்தைகளில் ஐந்தாவது குழந்தையாக பிறந்தார்.[2] அதிச்சியின் தந்தை ஜேம்ஸ் நொய் அதிச்சி நைஜீரிய பல்கலைக்கழகத்தில் புள்ளிவிவர பேராசிரியராகவும், தாய் கிரேஸ் இஃபியோமா பல்கலைக்கழகத்தின் முதல் பெண் பதிவாளராகவும் பணியாற்றினார்.[3] நைஜீரிய உள்நாட்டு போரின் போது தாய் மற்றும் தந்தைவழி பாட்டன்மார்கள் உட்பட எல்லாவற்றையும் இவர்களது குடும்பம் இழந்தது.[4]

அதிச்சி இடைநிலைக் கல்வியை ந்சுக்கா நைஜீரியா பல்கலைக்கழக மேல்நிலைப் பள்ளியில் பயின்றார். ஒன்றரை ஆண்டுகளாக நைஜீரிய பல்கலைக்கழகத்தில் மருந்துவ மற்றும் மருந்தக துறைகளில் கல்வி கற்றார். இந்த காலகட்டத்தில், அவர் பல்கலைக்கழகத்தின் கத்தோலிக்க மருத்துவ மாணவர்களால் நடத்தப்படும் தி காம்பஸ் என்ற பத்திரிகையில் பணிபுரிந்துள்ளார். அதிச்சி அவரது பத்தொன்பதாவது வயதில் பிலடெல்பியாவில் உள்ள ட்ரெக்செல் பல்கலைக்கழகத்தில் தகவல் தொடர்பும், அரசியல் அறிவியல் படிப்பதற்காக நைஜீரியாவில் இருந்து அமெரிக்கா சென்றார். கனெக்டிகட்டின் கோவென்டிரியில் மருத்துவப் பயிற்சி பெற்ற தனது சகோதரி உச்சேயுடன் இருப்பதற்காக அவர் விரைவில் கிழக்கு கனெக்டின் மாநில பல்கலைக்கழகத்திற்கு மாற்றப்பட்டார்.[5]

கிழக்கு கனெக்டிகட் மாநில பல்கலைக்கழகத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றார். 2003 ஆம் ஆண்டில் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தில் படைப்பு எழுத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார். 2008 ஆம் ஆண்டில் யேல் பல்கலைக்கழகத்தில் ஆபிரிக்க ஆய்வுகளில் முதுகலைப் பட்டம் பெற்றார்.[6] 2016 ஆம் ஆண்டில் அவருக்கு ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தால் ஹொனரிஸ் கோசா கௌரவ பட்டம் வழங்கப்பட்டது.[7] 2018 ஆம் ஆண்டில் ஆம்ஹெர்ஸ்ட் கல்லூரியில் இருந்து டாக்டர் ஆஃப் ஹ்யூமன் லெட்டர்ஸ் என்ற கௌரவ பட்டம் பெற்றார்.[8]

2016 ஆம் ஆண்டு சூலையில் பைனான்சியஸ் டைம்ஸ் என்ற பத்திரிகைக்கு வழங்கிய நேர்காணலின் போது தனக்கு ஒரு பெண் மகள் இருப்பதை வெளிப்படுத்தினார்.[9]

எழுத்துப்பணி[தொகு]

அதிச்சி 1997 ஆம் ஆண்டில் கவிதைத் தொகுப்பொன்றையும், 1998 ஆம் ஆண்டில் பார் லவ் ஆப் பியாஃப்ரா என்ற நாடகமொன்றையும் வெளியிட்டார். 2002 ஆம் ஆண்டில் கெய்ன் பரிசிற்கான பட்டியிலில் இடம் பெற்றார்.[10] அவரது யூ இன் அமெரிக்கா, தட் ஹர்மட்டன் மார்னிங் ஆகிய கதைகள் 2002 ஆம் ஆண்டில் பிபிசி உலக சேவை சிறுகதை விருதுகளின் கூட்டு வெற்றிக்காக தேர்ந்தெடுக்கப்பட்டது. 2003 ஆம் ஆண்டில் தி அமெரிக்கன் எம்பசி என்ற சிறுகதைக்காக ஓ. ஹென்றி விருதையும், டேவிட் டி. வோங் சர்வதேச சிறுகதை பரிசையும் வென்றார்.[11] இவரது 2003 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட பர்பிள் ஹிபிஸ்கஸ் என்ற முதல் புதினம் பரந்தளவிலான நேர்மறை விமர்சனங்களைப் பெற்றதுடன் 2004 ஆம் ஆண்டின் புனைக்கதைகளுக்கான ஆரஞ்சு பரிசிற்கான பட்டியலில் இடம்பெற்றது. மேலும் 2005 ஆம் ஆண்டில் சிறந்த முதல் புத்தகத்திற்கான காமன்வெல்த் எழுத்தாளர்களின் பரிசு வழங்கப்பட்டது.[12]

2006 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட இவரது இரண்டாவது புதினமாகிய ஹாஃப் ஆப் எ யெல்லோ சன் 2007 ஆம் ஆண்டுக்கான ஆரஞ்சு பரிசு மற்றும் அனிஸ்பீல்ட் ஓநாய் புத்தக விருதை வென்றது.[13] மேலும் 2014 ஆம் ஆண்டில் இப்புதினத்தை தழுவி திரைப்படமொன்று எடுக்கப்பட்டது. அதிச்சியின் மூன்றாவது புத்தகமான தி திங் அவுண்ட் யுவர் நெக் என்பது 12 கதைகளின் தொகுப்பாகும். 2010 ஆம் ஆண்டில் தி நியூயார்க்கரின்  20 வயதுக்குட்பட்ட 40 புனைக்கதை எழுத்தாளர்களின் பட்டியலில் இடம்பெற்றார்.[14] அதிச்சியின் கதையான சீலிங் 2011 இன் சிறந்த அமெரிக்க சிறுகதைகளில் சேர்க்கப்பட்டது.  

2017 ஆம் ஆண்டில் அமெரிக்க கலை மற்றும் அறிவியல் அகாதமியின் 237 ஆம் வகுப்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார் என்று அறிவிக்கப்பட்டது. இது அமெரிக்காவில் புத்திஜீவிகளுக்கு வழங்கப்படும் மிக உயர்ந்த கௌரவங்களில் ஒன்றாகும்.[15] 2017 ஆம் ஆண்டில் மார்ச்சில் அவரது சமீபத்திய புத்தகம் வெளியிடப்பட்டது.[16]

எழுதிய புதினங்கள்[தொகு]

  • பர்பிள் இபிஸ்கஸ் 2003
  • ஹாப் ஆப் எ யெல்லோ சன் 2006
  • தி திங் அரௌண்ட் யுவர் நெக் 2009
  • அமெரிக்கனா 2013

மேற்கோள்[தொகு]