மாத்திசு வக்கர்னாகல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மாத்திசு வக்கர்னாகல்
பிறப்புநவம்பர் 10, 1962
கல்விமுனைவர், சமூக மற்றும் பிரதேசத் திட்டமிடல்
பணிசெயலாக்க நெறியாளர்
பணியகம்உலக அடித்தட வலையமைப்பு
அறியப்படுவதுசூழலியல் அடித்தடம் என்னும் கருத்துருவின் வளர்ச்சிக்குப் பங்களித்தார்.
வலைத்தளம்
http://footprintnetwork.org/

மாத்திசு வக்கர்னாகல் (Mathis Wackernagel) (பிறப்பு: நவம்பர் 10, 1962), சுவிட்சர்லாந்தில் பிறந்த ஒரு பேண்தகுநிலை ஆர்வலர் ஆவார். இவர் தற்போது உலக அடித்தட வலையமைப்பு என்னும் நிறுவனத்தின் செயலாக்க நெறியாளர் பதவியில் உள்ளார். இந் நிறுவனம், கலிபோர்னியாவின் ஆக்லாந்திலுள்ள, பேண்தகுநிலை தொடர்பான அளவை முறைகளை உருவாக்கிப் பிரபலப்படுத்துவதில் ஈடுபட்டுள்ள இலாப நோக்கற்ற நிறுவனம் ஆகும்.

சுவிஸ் கூட்டாட்சித் தொழில்நுட்ப நிறுவனத்தில், இயந்திரப் பொறியியல் பட்டம் பெற்ற இவர், கனடாவின் வான்கூவரில் உள்ள பிரித்தானிய கொலம்பியாப் பல்கலைக்கழகத்தின், சமூக மற்றும் பிரதேசத் திட்டமிடல் கல்லூரியில் முனைவர் பட்டம் பெற்றார். அங்கே வில்லியம் ரீசின் கீழ் ஆய்வுக் கட்டுரைக்காக அவர் செய்த ஆய்வுகளின்போது முன்னர் வில்லியம் ரீசு உருவாக்கிய சூழலியல் அடித்தடம் என்னும் கருத்துருவை வளர்த்து எடுத்ததுடன், அதனைக் கணிப்பிடுவதற்கான வழிமுறைகளை உருவாக்குவதிலும் ஈடுபட்டார்.

வெளியிணைப்புக்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மாத்திசு_வக்கர்னாகல்&oldid=3224381" இலிருந்து மீள்விக்கப்பட்டது