2012 தில்லி கும்பல்-வல்லுறவு வழக்கு
![]() அரசு விரைவாக இவ்வழக்கில் நடவடிக்கை எடுக்கக் கோரி தில்லி, இந்தியாவின் நுழைவாயிலில் போராட்டம் நடத்தியவர்கள். | |
நாள் | 16 திசம்பர் 2012 |
---|---|
நேரம் | இரவு 9:30 இந்திய நேரம் (ஒ.ச.நே + 05:30) |
நிகழிடம் | தில்லி, இந்தியா |
காயப்பட்டோர் | 1 (ஆண்) |
உயிரிழப்பு | 1 (பெண்) 29 திசம்பர் 2012 அன்று |
ஐயப்பாடு | இராம் சிங் முகேஷ் சிங் வினை சர்மா பவன் குப்தா அக்ஷை தாக்குர் 18 வயது நிரம்பாத மற்றொருவரின் பெயர் வெளியிடப்படவில்லை |
குற்றங்கள் | கற்பழிப்பு, கொலை, கடத்தல், களவு, தாக்குதல்[1] |
தண்டனை(கள்) | 4வருக்கு தூக்கு, இளம் குற்றவாளிக்கு 3 ஆண்டு சிறுவர் சீர் திருத்தப்பள்ளியில் இருக்கவேண்டுமென தண்டனை, இராம்சிங் தூக்கிட்டு தற்கொலை |
2012 தில்லி கும்பல்-வன்புணர்வு வழக்கு (2012 Delhi gang rape) என்பது தில்லியில் இயன்முறை மருத்துவம்[2] பயிலும் மாணவி ஆறு நபர்களால் பேருந்து ஒன்றில் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டதைக் குறிக்கிறது. அவரும் அவரது ஆண் நண்பரும் திரைப்படம் பார்த்துவிட்டு இரவு 9.30[2] மணியளவில் வீடு திரும்பும் போது இந்நிகழ்வு நடந்தது. இது திசம்பர் 16, 2012[3][4] அன்று தில்லியில் நடைபெற்றது. பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயர் டாமினி, நிர்பயா, அமானத் எனும் புனைப்பெயர்களால் குறிக்கப்பட்டார்.[5][6] செயற்கைச் சுவாச எந்திர உதவியுடன் இருந்த அவர், மிகவும் ஆபத்தானக் கட்டத்தில் 2012 திசம்பர் 26 அன்று சிங்கப்பூரில் உள்ள மவுண்ட் எலிசபெத் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டார். சிகிச்சை பலனளிக்காத நிலையில் 2012 திசம்பர் 29 அன்று உயிரிழந்தார். இவரின் பெயர் சோதி சிங் என்று இவரது தாய் 2015 திசம்பர் 16 அன்று கூறினார்.[7]
பொதுமக்கள் போராட்டம்[தொகு]
இச்சம்பவம் எதிர்த்து நாடு முழுவதும் மக்கள் தெருக்களில் போராட்டங்களை நடத்தினர். தில்லியில் குடியரசு மாளிகை அருகில் நடைபெற்ற போராட்டத்தைக் கட்டுப்படுத்த வஜ்ரா வாகனத்தைக் கொண்டு போராட்டக்காரர்கள் மீது தண்ணீர் பீய்ச்சியடிக்கப்பட்டது. கண்ணீர்புகை குண்டுகளும் உபயோகிக்கப்பட்டன. இச்சம்பவத்தில் காவல்துறைக் காவலர் ஒருவர் உயிரிழந்தார். இச்சம்பவத்தைத் தொடர்ந்து பிரதமர் நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்.[8] இப்பாலியல் வன்முறைக்குப் பிறகு கற்பழிப்பு வழக்குகளில் அதிகபட்ச தண்டனையான மரண தன்டனை வழங்கவேண்டும் என்று பல்வேறு அரசியல் கட்சிகளும் வலியுறுத்தின.[9].[10][11]
குற்றவாளிகள் கைது[தொகு]
- பேருந்து ஓட்டுநர் ராம்சிங்,
- ராம்சிங்கின் சகோதரர் முகேஷ்சிங்,
- வினய்ஷர்மா (உடற்பயிற்சியாளர்),
- பவன்குப்தா (பழ விற்பனையாளர்),
- அக்சய் குமார் சிங் தாகூர் (பேருந்து உதவியாளர் (கிளினர்))
- ஒரு சிறுவன்
என ஆறு நபர்களும் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டனர்.[12][13][14] 11 மார்ச் 2013இல் ராம்சிங் திகார் சிறையில் தூக்குமாட்டி இறந்துவிட்டார். 31 ஆகத்து 2013 அன்று இளம் குற்றவாளிக்கு தண்டனை கிடைத்தது, 13 செப்டம்பர் 2013 அன்று மற்ற நால்வருக்கும் தூக்கு தண்டனை கிடைத்தது. 2014 மார்ச்-சூன் மாதம் மேல்முறையீடு செய்ததில் தூக்குதண்டனை நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. தில்லி காவல்துறை கூற்றுப்படி ராம்சிங்கும், இளம் குற்றவாளியும் ஜோதி சிங்கை மிக மோசமாக தாக்கினார்கள்.[15]
இளம் குற்றவாளி[தொகு]
வல்லுறவில் குற்றம்சாட்டப்பட்டு தண்டனை அனுபவித்த இளம் குற்றவாளி மூன்று ஆண்டு சிறுவர் சீர்திருத்தப்பள்ளியில் தண்டனையாக இருந்தார். இளம் குற்றவாளிகள்(18 வயதுக்கு குறைவானவர்கள்) 3 ஆண்டுகளுக்கு மேல் தண்டனை பெற முடியாது.[16][17] குற்றம் நடந்த போது இவருக்கு 18 வயது முடியவில்லை. 2015 டிசம்பர் 20 ஞாயிறு அன்று விடுதலை செய்யப்பட்டார். பின் அவரின் பாதுகாப்பு கருதி அரசு சாரா அமைப்பிடம் ஒப்படைக்கப்பட்டார்.[18]
உயிரிழப்பு[தொகு]
சிங்கப்பூரிலுள்ள மருத்துவமனையில் [19] அந்த மாணவிக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வந்த நிலையில் உடலில் முக்கிய உறுப்புகள், மூளை செயல் இழந்ததை அடுத்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 29 திசம்பர் 2012 அன்று இந்திய நேரப்படி அதிகாலை 2.15 மணிக்கு அந்த மாணவியின் உயிர் பிரிந்தது.[20][21][22]
தண்டனை[தொகு]
குற்றம் நடக்கும் போது 17 வயது உடையவர் சிறுவனாக கருதப்பட்டு 3 ஆண்டுகள் சீர்திருத்தப்பள்ளியில் இருக்கும்படி தண்டனை அளிக்கப்பட்டார். சிறுவர்கள் குற்றம் செய்தால் 3 ஆண்டுகள் என்பது தான் அதிகபட்ச தண்டனை ஆகும்.[23][24] இராம் சிங் சிறையிலேயே தூக்கிட்டுக்கொண்டார் [25] தில்லி விரைவு உயர்நீதிமன்றத்தில் [26] நடந்த வழக்கில் நால்வர் (முகேஷ் சிங், வினய் சர்மா, பவன் குப்தா) தூக்கு தண்டனை பெற்றனர், பேருந்து உதவியாளர் அக்சய் குமார் குற்றத்திலிருந்து விடுவிக்கப்பட்டார்.[27] சில செய்தி தளங்கள் அக்சய் குமாருக்கும் தூக்கு தண்டனை கிடைத்தது என்கின்றன.[26][28][29] அக்ஷய் தாகூர், வினய் சர்மா, பவன் குப்தா, முகேஷ் ஆகிய 4 பேரும் தங்களுக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனையை எதிர்த்து, தில்லி உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். அந்த மேல்முறையீட்டை தள்ளுபடி செய்த உயர் நீதிமன்றம், 2015-ஆம் ஆண்டு 4 பேரின் தூக்கை உறுதிப்படுத்தியது. இதையடுத்து, நால்வரும் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டுக்கு சென்றனர். அங்கு சுமார் ஓராண்டு காலமாக நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, ஆர். பானுமதி மற்றும் அசோக் பூஷண் அமர்வு இவ்வழக்கை விசாரித்தது. இறுதியாக 5 , மே 2017 இல் , தீர்ப்பு வழங்கப்பட்டது. அரிதினும் அரிதான வழக்காக இது கருதப்பட்டு தூக்கு தண்டனையை உச்ச நீதிமன்றம் உறுதிப்படுத்தியது.[30][31] அதன்பின் கடைசியாக ஆளுநர், உள்துறை அமைச்சகம், குடியரசுத் தலைவருக்கு கருணை மனு அனுப்பி பார்த்தனர். அதுவும் குற்றவாளிகளுக்கு பலன் அளிக்கவில்லை. அதன்பின் மீண்டும் சர்வதேச நீதிமன்றம் வரை சென்றார்கள். ஆனால் அதுவும் குற்றவாளிகளுக்கு சாதகமாக அமையவில்லை.
தண்டனை நிறைவேற்றம்[தொகு]
பின்னர் மார்ச் 20, 2020 அன்று அதிகாலை 5.30 மணிக்கு தூக்கு தண்டனையை நிறைவேற்ற நாள் குறிக்கப்பட்டது. அன்றும் கூட குற்றவாளி பவன் குப்தா சார்பில் தொடுக்கப்பட்ட வழக்கு தில்லி உயர்நீதிமன்றத்தில் நடந்தது. அதன்பின் உச்ச நீதிமன்றத்திற்கு இந்த வழக்கு சென்றது. அதிகாலை 2.30 மணிக்கு இந்த வழக்கு விசாரணை அவசர அவசரமாக நடந்தது. அன்று இந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் அதிகாலை 3.30 மணிக்கு தீர்ப்பை வழங்கியது. அதில் 4 குற்றவாளிகளின் கருணை மனுவை நிராகரித்தது தவறு இல்லை என்றும் அவர்களை தூக்கில் போடுவதற்கு தடை விதிக்க முடியாது என்றும் தூக்கு தண்டனையை இன்றே நிறைவேற்றலாம் என்றும் உத்தரவிட்டது.
பின்னர் அதிகாலை 5.30 மணிக்கு குற்றவாளிகளான அக்சய் குமார் சிங், வினய் குமார் சர்மா, பவன் குப்தா, முகேஷ் சிங் ஆகிய நான்கு பேரும், தில்லி திகார் சிறையில் தூக்கிலிடப்பட்டனர்.[32][33]
ஆவணப்படம்[தொகு]
இவரைப்பற்றி பிபிசி இந்தியாவின் மகள் (India's Daughter) என்ற பெயரில் ஓர் ஆவணப்படம் தயாரித்தது. லெசுலி உட்வின் என்பவர் இப்படத்தை எடுத்தார். அவர் குற்றவாளி ஒருவருடன் (முகேஷ் சிங்) எடுத்த பேட்டி மூலம் குற்றவாளியின் எண்ணமும் இதில் பதியப்பட்டுள்ளது. மற்ற குற்றவாளிகளுடனும் இவர் பேசி இவ்வாவணப்படத்தை தயாரித்துள்ளார். இவ்வாவணத்தை என்டிடிவி காட்டுவதாக இருந்தது. இந்தியா இவ்வாவணப்படத்தை தடை செய்துவிட்டது. ஆனால் இந்தியா தவிர மற்ற நாடுகளில் பிபிசி இவ்வாவணப்படத்தை ஓளிபரப்பியது.[34] குற்றவாளிகள் வசித்த சேரிப்பகுதியில் இவ்வாவணப்படம் தனி நபரால் காட்டப்பட்டது.[35]
கருத்துகள்[தொகு]
2014இல் மாநில சுற்றுலா மந்திரிகள் மாநாட்டில் உரையாற்றிய மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி, இதை 'ஒரு சிறிய சம்பவம்‘ என்றும், இதனால் சுற்றுலாப் பயணிகள் வராததால் கோடிக்கணக்கில் இழப்பு ஏற்பட்டது என்றும் கூறினார்.[36]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ Gardiner Harris (3 சனவரி 2013). "Murder Charges Are Filed Against 5 Men in New Delhi Gang Rape". த நியூயார்க் டைம்ஸ். http://www.nytimes.com/2013/01/04/world/asia/murder-charges-filed-against-5-men-in-india-gang-rape.html?hp&_r=0. பார்த்த நாள்: 3 சனவரி 2013.
- ↑ 2.0 2.1 Sikdar, Shubhomoy (23 December 2012). "Delhi gang-rape: victim narrates the tale of horror". The Hindu. http://www.thehindu.com/news/national/delhi-gangrape-victim-narrates-the-tale-of-horror/article4230038.ece. பார்த்த நாள்: 24 December 2012.
- ↑ Mandhana & Trivedi 2012.
- ↑ HT 2012a.
- ↑ Roy, Sandip (24 December 2012). "Why does media want to give Delhi gangrape victim a name – Page 1 | Firstpost". M.firstpost.com. http://m.firstpost.com/life/why-does-media-want-to-give-delhi-gangrape-victimname-567444.html. பார்த்த நாள்: 2012-12-26.
- ↑ IANS 4.
- ↑ My daughter’s name was Jyoti Singh. Not ashamed to name her: Nirbhaya’s mother
- ↑ http://dinamani.com/india/article1393067.ece
- ↑ http://dinamani.com/india/article1400288.ece
- ↑ http://www.bbc.co.uk/news/world-asia-india-20835197
- ↑ http://www.bbc.co.uk/news/world-asia-india-20863994
- ↑ http://news.vikatan.com/index.php?nid=11693#cmt241[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" இம் மூலத்தில் இருந்து 2012-12-29 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20121229221415/http://dinakaran.com/News_Detail.asp?Nid=35340.
- ↑ "Delhi juvenile gang rapist freed amid protests". பிபிசி. http://www.bbc.com/news/world-asia-35144633. பார்த்த நாள்: 20 திசம்பர் 2015.
- ↑ "Delhi Gang-Rape: Minor Was Allegedly The Most Brutal Among Accused; Will India Amend Juvenile Justice Act?". ibtimes. http://www.ibtimes.com/delhi-gang-rape-minor-was-allegedly-most-brutal-among-accused-will-india-amend-juvenile-justice-act. பார்த்த நாள்: 20 திசம்பர் 2015.
- ↑ "Delhi Gang-Rape: Youngest Convict Free, Protesters Detained At India Gate (9வது குறிப்பை படிக்கவும்)". NDTV. http://www.ndtv.com/cheat-sheet/youngest-convict-in-delhi-gangrape-to-be-released-girls-family-plans-protests-1256978?pfrom=home-lateststories. பார்த்த நாள்: 20 திசம்பர் 2015.
- ↑ "The Minimum Age of Criminal Responsibility in India: Is it to be blamed for the increasing youth crime? by Stuti Bhatia". rostrumlegal. இம் மூலத்தில் இருந்து 2016-03-05 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160305024349/http://rostrumlegal.com/the-minimum-age-of-criminal-responsibility-in-india-is-it-to-be-blamed-for-the-increasing-youth-crime-by-stuti-bhatia/. பார்த்த நாள்: 20 திசம்பர் 2015.
- ↑ "Delhi gangrape: Protests at India Gate as juvenile offender walks free; parents injured during detention". indianexpress. http://indianexpress.com/article/india/india-news-india/december-16-gangrape-protest-against-juveniles-release-parents-question-govt-demand-justice/. பார்த்த நாள்: 20 திசம்பர் 2015.
- ↑ "Indian victim of gang rape dies in hospital in Singapore". theguardian. http://www.theguardian.com/world/2012/dec/28/indian-gang-rape-dies-singapore. பார்த்த நாள்: 20 திசம்பர் 2015.
- ↑ http://www.thehindu.com/news/national/delhi-gangrape-victim-succumbs-to-injuries/article4250043.ece?homepage=true
- ↑ http://www.dnaindia.com/india/report_delhi-gang-rape-victim-dies-in-singapore-hospital_1782943
- ↑ http://www.maalaimalar.com/2012/12/29082317/delhi-student-died.html[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ http://www.bbc.co.uk/news/world-asia-india-23908176
- ↑ Delhi gang-rape: Juvenile gets 3-yrs in remand home, victim's family says 'not happy
- ↑ "Ram Singh was killed and later hanged, alleges his lawyer" இம் மூலத்தில் இருந்து 2013-09-13 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20130913231358/http://www.hindustantimes.com/India-news/DelhiGangrape/Ram-Singh-was-killed-and-later-hanged-alleges-his-lawyer/Article1-1024371.aspx. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" இம் மூலத்தில் இருந்து 2013-09-13 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20130913231358/http://www.hindustantimes.com/India-news/DelhiGangrape/Ram-Singh-was-killed-and-later-hanged-alleges-his-lawyer/Article1-1024371.aspx.
- ↑ 26.0 26.1 Delhi gangrape: Sequence of events
- ↑ Profiles: Delhi gang rapists
- ↑ Delhi gang rape: Four sentenced to death
- ↑ Delhi gangrape case verdict: All four accused held guilty of rape, murder
- ↑ "குற்றம் கொடூரமானது; கருணை காட்ட எந்த முகாந்திரமும் இல்லை’ நிர்பயா வழக்கில் 4 பேருக்கும் தூக்குத் தண்டனை! தீர்ப்பை உறுதிப்படுத்தியது உச்ச நீதிமன்றம்". தீக்கதிர். https://theekkathir.in/2017/05/05/%e0%ae%95%e0%af%81%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%95%e0%af%8a%e0%ae%9f%e0%af%82%e0%ae%b0%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a9%e0%ae%a4%e0%af%81-%e0%ae%95%e0%ae%b0%e0%af%81/. பார்த்த நாள்: 6 மே 2017.[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ [supremecourtofindia.nic.in/FileServer/2017-05-05_1493976928.pdf "judgment - Supreme Court of India"]. Supreme Court of India. supremecourtofindia.nic.in/FileServer/2017-05-05_1493976928.pdf. பார்த்த நாள்: 6 மே 2017.
- ↑ "நிர்பயா வழக்கு: குற்றவாளிகள் 4 பேரும் டெல்லி திஹார் சிறையில் காலை 5.30 மணிக்கு தூக்கிலிடப்பட்டனர்". https://www.hindutamil.in/news/india/545032-nirbhaya-case-four-convicts-hanged-at-delhi-s-tihar-jail-for-2012-gang-rape-and-murder.html. இந்து தமிழ் (20 மார்ச், 2020)
- ↑ நிர்பயா வழக்கு: நால்வரும் தூக்கிலிடப்பட்டனர்
- ↑ "'India's Daughter,' the film banned by India: What did it show?". சிஎன்என். http://www.cnn.com/2015/03/05/asia/bbc-india-documentary/. பார்த்த நாள்: 20 திசம்பர் 2015.
- ↑ "Banned film India's Daughter shown in rapists' slum". பிபிசி. http://www.bbc.com/news/world-asia-india-31865477. பார்த்த நாள்: 20 திசம்பர் 2015.
- ↑ "தில்லியில் மாணவி மீது கும்பல் பாலியல் வல்லுறவு ‘ஒரு சிறிய சம்பவமே!’ :: அருண்ஜெட்லி இழி கருத்து". தீக்கதிர் தமிழ் நாளிதழ்: pp. 1. 23 ஆகத்து 2014 இம் மூலத்தில் இருந்து 2016-03-05 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160305161703/http://epaper.theekkathir.org/news.aspx?newsid=76052. பார்த்த நாள்: 23 ஆகத்து 2014.