மரப்பல்லி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மரப்பல்லி
புதைப்படிவ காலம்:110 Ma - அண்மை[1][2][3][4][5]
தங்கத் துகள் பகல் மரப்பல்லி (மடகாசுக்கர் பகல் மரப்பல்லி என்றும் அறியப்படுகிறது)
உயிரியல் வகைப்பாடு
திணை: விலங்குகள்
தொகுதி: முதுகுநாணிகள்
துணைத்தொகுதி: முதுகெலும்பிகள்
வகுப்பு: ஊர்வன
வரிசை: செதிலூர்வன
துணைவரிசை: Scleroglossa
உள்வரிசை: Gekkota
Georges Cuvier, 1817
குடும்பங்கள்

Pygopodidae
Carphodactylidae
Diplodactylidae
Eublepharidae
Sphaerodactylidae
Gekkonidae
Phyllodactylidae

மரப்பல்லி (Gecko) என்பது உலகெங்கும் உள்ள மித வெப்பப் பகுதிகளில் காணப்படும் பல்லி ஆகும். இவை 1.6 செமீ முதல் 60 செமீ நீளம் வரை உள்ளன. இவற்றால் கண் சிமிட்ட இயலாது. இவற்றின் கருவிழித்திரைக்குள் இருளில் விரிவடையும் ஒரு நிலைத்த ஆடி உண்டு. இவை தமது நீளமான நாக்கைக் கொண்டு கண்ணைச் சுத்தம் செய்து தூசு விழாமல் பார்த்துக் கொள்கின்றன. இவற்றில் இரவாடும் இனங்களுக்கு மிகச் சிறப்பான கண் பார்வை உண்டு; மாந்தக் கண்களைக் காட்டிலும் 350 மடங்கு ஒளியுணர்வு கொண்டவை.[6]

பல்லி வகைகளிலேயே மரப்பல்லிகள் எழுப்பும் ஒலி தனித்துவம் மிக்கது. மற்ற மரப்பல்லிகளுடன் உறவாட இந்த ஒலிகள் உதவுகின்றன. பல்லி வகைகளிலேயே மரப்பல்லிகள் தாம் கூடுதல் இனங்களைக் கொண்டுள்ளன. தோராயமாக உலகெங்கும் 1500 இனங்களைக் கொண்டுள்ளன.

புதிய இலத்தீனிலும் ஆங்கிலத்திலும் உள்ள gekko, gecko என்ற சொற்கள், இந்தோனேசிய, மலாய் மொழிகளில் உள்ள gēkoq என்ற சொல்லில் இருந்து வருகிறது. இச்சொல், இப்பல்லிகள் எழுப்பும் ஒலியை ஒத்துள்ளன.[7]

சான்றுகள்[தொகு]

  1. Arnold, E.N., & Poinar,G. (2008). "A 100 million year old gecko with sophisticated adhesive toe pads, preserved in amber from Myanmar (abstract)" (PDF). Zootaxa. பார்க்கப்பட்ட நாள் August 12, 2009.{{cite web}}: CS1 maint: multiple names: authors list (link)
  2. Borsuk-Białynicka, M. 1990. Gobekko cretacicus gen. et. sp. n., a new gekkonid lizard from the Cretaceous of the Gobi Desert. Acta Palaeontol. Polon. 35: 67-76
  3. Conrad, J. L., and Norell, M. 2006. High-resolution X-ray computed tomography of an Early Cretaceous gekkonomorph (Squamata) from Öösh (Övorkhangai; Mongolia). Hist. Biol. 18: 405-431.
  4. Conrad, J. L. 2008. Phylogeny and systematics of Squamata (Reptilia) based on morphology. Bull. Am. Mus. Nat. Hist. 310: 1-182.
  5. Bauer, A.M., Böhme and W. Weitschat, W. (2005) An Early Eocene gecko from Baltic amber and its implications for the evolution of gecko adhesion. Journal of Zoology 265: 327-332.
  6. The pupils and optical systems of gecko eyes
  7. gecko, n. Oxford English Dictionary Second edition, 1989; online version September 2011. Accessed 29 October 2011. Earlier version first published in New English Dictionary, 1898.

மேலும் அறிய[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
மரப்பல்லி
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மரப்பல்லி&oldid=3633671" இலிருந்து மீள்விக்கப்பட்டது