சுரேஷ்பாபு மானே

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சுரேஷ்பாபு மானே
இயற்பெயர்அப்துல் ரகுமான் கான்
பிறப்பு1902
மும்பை, மகாராட்டிரம்
இறப்பு1953 (அகவை 50–51)
புனே, மகாராட்டிரம்
இசை வடிவங்கள்இந்துஸ்தானி இசை
தொழில்(கள்)பாடகர், நடிகர், இசை பயிற்றுனர்

சுரேஷ்பாபு மானே ( 1902–15 பிப்ரவரி 1953) இவர் இந்தியாவின் முக்கிய இந்துஸ்தானி பாரம்பரிய இசைப் பாடகராவார். இவர் கிராணா கரானாவின் (பாடும் பாணி) ஒரு மேதையான உஸ்தாத் அப்துல் கரீம் கான் என்பவரின் மகனாவார்.

ஆரம்பகால வாழ்க்கை மற்றும் பயிற்சி[தொகு]

இவர், அப்துல் ரகுமானாக உஸ்தாத் அப்துல் கரீம் கோன் மற்றும் தாராபாய் மானே ஆகியோருக்கு பிறந்தார். [1] தாராபாய் 19 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் சுதேச பரோடா மாநிலத்தின் " ராஜமாதா "வின் சகோதரரான சர்தார் மாருதி ரியோ மானின் மகளவார். தாராபாய் இளமையாக இருந்தபோது பரோடாவில் அரசவை இசைக்கலைஞராக உஸ்தாத் அப்துல் கரீம் கான் இருந்தார்.

சுரேஷ்பாபு தனது ஆரம்ப பயிற்சியை தனது தந்தையிடமிருந்து பெற்றார். பின்னர் கிரானா கரானாவின் மேதையான, உஸ்தாத் அப்துல் வாகித் கானிடமிருந்து பயிற்சி பெற்றார். [1]

தொழில்[தொகு]

கச்சேரிகளில் இசை நிகழ்ச்சிகளை நிகழ்த்துவதோடு, பல மராத்தி நாடகங்களிலும், திரைப்படங்களிலும் இவர் நடித்துள்ளார்.

ஒரு திறமையான நடிகராக இல்லாவிட்டாலும், இவர் தனது தங்கை கிராபாய் பரோடேகர் உருவாக்கிய நாடக நிறுவனத்தில் மேடை நாடகங்களில் நடித்தார். சன்யாசா-கல்லோல் என்ற நாடகத்தில் அசுவின் சேத் மற்றும் சுபத்ரா ஆகிய பாத்திரத்தில் தோன்றினார். அங்கு இவர் அருச்சுனன் வேடத்தில் நடித்தார். [2] பின்னர் பிரபாத் பிலிம்ஸால் தயாரிக்கப்பட்டஅமிர்த மந்தன் (1934), சந்திரசேனா (1935), ராஜ்புத் ரமணி (1936) போன்ற சில படங்களில் நடித்தார். மேலும், 'சாவித்ரி' (1936, லீலா பெந்தர்கர் என்ற முக்கிய பாத்திரம்), சரசுவதி சினிடோன் தயரித்த தேவயானி மற்றும் சச் ஹாய் (1939) ஆகியத் திரைப்படங்களிலும் நடித்துள்ளார். இவர், தபலா, ஆர்மோனியம் போன்ற கருவிகளையும் வாசித்தார். [3] [4]

பண்டிட் பீம்சென் ஜோஷி, முனைவர் வசந்த்ராவ் தேசுபாண்டே போன்ற கலைஞர்கள் இவரது இசையால் ஈர்க்கப்பட்டனர். இவரது சில பதிவுகள் இன்றும் கிடைக்கின்றன.

சீடர்கள்[தொகு]

பிரபலமான பாரம்பரிய இசை பாடகர்களான கிராபாய் பரோடேகர் மற்றும் முனைவர் பிரபா ஆத்ரே, ஆகிய இருவரும் இவரது முக்கியமான சீடர்களாவர். முனைவர் வசந்த்ராவ் தேசுபாண்டே, பண்டிட் பீம்சென் ஜோஷி, மாணிக் வர்மா, சரஸ்வதி ரானே, வாமன்ராவ் தேஷ்பாண்டே, பசவராஜ் ராஜ்குரு, பாலாசாகேப் ஆத்ரே, விட்டல்ராவ் சர்தேஷ்முக் மற்றும் மேனகா சிரோத்கர் ஆகியோரும் இவரிடம் வழிகாட்டுதல்களைப் பெற்றனர். [1] [3]

மரபு[தொகு]

சுரேஷ்பாபு 1953 பிப்ரவரி 15 அன்று புனேவில் காலமானார். [5] மும்பையில் இவரது சீடர் முனைவர் பிரபா ஆத்ரே அவர்களால் சுரேஷ்பாபு - கிராபாய் சுமிருதி சங்கீத சமரோக் என்ற பெயரில் 1992 முதல் வருடாந்திர இசை விழா நடத்தப்படுகிறது. இது நாட்டின் முக்கிய இசை விழாக்களில் ஒன்றாகும்.

குறிப்புகள்[தொகு]

நூலியல்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சுரேஷ்பாபு_மானே&oldid=3075443" இருந்து மீள்விக்கப்பட்டது