வனமாலி மகாராணா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வனமாலி மகாராணா
A still of Shri Banamali Maharana who will be presented with the Sangeet Natak Akademi Award for Odissi Music - Orissa by the President Dr. A.P.J Abdul Kalam in New Delhi on October 26, 2004.jpg
பிறப்புமே 16, 1941(1941-05-16)
இரகுராஜ்பூர், புரி, ஒடிசா, இந்தியா
இறப்பு17 நவம்பர் 2018(2018-11-17) (அகவை 77)
புவனேசுவரம், ஒடிசா, இந்தியா
பணிதாளவாத்யக் கலைஞர் - மர்தலா குரு
விருதுகள்சங்கீத நாடக அகாதமி விருது

வனமாலி மகாராணா ( Banamali Maharana , 16 மே 1941 - 17 நவம்பர் 2018) மர்தலா வாசித்த ஒரு இந்திய தாள வாத்தியக் கலைஞர் ஆவார்

ஆரம்ப கால வாழ்க்கை[தொகு]

மகாராணா, புரி மாவட்டத்தில் உள்ள இரகுராஜ்பூரில் பிறந்தார். சிறு வயதிலிருந்தே இவருக்கு இசையில் ஈடுபாடு இருந்தது. ஆனால் ஆனால் முறையான பயிற்சி இல்லை. மோகன் சுந்தர் தேவ் கோசுவாமி மற்றும் அவரது குழுவினரால் நிகழ்த்தப்பட்ட ராசலீலாவினால் இவர் ஈர்க்கப்பட்டார்.

தொழில்[தொகு]

மகாராணா, கோசுவாமியுடன் கோலா (மிருதங்கம்) மற்றும் தோலக் இசைக்கத் தொடங்கினார். இவர் அன்னபூர்ணா நாடக நிறுவனத்தில் சேர்ந்த பிறகு முறையான பயிற்சி தொடங்கியது. அங்கு சிங்காரி சியாம்சுந்தர் கர் மற்றும் சேத்ரமோகன் கர் ஆகியோரிடம் தாளக்கலைகளை கற்றுக்கொண்டார்.[1] இவரது சகோதரர் குரு கேளுச்சரண மகோபாத்திரா தனது பெரும்பாலான நடன நிகழ்ச்சிகளுக்கு இவரை அழைத்துச் சென்றார். 

மகாராணா கட்டாக்கில் உள்ள கலா விகாஸ் கேந்திராவிலும் பின்னர் உத்கல் சங்கீத மகாவித்யாலயாவிலும் மர்தலா கற்பிக்கத் தொடங்கினார்.[2] 1999-இல் மர்தலா துறையின் தலைவராக ஓய்வு பெறுவதற்கு முன்பு உத்கல் சங்கீத மகாவித்யாலயாவில் மர்தலா இசையில் ஏழு ஆண்டு படிப்பை அறிமுகப்படுத்தினார். 

தனது காலத்தில் ஒடிசி நிகழ்ச்சிகளுக்காக மிகவும் விரும்பப்பட்ட மர்தலா கலைஞர் ஆவார். கேளுசரணைத் தவிர, சஞ்சுக்தா பாணிகிரஹி, ஓபாலி ஓபராஜிதா, பிரியம்வதா மொகந்தி எஜ்மாடி, சோனல் மான்சிங், அருணா மொகந்தி, சுஜாதா மொஹாபத்ரா, பார்வதி தத்தா மற்றும் பலருடன் இந்தியாவிலும் வெளிநாட்டிலும் நடன நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார்.[3]

விருதுகள்[தொகு]

  • கபி சாம்ராட் உபேந்திரா பஞ்சா சன்மான் - 2016[4]

சான்றுகள்[தொகு]

  1. "Noted Guru Banamali Maharana passes away". UNI India. 30 November 2018 அன்று பார்க்கப்பட்டது.
  2. "Eminent percussionist Guru Banamali Maharana passes away". pti news. 30 November 2018 அன்று பார்க்கப்பட்டது.
  3. "Mardala exponent Banamali Maharana passes away". The New Indian Express. 17 November 2018. https://www.newindianexpress.com/states/odisha/2018/nov/17/mardala-exponent-banamali-maharana-passes-away-1899491.html. பார்த்த நாள்: 16 January 2020. 
  4. "Eminent percussionist Guru Banamali Maharana passes away". Business Standard. Press Trust of India. 17 November 2018. https://www.business-standard.com/article/pti-stories/eminent-percussionist-guru-banamali-maharana-passes-away-118111700872_1.html. பார்த்த நாள்: 16 January 2020. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=வனமாலி_மகாராணா&oldid=3497420" இருந்து மீள்விக்கப்பட்டது