உள்ளடக்கத்துக்குச் செல்

மான்போர்ட் பள்ளி, ஏற்காடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மான்போர்ட் மேல்நிலைப்பள்ளி
மான்போர்ட் பள்ளி தேவாலயம்
அமைவிடம்
ஏற்காடு
சேலம் 636601
இந்தியா
அமைவிடம்11°46′18″N 78°12′35″E / 11.771726°N 78.209642°E / 11.771726; 78.209642
தகவல்
வகைஅரசு உதவிபெறும் பள்ளி
குறிக்கோள்Virtue and Labour
காவல் புனிதர்(கள்)புனித லூயிஸ் கிரிக்னியன் டி மான்ட்ஃபோர்ட்
தொடக்கம்1917
நிறுவனர்ரெவ். சகோ. ஏஜின் மேரி
வேளைஒற்றை
அதிபர்ரெவ். சகோ. டொமினிக் சவியோ
பணிக்குழாம்25
பீடம்35
நிறங்கள்          நீலம் மற்றும் பொன்நிறம்
இணையம்
மான்போர்ட் பள்ளி சிலை

மான்போர்ட் பள்ளி (Montfort School, Yercaud) என்பது தென்னிந்தியாவின், தமிழ்நாட்டின், சேலம் அருகே உள்ள ஏற்காட்டில் புனித கேப்ரியல் மாண்ட்போர்ட் பிரதர்ஸ் நடத்தும் ஒரு இருபாலர் பள்ளியாகும் . பள்ளியின் குறிக்கோளுரையாக Virtus Et Labour உள்ளது. இது "நல்லொழுக்கம் மற்றும் உழைப்பு" என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. சீருடை வண்ணங்கள் நீலம் மற்றும் பொன் நிறம்.

இந்தப் பள்ளியானது ஏர்க்காடு சிறிய ஏரியின் பக்கமாக நேர் கிழக்கில் அமைந்துள்ளது. ஏர்க்காட்டில் தோட்ட முதலாளிகளாக விளங்கிய ஆங்கிலோ இந்தியர்களின் குழந்தைகளுக்கு மேலைநாட்டு முறையில் ஒரு கல்விக்கூடம் தேவைப்பட்டது. திருவாளர் ஏஜீன் என்ற கத்தோலிக்கப் பாதிரியார் கி. பி. 1917-இல் இப்பள்ளியைத் துவக்கினார். துவக்கும்போது ஏழுமாணவர்களே சேர்ந்தனர். இங்கு மாணவர் விடுதி உள்ளது இங்கு வெளியூர் மாணவர்கள் பலர் தங்கிப் பயிலுகின்றனர். இப்பள்ளி இப்பொழுது புனித கிப்ரியல் திருச்சபையாரால் நடத்தப்படுகிறது. சிறந்த ஆங்கிலப் பயிற்சியும், கலைப் பயிற்சியும், இங்கு அளிக்கப்படுகின்றன. ஒரு காலத்தில் இராக், சையாம், கேரளம், இலங்கை, மலேயா, முதலிய நாடுகளிலிருந்தும், இந்தியாவின் எல்லாப் பகுதிகளிலிருந்தும் மாணவர்கள் இங்குவந்து கல்வி கற்றனர்.[1]

குறிப்பிடத்தக்க முன்னாள் மாணவர்கள்

[தொகு]
  • மோகன் சிவானந்த் ஆசிரியர், ரீடர்ஸ் டைஜஸ்ட் இந்தியா இதழ்
  • அன்புமணி ராமதாஸ் - முன்னாள் மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சர்
  • சசி தரூர் - முன்னாள் வெளியுறவு அமைச்சர்
  • ஜான் விக்டர் கென்னடி (சியான் விக்ரம் ) - நடிகர்
  • ரோஜர் பின்னி - 1983 உலகக் கோப்பை வென்ற இந்திய கிரிக்கெட் அணியில் ஆல் ரவுண்டர்
  • நாகேஷ் குக்குனூர், திரைப்பட தயாரிப்பாளர்
  • ஜோஸ் கே. மணி, அரசியல்வாதி
  • ஆகாஷ் ஸ்கைப்ளிட்ஸ், சிஎஸ்: ஜிஓ குளோபல் எலைட்
  • ஷானவாஸ், நடிகர்
  • ஜேக்ஸ் பெஜாய் - இசை இயக்குநர், மலையாளத் திரைப்படத் தொழில்

குறிப்புகள்

[தொகு]
  1. "தமிழகத்தில் குறிஞ்சி வளம், நூல், கவிஞர் முருகு சுந்தரம், பக்கம், 13-50". பழனியப்பா பிரதர்ஸ். பார்க்கப்பட்ட நாள் 17 நவம்பர் 2020.

வெளி இணைப்புகள்

[தொகு]