மன்னார் திருக்குரட்டி மகாதேவர் கோயில்
Appearance
மன்னார் திருக்குரட்டி மகாதேவர் கோயில் இந்தியாவின் கேரள மாநிலத்தில் ஆலப்புழை மாவட்டத்தில் மன்னார் என்ற இடத்தில் பம்பை ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. இது சிவனுக்காக அர்ப்பணிக்கப்பட்ட ஒரு பழமையான இந்து கோயிலாகும் . [1] கோயிலின் மூலவர் சிவன், கிழக்கு நோக்கிய நிலையில் உள்ளார். பரசுராமர் மூலவர் சிலையை நிறுவியதாக நாட்டுப்புற வழக்காறுகள் கூறுகின்றன. கேரளாவில் உள்ள 108 புகழ் பெற்ற சிவன் கோயில்களில் இக்கோயிலும் ஒன்றாகும். [2] இக்கோயிலின் பிரம்மாண்டமான கோயில் வளாகச் சுவர் பரமசிவனின் பூதங்களால் ஒரே இரவில் கட்டப்பட்டதாக நம்பப்படுகிறது. [3] சூரிய வம்சம் எனப்படுகின்ற இஷ்வாகு வம்சத்தின் மன்னரான மாந்தத்தாவால் இக்கோயில் கட்டப்பட்டது.
மேலும் பார்க்கவும்
[தொகு]ஒளிப்படத்தொகுப்பு
[தொகு]-
கோயிலின் மேற்கு கோபுரம்
-
கருவறை
-
திருச்சுற்று
-
கிழக்கு அம்பலவட்டம்
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Book Title A handbook of Kerala, Volume 2 A Handbook of Kerala, T. Madhava Menon Authors T. Madhava Menon, International School of Dravidian Linguistics Publisher International School of Dravidian Linguistics, 2002 Original from the University of Michigan Digitized 2 Sep 2008 பன்னாட்டுத் தரப்புத்தக எண் 8185692319, 9788185692319 Length: 496 pages; Kerala (India)
- ↑ Book Title: 108 Siva Kshetrangal, Author:Kunjikuttan Ilayath, Publishers: H and C Books
- ↑ Book Title: Cultural Heritage of Kerala, Author Name: A. Sreedhara Menon, Publisher: D.C. Books, 2008, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 8126419032, 9788126419036, Length 312 pages