மாணிக் வர்மா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மாணிக் வர்மா
பிறப்பு16 மே 1926
இறப்பு10 நவம்பர் 1996 (வயது 70)
பணிபாடுதல்
விருதுகள்பத்மசிறீ (1974)
சங்கீத நாடக அகாதமி விருது (1986)

மாணிக் வர்மா (Manik Varma) (16 மே 1926 - 10 நவம்பர் 1996) கிரானா மற்றும் ஆக்ரா கரானாக்களின் (பள்ளிகள்) ஒரு இந்துஸ்தானி இசைப் பாடகராவார்.

தொழில்[தொகு]

தூய பாரம்பரிய கியாலைத் தவிர, தும்ரி, மராத்தி சங்கீத நாடகம், பாவகீதம், பக்தி கீதம் போன்ற அரை-பாரம்பரியத்தையும், மெல்லிசையையும் பாடினார். இவர் கிரானா கரானாவின் நிறுவனர் அப்துல் கரீம் கானின் மகளும், மகனுமான கிராபாய் பரோடேகர், சுரேஷ்பாபு மானே ஆகியோரின் சீடராக இருந்தார். அஸ்மத் உசேன் கான், ஆக்ரா கரானாவின் ஜெகநாத்புவா புரோகித் ஆகியோரிடமிருந்தும் இவர் மேலும் பயிற்சி பெற்றார். [1] [2]

ஏப்ரல் 1955 இல், இந்து கடவுளான இராமனின் மீதான இவரது பாடல்கள் கீத ராமாயணத்தின் ஒரு பகுதியாக மாறியது. இது புனேவின் அனைத்திந்திய வானொலியின் வாராந்திர ஆண்டு நிகழ்ச்சியாகும். லதா மங்கேஷ்கர், யோகினி ஜோக்லேகர், உஷா போன்ற கலைஞர்களுடன் ஆத்ரே, பாபன்ராவ் நவ்திகர், சுதிர் பத்கே ஆகியோருடன் இணைந்து இவர் நிகழ்த்தியிருந்தார். [3]

இவர் ஆஷா கதில்கர், சைலா தாதர் உள்ளிட்ட மாணவர்களுக்கு பயிற்சி அளித்தார்.

தனிப்பட்ட வாழ்க்கை[தொகு]

இவரது இயற்பெயர் மாணிக் தாதர்கர் என்பதாகும். இவரது மகள்களில் இராணி வர்மா, ஒரு பாடகர், அருணா ஜெய்பிரகாஷ், பாரதி ஆக்ரேக்கர், ஒரு நடிகர், மற்றும் மராத்தி மேடை, திரைப்பட மற்றும் தொலைக்காட்சி நடிகர் வந்தனா குப்தே ஆகியோர் அடங்குவர். [4] [5]

விருதுகள்[தொகு]

இவர் 1974 ஆம் ஆண்டில் இந்திய அரசாங்கத்திடமிருந்து மதிப்புமிக்க பத்மசிறீ விருதைப் பெற்றார். [6] அதைத் தொடர்ந்து 1986 ஆம் ஆண்டில் இந்தியாவின் இசை, நடனம் மற்றும் நாடகத்திற்கான தேசிய அகாதமியான சங்கீத நாடக அகாதமி வழங்கிய சங்கீத நாடக அகாதமி விருதினைப் பெற்றார். [7]

மரியாதை[தொகு]

இவரது நினைவாக மாணிக் வர்மா பிரதிஷ்டான் என்பது மும்பையில் நிறுவப்பட்டது. இது மாணிக்க ரத்னா விருது மற்றும் உதவித்தொகைகளையும் வழங்குகிறது. இது இவரது பிறப்பு மற்றும் இறப்பு ஆண்டு விழாவையும் ஏற்பாடு செய்கிறது. [8] [9] இவரது எட்டாவது நினைவு நாளான 12 நவம்பர் 2004 அன்று, புனேவில் உள்ள திலக் சமாரக மந்திரில் தேவர்கந்தர்வ பக்லேபுவா அறக்கட்டளை 'பகர்லா பாரிசாத தாரி' என்ற இசை நிகழ்ச்சியை வழங்கியது. [4] [5]

குறிப்புகள்[தொகு]

  1. Manuel, Peter (1989). Thumri in Historical and Stylistic Perspectives. Motilal Banarsidass. பக். 86. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:81-208-0673-5. https://books.google.com/books?id=PlNShmx3x68C&pg=PA86. 
  2. Deshpande, Vaman Hari (1989). Between two tanpuras. Popular Prakashan. பக். 151. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-86132-226-6. https://books.google.com/books?id=-EkDt0Gboe8C&q=manik+varma&pg=PA114. 
  3. "Yesterday once more as Geet Ramayan turns 50". The Indian Express. 25 January 2005. http://cities.expressindia.com/fullstory.php?newsid=115249. [தொடர்பிழந்த இணைப்பு]
  4. 4.0 4.1 . 
  5. 5.0 5.1 . 15 November 2005. [தொடர்பிழந்த இணைப்பு]
  6. "Padma Awards Directory (1954–2009)" (PDF). Ministry of Home Affairs. Archived from the original (PDF) on 10 May 2013.
  7. "SNA: List of Akademi Awardees". சங்கீத நாடக அகாதமி Official website. Archived from the original on 17 February 2012.
  8. "Stars shine down". The Indian Express. 7 November 1998. http://www.indianexpress.com/res/web/pIe/ie/daily/19981107/31151634.html. 
  9. "Melodies for your soul: Music". The Indian Express. 6 November 2003. http://cities.expressindia.com/local-news/archivefullstory.php?newsid=67369&creation_date=2003-11-06. [தொடர்பிழந்த இணைப்பு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மாணிக்_வர்மா&oldid=3712659" இலிருந்து மீள்விக்கப்பட்டது