அன்னபூர்ணா நாடக நிறுவனம்
அன்னபூர்ணா நாடக நிறுவனம் ( Annapurna Theatre ) அன்னபூர்ணா தியேட்டர் எனவும் அறியப்படும் இது ஒடியா நாடக நிறுவனங்களின் முன்னோடியாகும்.
உருவாக்கம்
[தொகு]1933-இல், சோம்நாத் தாஸ் என்பவர், பிரிக்கப்படாத புரி மாவட்டத்தில் உள்ள கந்துவால்கோட் என்ற கிராமத்தில் ஜெயதுர்கா நாட்டிய மண்டலி, [1] என்ற ஒரு இசை நாடக நிறுவனத்தை உருவாக்கினார். ஓரிரு ஆண்டுகளுக்குப் பிறகு, அமைப்பாளர்கள் முறையான மேடை நாடகத்திற்கு மாற முடிவு செய்தனர். இந்த நேரத்தில், வனமாலி கலை அரங்கத்தைச் சேர்ந்த சில கலைஞர்களும், திறமையான மேலாளரான பௌரி பந்து மொகந்தியும் அவர்களுடன் இணைந்தனர். மொகந்திக்கு நாடகத் துறையில் போதிய அனுபவம் இருந்தது. குறுகிய காலத்திற்குள் அவர் நிறுவனத்தை மறுசீரமைத்தார். மேலும், 1936-இல் அன்னபூர்ணா நாடக நிறுவனத்தை நிறுவினார். மிகக் குறுகிய காலத்தில் அன்னபூர்ணா நாடக நிறுவனம் ஒரு சுற்றுப்பயணம் செய்யும் குழுவாக மாறியது.
கிளைகள்
[தொகு]1939-ஆம் ஆண்டில், கார்த்திக் குமார் கோஸ், ஒரு வங்காள நாடகத்தை ஒடியா மொழியில் மொழிபெயர்த்தார். அதை அன்னபூர்ணா நிறுவனம் தயாரித்தது. அதன் வெற்றி ஏற்பாட்டாளர்களை முன்னேற ஊக்கப்படுத்தியது. பின்னர், அஸ்வினி குமார் கோஸ் அவர்களுக்காக பல படைப்புகளை எழுதினார். கலைஞர்களின் எண்ணிக்கை அதிகரித்ததால், நிறுவனத்தை இரண்டு கிளைகளாகப் பிரிக்க முடிவு செய்யப்பட்டது. அ-குழு மொகந்தியின் தலைமையில் பூரியிலும், ஆ-குழு கட்டக்கிலும் தனது நிலையான் அரங்கை ஆரம்பித்தது. இராமச்சந்திர மிசுராவின் சமூக நாடகம் மூலம் , கட்டக்கில் நாடகம் 1945-இல் ஆரம்பிக்கப்பட்டது. இரு குழுக்களுக்கு இடையேயான உறவுகள் ஆரம்ப கட்டத்தில் சுமூகமாக இருந்தன. மூன்றாவது குழுவான அன்னபூர்ணா-இ குறுகிய காலத்திற்கு தொடங்கப்பட்டது. ஆனால், மெல்ல மெல்ல உறவுகள் சிதைந்து கிளைகள் பிரிந்தன.
திரையரங்குகளின் முடிவு
[தொகு]இலிங்கராஜ் நந்தா என்பவரால் நிர்வகிக்கப்பட்டு வந்த அன்னபூர்ணா-பி குழு கட்டக்கிலுள்ள தின்கோனியா பாகிச்சா என்ற இடத்தில் அதன் நிரந்தர அரங்கைக் கொண்டிருந்தது. அந்த இடத்தில் இன்றும் கட்டிடம் உள்ளது. 1968 வரை அன்னபூர்ணா-ஆ குழுவில் ஆண்டுதோறும் குறைந்தது ஐந்து அல்லது ஆறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. இராமச்சந்திர மிஸ்ரா, பஞ்ச கிசோர் பட்நாயக், கமல் லோச்சன் மொகந்தி மற்றும் விஜய் மிசுரா போன்ற நாடக கலைஞர்கள் இந்த நாடக அரங்கில் பணியாற்றினர். புரியிலுள்ள அ-குழு அதன் சொந்த உச்சத்தைக் கண்டது. தொடர்ந்து இரண்டு மாதங்கள் மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்தது. ஆனால், மெதுவாக, இரண்டு நிறுவனங்களும் தங்கள் நிதி ஆதரங்களை இழந்தன. மேலும், தவறான நிர்வாகத்தின் காரணமாக வீழ்ச்சியடைந்தன. 1977-1988 க்கு இடையில் இரவீந்திர பரிஜா என்பவரின் கீழ் சில நாடகங்கள் நடத்தப்பட்டன. அன்னபூர்ணா நாடக நிறுவனம் ஒரு வியத்தகு பாரம்பரியத்தை உருவாக்கியது . மேலும், கலைஞர்கள், நாடகாசிரியர்கள் மற்றும் பிற மேடை ஆளுமைகளை உருவாக்குவதில் முன்னணி பாத்திரத்தை வகித்தது. அன்னபூர்ணா (A&B) குழுமத்தின் இரண்டு திரையரங்குகளும் குறுகிய காலத்திற்கு மூடப்பட்டன. ஆனால் இப்போது அன்னபூர்ணா நாடக நிறுவனத்தின் ஆ குழு ஒவ்வொரு மாதமும் 29 ஆம் தேதி ஒரு நாடகத்தை நடத்தும் நிகழ்ச்சி நிரலுடன் மீண்டும் செயல்படத் தொடங்கியுள்ளது.
குறிப்பிடத்தக்க கலைஞர்கள்
[தொகு]சான்றுகள்
[தொகு]- ↑ Lal, Ananda (15 February 2019). The Oxford Companion to Indian Theatre. Oxford University Press. எண்ணிம ஆவணச் சுட்டி:10.1093/acref/9780195644463.001.0001/acref-9780195644463-e-0019.
- ↑ "Veteran Actor Bhanumati Devi dead". The New Indian Express. 2013-01-05. பார்க்கப்பட்ட நாள் 2019-02-15.