உள்ளடக்கத்துக்குச் செல்

மானாமதுரை சோமநாதசுவாமி கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அருள்மிகு சோமநாதசுவாமி கோவில்
ஆனந்தவள்ளி சோமநாதர் திருக்கல்யாணம்
ஆள்கூறுகள்:9°41′36.6″N 78°27′07.9″E / 9.693500°N 78.452194°E / 9.693500; 78.452194
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:சிவகங்கை
அமைவிடம்:கீழரதவீதி, மானமதுரை, மானமதுரை வட்டம்[1]
சட்டமன்றத் தொகுதி:மானாமதுரை
மக்களவைத் தொகுதி:சிவகங்கை
ஏற்றம்:94 m (308 அடி)
கோயில் தகவல்
மூலவர்:சோமநாத சுவாமி
தாயார்:ஆனந்தவள்ளி அம்மன்
சிறப்புத் திருவிழாக்கள்:8ம் திருநாள் மற்றும் 9ம் திருநாள்
வரலாறு
கட்டிய நாள்:பத்தாம் நூற்றாண்டு[சான்று தேவை]

மானாமதுரை சோமநாதசுவாமி கோயில் (Manamadurai Someswarar Temple, Sivaganga) தமிழ்நாட்டில் சிவகங்கை மாவட்டம், மானாமதுரை என்னும் ஊரில் அமைந்துள்ள சிவன் கோயிலாகும்.[1]

அமைவிடம்

[தொகு]

கடல் மட்டத்திலிருந்து சுமார் 94 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள இக்கோயிலின் புவியியல் ஆள்கூறுகள்: 9°41'36.6"N, 78°27'07.9"E (அதாவது, 9.693502°N, 78.452205°E) ஆகும்.[2]

வரலாறு

[தொகு]

இக்கோயில் பத்தாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.[சான்று தேவை]

கோயில் அமைப்பு

[தொகு]

இக்கோயிலில் சோமநாத சுவாமி, ஆனந்தவள்ளி அம்மன் சன்னதிகளும், விநாயகர், சுப்பிரமணியர், பைரவர், சதாசிவ பிரம்மேந்திராள் உபசன்னதிகளும் உள்ளன. இங்குக் கோயில் தேர், கோயில் கல்வெட்டு போன்றவை உள்ளன. இக்கோயிலில் ஐந்து நிலை கொண்ட ராஜகோபுரம் உள்ளது. இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அறங்காவலர்களால் நிர்வகிக்கப்படுகிறது.[3]

தொன்மம்

[தொகு]

சந்திரன் 27 நட்சத்திங்களை மனைவிகளாகக் கொண்டிருக்கிறான். அந்த மனைவிகளில் ரோகிணி, கார்த்திகை ஆகிய இருவர் மீது மட்டும் மிகுதியான அன்புகொண்டவனாக இருக்கிறான். இதைக்கண்டு கோபமுற்ற அவனது மற்ற மனைவிகள் இதுபற்றி தம் தந்தை தட்சனிடம் முறையிடுகின்றனர். இதைக் கேட்டு சினமடைந்த தட்சன், சந்திரனுக்குச் சாபம் கொடுக்கிறான். சாபத்தினால் வெப்பு நோயால் பாதிக்கப்பட்டு, சந்திரன் தேயத் தொடங்குகிறான். தன் சாபத்துக்கு விமோச்சனம் என்றவென்று அகத்தியரிடம் சந்திரன் கேட்கிறான். அதற்கு அவர் வடக்கில் இருந்து தெற்கு நோக்கிப் பாயும் ஆற்றின் மேற்குக் கரையில் உள்ள வில்வ வனத்தில் உள்ள லிங்கத்தை கோயில்கட்டி வணங்கினால் இந்தப்பிணி நீங்கும் என்று கூறினார். அதன்படியே சந்திரனும் செய்து தன் பிணியை நீக்கிக்கொண்டான். மேலும் சந்திரனின் வேண்டுகோளுக்கு இணங்க, சிவபெருமான் தன் திருமுடியில் சந்திரனுக்கு இடம் தந்ததாக கோயில் தல வரலாறு தெரிவிக்கிறது.[4]

பூசைகள்

[தொகு]

இக்கோயிலில் காரணாகம முறைப்படி நான்கு காலப் பூசைகள் நடக்கின்றன. சித்திரை மாதம் 8ம் திருநாள் மற்றும் 9ம் திருநாள் முக்கிய திருவிழாவாக நடைபெறுகிறது. ஆடி மாதம் திருவிழா நடைபெறுகிறது. சித்திரை மாதம் தேரோட்டம் நடைபெறுகிறது. மார்கழி மாதம் தேய்பிறை அஷ்டமியன்று உலக ஜீவராசிகளுக்கு படியளக்கும் விழா நடத்தப்படுகிறது.[5]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 1". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் 19 பெப்ரவரி 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. அருள்மிகு சோமேஸ்வரர் திருக்கோயில், தினமலர் கோயில்கள்
  3. "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 2". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் 19 பெப்ரவரி 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  4. ஸ்ரீபுரம் சுப்ரமணியன் (26 ஏப்ரல் 2018). "மானாமதுரையில் வீர அழகர்". கட்டுரை. தி இந்து தமிழ். பார்க்கப்பட்ட நாள் 21 சூன் 2018. {{cite web}}: Check date values in: |date= (help)
  5. "ஆனந்தவல்லி சோமநாதர் கோயிலில் ஜீவராசிகளுக்கு படியளக்கும் விழா". செய்தி. தினகரன். 14 சனவரி 2015. பார்க்கப்பட்ட நாள் 21 சூன் 2018.