ஓபாலி ஓபராஜிதா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஓபாலி ஓபராஜிதா
Oopali Operajita.png
பிறப்புஇந்தியா
கல்விகார்னிகி மெல்லன் பல்கலைக்கழகம், தல்ஹௌசி பல்கலைக்கழகம், தில்லி பல்கலைக்கழகம், ரிஷி பள்ளத்தாக்குப் பள்ளி]]
பணிஇந்தியாவின் மூத்த நாடாளுமன்ற ஆலோசகர்; பாரம்பரிய ஒடிசி மற்றும் பரதநாட்டிய நடனக் கலைஞர் மற்றும் நடன இயக்குனர்
பெற்றோர்பிந்து பூசன் தாசு; பிரபாத் நளினி தாசு
வலைத்தளம்
http://www.cicerotransnational.com

ஓபாலி ஓபராஜிதா (Oopalee Operajita), ஒரு கலை நுணுக்க திறன் கொண்ட பாரம்பரிய ஒடிசி மற்றும் பரதநாட்டிய நடனக் கலைஞராகவும் மற்றும் பயிற்சியாளராகவும் இருக்கிறார். ஒடிசியை குரு கேளுச்சரண மகோபாத்திராவிடமிருந்தும் மற்றும் பரதநாட்டியத்தை எஸ். மீனாட்சி மற்றும் பி.ராம் கோபால் (நடனக் கலைஞர்) ஆகியோரிடமிருந்து தீவிரப் பயிற்சி பெற்றார். [1] [2] மேலும்,1990ஆம் ஆண்டு முதல் கார்னிகி மெலன் பல்கலைக்கழகத்தில் ஒரு சிறப்பு உறுப்பினராக உள்ளார். பொதுக் கொள்கை மற்றும் சர்வதேச விவகாரங்கள், பரந்த அறிவு குறித்து இந்திய பாராளுமன்றத்தின் தலைவர்களுக்கு மூத்த ஆலோசகராகவும் , பல்துறை வல்லுநராகவும் உள்ளார். [3]

கல்வி[தொகு]

ஓபராஜிதா தனது ஆறாவது வயதில் ரிஷி பள்ளத்தாக்கு பள்ளிக்குச் சென்று, ஒன்பது ஆண்டுகள் அங்கு படித்தார் . கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் (இந்திய பள்ளி சான்றிதழ்) பட்டம் பெற்றார். ரிஷி பள்ளத்தாக்கு பள்ளியில், கடுமையான பந்தநல்லூர் பாணியில் பரதநாட்டியம் படித்தார். ரிஷி பள்ளத்தாக்கின் அதன் நிறுவனர் ஜிட்டு கிருஷ்ணமூர்த்திக்காக நடத்தப்பட்ட நடன நாடகங்களில் முக்கிய வேடங்களில் நடித்தார். மேலும், ஜிட்டுவின் விருப்பமான நடனக் கலைஞராகவும் இருந்தார். [4]

அமெரிக்காவின் கார்னிகி மெல்லன் பல்கலைக்கழகம், கனடாவின் டல்ஹெளசி பல்கலைக்கழகம் (அங்கு இவர் அரிமா அறக்கட்டளை தூதராக இருந்தார்); தில்லி பல்கலைக்கழகம் ; மற்றும் உத்கல் பல்கலைக்கழகம் போன்றவற்றில் தனது உயர் கல்வியைப் பெற்றார். தல்ஹெளசி பல்கலைக்கழகத்தில், லாரன்ஸ் டரலின் அலெக்சாண்ட்ரியா குவார்டெட் குறித்து தனது ஆய்வுக் கட்டுரையை எழுதினார். இவரது ஆய்வறிக்கை மேற்பார்வையாளர் கனேடிய கவிஞர் ஜே. ஆண்ட்ரூ வைன்ரைட் ஆவார்.

குடும்பம்[தொகு]

ஓபராஜிதா ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த ஒரு முக்கிய அரசியல் மற்றும் அறிவுசார் குடும்பத்தைச் சேர்ந்தவராவார். மேலும் இந்திய பொது அறிவுஜீவிகள் மற்றும் கல்வியாளர்களான பேராசிரியர் பித்து பூசன் தாசு மற்றும் பேராசிரியர் பிரபாத் நளினி தாஸ் ஆகியோரின் மகளாவார். இந்திய ஆட்சிப் பணியின் ராய் பகதூர் துர்கா சரண் தாசின் பேத்தியுமாவார். அவரது தாய்வழி தாத்தா பாட்டி கிருட்டிண பிரியா தேவி மற்றும் பேராசிரியர் ராதா கிருஷ்ணா தாசு, இவர் துறைத் தலைவராகவும், ராவன்சா பல்கலைக்கழகத்தில் இயற்பியல் பேராசிரியராகவும் இருந்தனர். அவர்கள் ஒடிசாவில் புரி மாவட்டத்தைச் சேர்ந்த ஜமீன்தாரி குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். இவரது தந்தைவழி பெரிய அத்தை சுதந்திர போராட்ட வீரர் மற்றும் பெண்ணியவாதி சரளாதேவி, மகாத்மா காந்தியின் சக நண்பராவார். இவரது பெரிய மாமா, நித்யானந்த் கனுங்கோ முன்னால் பிரதமர் ஜவகர்லால் நேருவின் முதல் சுதந்திர அமைச்சரவையில் உறுப்பினராக இருந்தார். மற்றும் அடுத்தடுத்த நேருவின் அமைச்சரவையிலும் இருந்தார். பின்னர், குசராத் மற்றும் பீகார் மாகாணங்களின் ஆளுநராக நேருவால் நியமிக்கப்பட்டார். [5]

ஒடிசி நடனம்[தொகு]

ஒடிசி குரு பத்ம விபூசண் கேளுச்சரண மகோபாத்ரா மற்றும் குரு தேபா பிரசாத் தாஸ் ஆகியோரின் முன்னணி சீடரான ஓபராஜிதா உலகளவில் நிகழ்ச்சிகளை நிகழ்த்தியுள்ளார். இருபது வருட இடைவெளிக்குப் பிறகு, மகோபாத்ரா நிகழ்ச்சி அரங்கிற்கு திரும்பியபோது, "கொனர்கா" என்ற நடன நாடகத்தில், ஓபராஜிதாவை அவருக்கு இணையாக நடனமாட வைத்தார். ஓபராஜிதா ஒடிசியை மகோபாத்ராவிடம் தொடர்ந்து பன்னிரண்டு ஆண்டுகள் படித்தார். முன்னதாக, இவர் குரு தேபா பிரசாத் தாசின் கீழ் ஐந்து ஆண்டுகள் மற்றும் குரு பங்கஜ் சரண் தாசின் கீழ் பயிற்சி பெற்றார். நடனத்திற்கான பல சர்வதேச மற்றும் தேசிய விருதுகளை வென்ற ஓபராஜிதா ஒரு விமர்சகர் மற்றும் கலை அறிஞர் ஆவார். [6] பிட்ஸ்பர்க்கில் உள்ள கார்னிகி இசை அரங்கத்தில் நிகழ்த்திய முதல் பாரம்பரிய இந்திய கலைஞர் இவராவார். 2010 இல் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவுக்கான குடியரசுத் தலைவர் இல்ல நிகழ்ச்சியில் நடனமாட ஓபராஜிதாவை வெளியுறவு அமைச்சகம் (இந்திய) மற்றும் இந்தியப் பிரதமர் அலுவலகம் அழைத்தன. [7]

பரதநாட்டியம்[தொகு]

ஓபராஜிதா தனது குரு எஸ். மீனாட்சியிடமிருந்து ரிஷி பள்ளத்தாக்கு பள்ளியில் தனது ஆறாவது வயதிலிருந்து பரதநாட்டியம் கற்கத் தொடங்கினார். தொடர்ந்து ஒன்பது ஆண்டுகள் அதைப் படித்தார். 1980 களின் முற்பகுதியில், லண்டனில் முதுகலைப் பாடங்களை பி. ராம் கோபால் (நடனக் கலைஞர்) இவரது குருவான எஸ். மீனாட்சிக்கு கற்பித்தார். ரிஷி பள்ளத்தாக்கின் நடனக் கலைஞர்களில் ஓபராஜிதாவும் இவரது நடனப் பங்காளியும் மிக முக்கியமானவர்கள். இது சமசுகிருதம், தெலுங்கு மற்றும் தமிழ் மொழிகளில் அற்புதமான அழகான மற்றும் வெற்றிகரமான நடன நாடகங்களுக்கு வழிவகுத்தது. இந்த தயாரிப்புகளுக்கான இசையை விஜயநகரம் வெங்கடரமண தாஸின் சீடரான வீணா ஜி விசாலட்சி இசையமைத்துள்ளார், மேலும் இந்த உரையை பண்டிட் சுண்டி ஹனுமந்தராவ் தேர்வு செய்தார் அல்லது இயற்றினார். ஓபராஜிதா வீணா ஏழு ஆண்டுகளும், கர்நாடக குரல் இசையையும் ஒன்பது ஆண்டுகள் வீணா ஜி விசாலட்சியுடன் பயின்றுள்ளார். [8]

குறிப்புகள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஓபாலி_ஓபராஜிதா&oldid=2930544" இருந்து மீள்விக்கப்பட்டது