மர்தலா
[[Image:|250x250px|center|மர்தலா]] | |
தாள வாத்தியம் | |
---|---|
வேறு பெயர்கள் | ஒட்சி மர்தலா |
ஓர்ன்பாஸ்டெல்-சாக்ஸ் வகை | 211.222.1 (கைகளால் இயக்கப்படும் கருவி) |
இசைக் கலைஞர்கள் | |
ஆதிகுரு சிங்காரி சியாம்சுந்தர் கர், குரு கேளுச்சரண மகோபாத்திரா, குரு மகாதேவ ரௌத், குரு வனமாலி மகாராணா, குரு தெனேசுவர் இசுவைன், குரு சச்சிதானந்த தாசு | |
மேலதிக கட்டுரைகள் | |
ஒடிய இசை |
மர்தலா ( Mardala ) என்பது கிழக்கு இந்திய மாநிலமான ஒடிசாவைச் சேர்ந்த ஒரு பாரம்பரிய தாள வாத்தியமாகும். இது பாரம்பரியமாக ஒடிசி பாரம்பரிய இசையில் முதன்மையான துணைக் கருவியாகப் பயன்படுத்தப்படுகிறது. இந்தக் கருவியானது அதன் தனித்துவமான கட்டுமானம், ஒலியியல் அம்சங்கள் மற்றும் பாரம்பரிய வாசிப்பு நுட்பம் ஆகியவற்றின் காரணமாக இந்திய துணைக்கண்டத்தில் இதே போன்ற பெயர்களைக் கொண்டிருக்கக்கூடிய மற்ற (மத்தளம்) கருவிகளிலிருந்து வேறுபட்டது. [1]
கோட்டிபுவா, மகரி, ஒடிசி நடனம், பகபதா துங்கி, சாகி நாடா, பிரகலாத நாடகம், இராமலீலை, கிருஷ்ணா லீலா, இராம நாடகம், சாகி ஜாதா, மேதா நாச்சா, பரத லீலை, பூதகேலி நாதா, ஒடிசி கீர்த்தனை உள்ளிட்ட பல ஒடிசாவின் பாரம்பரிய கலை வடிவங்களில் மர்தலா பயன்படுத்தப்படுகிறது. [2] [3]
வரலாறு
[தொகு]ஒடிசாவின் இசையமைப்பாளர்கள் பண்டைய நூல்களில் தட் அல்லது கம்பி வாத்தியங்கள், சுசிரா அல்லது காற்று வாத்தியங்கள், அனத்தா அல்லது தோல் கருவிகள் இறுதியாக கானா அல்லது உலோக கருவிகள் என நான்கு வேறுபட்ட கருவிகள் அல்லது வாத்யங்களை குறிப்பிட்டுள்ளனர்.
இந்த நான்கில், மர்தலா அனத்த வாத்தியங்கள் அல்லது முரசு வகையின் கீழ் வருகிறது. ஒடிசாவின் பழங்கால இசையமைப்பாளரான இரகுநாத ராதா, நாட்டிய மனோரமா என்ற தனது ஆய்வுக் கட்டுரையில் மர்தலாவை இவ்வாறு போற்றுகிறார்: வார்ப்புரு:Verse translation புரி ஜெகன்நாதர் கோயிலில் பல நூற்றாண்டுகளாக மரதலா சேவை உள்ளது. இது 'மாதேலி சேவா' என்று அழைக்கப்படுகிறது. இச்சேவை கஜபதி ஆட்சியாளரால் கோவிலுக்குள் சடங்கு முறையில் தொடங்கப்பட்டது. இந்தியாவின் முக்கிய பாரம்பரிய நடன வடிவங்களில் ஒன்றான இன்றைய ஒடிசி நடனத்திற்கு முந்தைய மஹரி நடனத்தின் துணைக் கருவியாக மர்தலா இருந்தது.
ஒடிசா மாநிலம் முழுவதும் உள்ள நூற்றுக்கணக்கான கலிங்கன் கோவில்களில்,முக்தீஸ்வரர் கோயில், கொனார்க் சூரியக் கோயில் போன்ற புகழ்பெற்ற கோவில்கள் உட்பட பல கோயில்களில் முக்கியமாக மர்தலாவை வாசிக்கும் அலசகன்யா என்ற சிலை இடம் பெற்றுள்ளது. ஒடிசி நடனத்தில் அதே நிலைப்பாட்டை பிரதிபலிக்கும் வகையில் மர்தலிகா என்ற பெயரில் ஒரு வடிவமும் உள்ளது.
மரம்
[தொகு]அனைத்து மரங்களும் மர்தலா கட்டுவதற்கு ஏற்றவை அல்ல. செங்கருங்காலி மரம் சிறந்த மர்தலா வாத்தியம் தயாரிக்க உகந்தது. செஞ்சந்தன மரமும் அதன் ஆழமான அதிர்வு காரணமாக அதிகம் உபயோகிக்கப்படுகிறது. வேம்பு, மலை வேப்ப மரம், பூசணி தேக்கு போன்ற பிற மரங்களும் பயன்படுத்தப்படுகின்றன. [4] மேற்கூறிய மரங்களிலிருந்து வடிவமைக்கப்பட்ட ஒரு கருவி உத்தமமாகக் கருதப்படுகிறது, அதே சமயம் பலா மரத்தால் செய்யப்பட்ட கருவி அதமமாகக் கருதப்படுகிறது.[5]
அளவீடுகள்
[தொகு]ஒடிசி நடனம் பற்றிய புகழ்பெற்ற ஆய்வுக் கட்டுரையான நாட்டிய மனோரமா மர்தலாவை சுமார் ஒன்றரை முழ நீளம் கொண்டதாக நியமித்தது. இடது முகம் பன்னிரண்டு முதல் பதின்மூன்று கோணங்களுக்கு இடையில் இருக்க வேண்டும். வலது முகம் இடது முகத்தை விட பாதி அல்லது ஒரு கோணம் குறைவாக இருக்க வேண்டும்.[6]
மர்தலா இசைப்பது தாள 'பத்ததி' அல்லது ஒடிசி இசையின் தாள அமைப்பை அடிப்படையாகக் கொண்டது. தாளம் என்பது இந்திய இசையில் ஒரு தாள அமைப்பு. ஒடிசி இசையில் பயன்பாட்டில் உள்ள தாளங்கள் தனித்துவமானவை. மற்ற இந்திய இசை அமைப்புகளில் இது போன்று காணப்படவில்லை. [4] கடுமையான பாரம்பரிய இலக்கணத்தைப் பின்பற்றி இசைக்கருவியை வாசிக்க வேண்டும் .
பதி
[தொகு]பதி என்று அழைக்கப்படும் ஒரு பிரத்தியேக நுட்பம் பாரம்பரிய ஒடிசி பாடல்களில் அடிக்கடி பயன்படுத்தப்படுகிறது. இது அந்தந்த பாடலின் நிலையான உரைநடைக்குள் இயற்றப்பட்டுள்ளது. பதி பல்வேறு தாளங்கள், லயங்கள் மற்றும் வெவ்வேறு அளவுகளில் மீண்டும் மீண்டும் செய்யப்படுகிறது. கபிச்சந்திரா முனைவர் காளி சரண் பட்நாயக் இந்த அம்சத்தை 'ஒடிசி இசையின் உயிர்நாடி' என்கிறார். [4]
குருக்கள்
[தொகு]மர்தலா ஜெகந்நாதர் கோயிலுடன் நெருக்கமாக தொடர்புடையது. இதனால் ஒடிசாவின் கலாச்சாரத்தில் மிகவும் மதிப்புமிக்க இடத்தைப் பெற்றுள்ளது. பல குருக்கள் கருவியின் பாரம்பரியத்தை முன்னெடுத்துச் செல்ல உழைத்துள்ளனர். ஆதிகுரு சிங்காரி சியாம்சுந்தர் கர், குரு வனமாலி மகாராணா, குரு பத்மநாப பாண்டா, குரு வாசுதேவ குந்தியா, குரு மகாதேவ ரௌத், குரு நாராயண மகோபாத்ரா, குரு கேளுச்சரண மகோபாத்திரா ஆகியோர் 20-ஆம் நூற்றாண்டில் மர்தலாவின் சிறந்த குருக்களில் அடங்குவர்.
தனி இசைக்கருவியாக
[தொகு]ஒடிசி இசை மற்றும் நடனம் ஆகியவற்றுக்கான இசைக்கருவியில் அதன் நன்கு அறியப்பட்ட பாத்திரத்தைத் தவிர, தனி இசைக்கருவியாக மர்தலாவின் பாத்திரம் கடந்த சில தசாப்தங்களாக பெரும் வெற்றியுடன் வழங்கப்படுகிறது. [7] குரு தனேசுவர் இசுவைன், புவனேசுவரத்திலுள்ள இரவீந்திர மண்டபத்தில் குரு வனமாலி மகாராணா அவர்களின் திறமையான வழிகாட்டுதலின் கீழ் மர்தலாவில் ஒரு தனி நிகழ்ச்சியை வழங்கிய முதல் தனி மர்தலா கலைஞராவார்.
பயிற்சி
[தொகு]ஒடிசா மாநில அரசு நிறுவனங்களான 'உத்கல் சங்கீத் மகாவித்யாலயா', [8] 'உத்கல் கலாச்சாரப் பல்கலைக்கழகம்'[9] ஆகிய இரண்டும் இளங்கலை, முதுகலை பட்டப்படிப்புகளில் பயிற்சிகளை வழங்குகின்றன. மேலும் பல தனியார் நிறுவனங்களும் பயிற்சி அளிக்கின்றன. குரு வனமாலி மகாராணா மாநிலத் தலைநகரான புவனேசுவரத்தில் 'மர்தலா அகாதமி' என்ற நிறுவனத்தை நிறுவினார். [10] சகிகோபால், பிரகோவிந்தாபூரில் உள்ள ராமஹரி தாஸ் ஒடிசி குருகுலம், ஒடிசாவின் பாரம்பரிய தாள வாத்தியங்களில் நிபுணத்துவம் பெற்ற 'வாத்ய வாணி குருகுலம் என்ற தனது சொந்த நிறுவனத்தைக் கொண்ட குரு தனேசுவர் இசுவைனின் கீழ் மர்தாலா [11] பயிற்சியையும் வழங்குகிறது. ஒடிசாவின் பாரம்பரிய இசைக்கருவிகளின் குழுமங்களில் மர்தலா முன்னிலை வகிக்கின்றன.
-
குரு பிரபரா சாகு, மூத்த கோட்டிபுவா கலைஞர்
-
குரு வாசுதேவ குந்தியா
-
குரு ரவிநாராயண் பாண்டா
-
குரு மகுனி தாஸ், மூத்த கோட்டிபுவா கலைஞர்
-
குரு ஜனார்த்தன தாசு
-
குரு நிரஞ்சன் பத்ரா
-
குரு சச்சிதானந்த தாசு, ஒடிசா சங்கீத நாடக அகாதமி விருது பெற்றவர்
-
குரு விஜய குமார் பாரிக்
-
குரு ஜெகநாத் குவான்ர்
-
குரு சிந்தாமணி ராவத்
-
குரு மகேசுவர் மகோபாத்த்ரா
-
குரு சரத்குமார் சமந்தரே
-
குரு கௌரங்க சரண் மகாலா
-
குரு திவாகர் பரிதா
இதனையும் பார்க்கவும்
[தொகு]- ஒடிசி நடனம்
- கோட்டிபுவா
- பிரகலாத நாடகம்
- தனேசுவர் இசுவைன்
சான்றுகள்
[தொகு]- ↑ Mohanty, Gopinath (August 2007). "Odissi - The Classical Music". Orissa Review (Culture Department, Government of Orissa): 108–111.
- ↑ Vidyarthi, Nita (6 February 2014). "His own beat". The Hindu. https://www.thehindu.com/features/friday-review/music/his-own-beat/article5660641.ece.
- ↑ Rath, Shantanu Kumar. Mishra. ed. "Odia Lokanatakaku Ganjamara Abadana" (in or). Rangabhumi (Bhubaneswar: Odisha Sangeet Natak Akademi, Department of Culture, Government of Odisha) 9: 52–64.
- ↑ 4.0 4.1 4.2 Patnaik, Kabichandra Dr. Kali Charan. A Glimpse into Orissan Music. Bhubaneswar, Odisha: Government of Orissa. p. 2.Patnaik, Kabichandra Dr. Kali Charan. A Glimpse into Orissan Music. Bhubaneswar, Odisha: Government of Orissa. p. 2.
- ↑ Ratha, Raghunatha. Natyamanorama. Bhubaneswar, Odisha: Odisha Sangeet Natak Akademi.Ratha, Raghunatha (1976). Patnaik, Kali Charan (ed.). Natyamanorama (in Sanskrit). Bhubaneswar, Odisha: Odisha Sangeet Natak Akademi.
- ↑ Ratha, Raghunatha (1976). Natyamanorama. Bhubaneswar, Odisha: Odisha Sangeet Natak Akademi.Ratha, Raghunatha (1976). Patnaik, Kali Charan (ed.). Natyamanorama (in Sanskrit). Bhubaneswar, Odisha: Odisha Sangeet Natak Akademi.
- ↑ Chakra, Shyamhari. "Moment of victory for Odissi Mardal".
- ↑ "Courses offered". Utkal Sangeet Mahavidyalaya. பார்க்கப்பட்ட நாள் 26 July 2020.
- ↑ "Under Graduate Departments". Utkal University of Culture. பார்க்கப்பட்ட நாள் 26 July 2020.
- ↑ "Mardal maestro Banamali Maharana passes away". Outlook India. 17 Nov 2018.
- ↑ "Training : About Mardal". Ramahari Das Odissi Gurukul.