உள்ளடக்கத்துக்குச் செல்

சுஜாதா மொஹாபத்ரா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சுஜாதா மொஹாபத்ரா

சுஜாதா மொஹாபத்ரா (Sujatha Mohabatra) 27 ஜூன் 1968 ல் பிறந்தார். இவர் ஒரு இந்திய பாரம்பரிய நடனம் மற்றும் ஒடிசி நடன ஆசிரியர் ஆவார்.[1][2]

ஆரம்பகால வாழ்க்கை மற்றும் பின்னணி

[தொகு]

சுஜாதா மொஹாபத்ரா 1968 ஆம் ஆண்டில் பாலசோரில் பிறந்தார். அவர் சிறு வயதிலேயே குரு சுதாகர் சாஹுவிடம் ஒடிசி கற்றுக்கொள்ளத் தொடங்கினார்.[3] c[4] புவனேஸ்வரில் உள்ள ஒடிசி ஆராய்ச்சி மையத்தில் பத்ம விபூசன் குரு கேளுசரண் மொஹாபத்ரா என்பவரின் கீழ் தனது பயிற்சியைத் தொடங்கினார். குருவின் மகன் கேளுச்சரன் மொஹாபத்ரா ரதிகாந்த் மொஹாபத்ரா என்பவரைத் திருமணம் செய்து கொண்டார்.[5] மறைந்த பத்ம விபூஷன் குரு கேளுச்சரன் மொஹபத்ராவின் வழிகாட்டுதலின் கீழ் சுஜாதா மொஹபத்ரா இருபது ஆண்டுகள் கழித்தார். சுதந்திர இந்தியாவில் ஒடிசியின் மறுமலர்ச்சியில் குரு கேளுச்சரன் குறிப்பிடத்தக்க பங்கைக் கொண்டிருந்தார் மற்றும் ஒடிசா மாநிலத்திலிருந்து முதல் பத்ம விபூஷண்விருது பெற்றவர் ஆவார்.சுஜாதா மொஹபத்ரா ஒரு கைவினைஞர்களின் குடும்பத்தில் பிறந்தவர் ஆவார். இவரது கிராமமான பூரி மாவட்டத்தில் உள்ள ரகுராஜ்பூர் கிராமம் இப்போது ஒரு பாரம்பரிய கிராமமாக உள்ளது. அவரது முகபாவங்கள் மற்றும் திறமையான பார்வையாளர்களின் கட்டுப்பாடு, அவரது பிந்தைய ஆண்டுகளில் கூட, உலகளவில் அங்கீகரிக்கப்பட்டது.

தொழில்

[தொகு]

சுஜாதா மொஹாபத்ரா ஒடிசா முழுவதும் நடந்த நிகழ்ச்சிகளில் சாஹுவின் நடனக் குழுவுடன் சேர்ந்து ஒடிசி பாரம்பரிய மற்றும் நாட்டுப்புற நடனத்தை ஆடத் தொடங்கினார். கேளுசரண் மொஹபத்ராவின் பயிற்சியின் கீழ், அவரது நடன பாணி உருவானது. மேலும், அவர் அந்த தலைமுறையின் தலைசிறந்த ஒடிசி நடனக் கலைஞர்களில் ஒருவராக ஆனார்.[6] சுஜாதா மொஹாபத்ரா இந்தியாவிலும், மற்ற நாடுகளிலும், அவரது மாமனாரால் நிறுவப்பட்ட ஸர்ஜன் நடனக் குழுவின் தனி உறுப்பினராகவும் முன்னணி உறுப்பினராகவும் திகழ்ந்தார்.[7].சுஜாதா மொஹாபத்ரா ஒடிசி நடனம் கற்பிப்பதில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார். அவர் ஸர்ஜனின் (ஒடிசி நிருத்யபாசா) முதல்வர் ஆவார். [8]

எம்ஜிரு கேளுசரண் மொஹபத்ராவால் நிறுவப்பட்ட ஒரு முதன்மையான ஒடிசி நடன நிறுவனம் ஆகும். இவர் உத்கல் பல்கலைக்கழகத்தில் ஒரிய இலக்கியத்தில் முதுகலைப் பட்டம் பெற்றுள்ளார். மேலும், புவனேஸ்வரின் ஒடிசி ஆராய்ச்சி மையத்தில் ஆராய்ச்சிப் பணிகளைச் செய்துள்ளார். ஜூலை 2011 இல், இவர் தனது சொந்த ஊரான பாலசோரில் குரு கீர்த்தி ஸ்ர்ஜன் என்ற ஒடிசி நிறுவனத்தைத் தொடங்கினார்.[9] பகவான் கிருஷ்ணரின் கதைகள் மற்றும் நாட்டுப்புறக் கதைகள் ஒடிஸியில் அவருக்கு மிகவும் பாராட்டுக்களைப் பெற்றுக் கொடுத்தன. புகழ்பெற்ற சமஸ்கிருதக் கவிஞர் ஜெயதேவா மற்றும் அவரது பன்னிரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த கீதா கோவிந்தாவின் தலைசிறந்த படைப்பு அவரது தயாரிப்புகளில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. உடல் அசைவுகள், மென்மையான கை சைகைகள் மற்றும் ஒரு பாத்திரத்தில் அவரின் முழு ஈடுபாடு ஆகியவை சுஜாதா மொஹபத்ரா நிகழ்ச்சிகளில் சிறப்பம்சங்கள் ஆகும்.

விருதுகள் 

[தொகு]

இவர் நிர்தயா சூடாமணி,கிருஷ்ண கிருஷ்ணா சபா, சென்னை, 2014 மகரி விருது,பங்கஜ் சரண் ஒடிசி ஆராய்ச்சி அறக்கட்டளை இரண்டாவது சஞ்சுக்தா பனிகிராஹி விருது, ஆதித்யா பிர்லா கலா கிரண் விருது, மும்பைராசா அறக்கட்டளை விருது, டெல்லி  இந்தியாவின் நம்பிக்கை, 2001 நிருத்யா ராகினி, பூரி, 2002 பைசாகி விருது  பிராண நாட்டா சம்மன் அபி நந்திகா, பூரி, 2004 பீமேஸ்வர் பிரதிகா சம்மான், 2004ராசா புருஸ்கர், 2008 ஆகிய விருதுகளைப் பெற்றுள்ளார்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Israel to host Indian art exhibition | The South Asian Times". 28 March 2012. Archived from the original on 28 March 2012. பார்க்கப்பட்ட நாள் 2 August 2017.
  2. "Statuesque postures". The Hindu (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2 August 2017.
  3. "Friday Review Hyderabad / Dance : The state of Odissi". தி இந்து. 10 November 2012. Archived from the original on 10 November 2012. பார்க்கப்பட்ட நாள் 2 August 2017.
  4. "Entertainment Delhi / Dance : A feast for Delhi dance lovers". தி இந்து. 2005-08-12. பார்க்கப்பட்ட நாள் 2 August 2017.[தொடர்பிழந்த இணைப்பு]
  5. Mehta, Kamini. "Odissi dancer Sujata Mohapatra mesmerizes school students". Times of India. http://timesofindia.indiatimes.com/city/chandigarh/Odissi-dancer-Sujata-Mohapatra-mesmerizes-school-students/articleshow/48238651.cms. பார்த்த நாள்: 19 December 2015. 
  6. "Friday Review Hyderabad / Dance : 'Discipline makes a good dancer'". தி இந்து. 2 October 2008. Archived from the original on 2 October 2008. பார்க்கப்பட்ட நாள் 2 August 2017.
  7. "IPAAC Home". www.ipaac.org. பார்க்கப்பட்ட நாள் 2 August 2017.
  8. "Srjan GURU Kelucharan Odissi Nrityabasa ..." www.srjan.com. 30 October 2008. Archived from the original on 30 October 2008. பார்க்கப்பட்ட நாள் 2 August 2017.
  9. "Archived copy". Archived from the original on 2011-09-27. பார்க்கப்பட்ட நாள் 2011-09-13.{{cite web}}: CS1 maint: archived copy as title (link)
"https://ta.wikipedia.org/w/index.php?title=சுஜாதா_மொஹாபத்ரா&oldid=3765311" இலிருந்து மீள்விக்கப்பட்டது