வில்லியம் ரீசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
வில்லியம் ரீசு
William Rees Oct 2008.jpg
பிறப்பு டிசம்பர் 18, 1943
கல்வி முனைவர் மக்கள்தொகைச் சூழலியல்
பணி கல்வியாளர்
அறியப்படுவது சூழலியல் அடித்தடம் என்னும் கருத்துருவை உருவாக்கியமை
பட்டம் பேராசிரியர்
பிள்ளைகள் இசுட்டீபன், லியாம்

வில்லியம் ரீசு (William Rees) (பிறப்பு: டிசம்பர் 18, 1943) பிரித்தானிய கொலம்பியாப் பல்கலைக்கழகத்தில் ஒரு பேராசிரியர் ஆவார். இவர் அப் பல்கலைக்கழகத்தின் சமூக மற்றும் பிரதேசத் திட்டமிடல் கல்லூரியின் முன்னாள் நெறியாளரும் ஆவார். 1969-70 ஆம் ஆண்டிலிருந்து இப் பல்கலைக்கழகத்தில் கற்பித்து வரும் இவரது முதன்மை ஆர்வம் பேண்தகுநிலைச் சமூக பொருளியல் வளர்ச்சிக்கான சூழலியல் நிலைமைகள், உலக சூழல்சார் போக்குகள் என்பவை சார்ந்த பொதுத்துறைக் கொள்கை, திட்டமிடல் என்பவை தொடர்பானது ஆகும். சூழலியல் அடித்தடம் என்னும் கருத்துருவை உருவாக்கியதுடன், அதைக் கணிக்கும் வழிமுறைகளை உருவாக்கியதிலும் இவர் பெரும்பங்கு வகித்தார்.

வெளியிணைப்புக்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=வில்லியம்_ரீசு&oldid=2215253" இருந்து மீள்விக்கப்பட்டது