மதுரை வீரன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
வெள்ளையம்மாள், பொம்மி ஆகியவர்களோடு மதுரைவீரன் சாமி

மதுரை வீரன் நாட்டார் தெய்வங்களில் ஒருவராவார். இவர் வெள்ளையம்மாள், பொம்மி என்று இரு பெண் தெய்வங்களுடன் தம்பதி சமேதிரராக காட்சியளிக்கின்றார். பெரும்பாலான இந்துக் கோயில்களில் இவர்களுக்கென தனிச்சந்நதி காணப்படுகிறது. மதுரைவீரன் மட்டும் தனித்து வணங்கப்படுவதில்லை, அவருடைய இரு மனைவியருடன் சேர்த்தே வணங்கப்படுகிறார்.

உருவ அமைப்பு[தொகு]

மதுரை வீரன் சிலை வெள்ளையம்மாள், பொம்மி என இருவரும் இருபுறமிருக்க மதுரைவீரன் சிலை நடுவே நிற்பது போல் வடிவமைக்கப்படுகிறது. ஓங்கிய அருவாலுடன் முறுக்கிய மீசையுடன் காட்சியளிக்கின்றார்.

வழிபாடு[தொகு]

மதுரைவீரன் ஒரு முக்கிய தமிழ் தெய்வம். [சான்று தேவை] மதுரை வீரன் வழிபாடு தமிழர் மத்தியில் பல கிராமங்களில் இருந்து வருகிறது. மதுரைவீரனை தமிழர் பலர் குலதெய்வமாக கொண்டுள்ளனர். மதுரை வீரன் வழிபாடு மலேசியா, ரியூனியன் மற்றும் கரிபியன் தீவுகளில் வாழும் தமிழர் மத்தியிலும் பரவலாக இருக்கின்றது. [சான்று தேவை] மதுரை வீரன் வழிபாட்டை சிறுதெய்வ வழிபாடு என்று சமய ஆய்வாளர் குறிப்புடுவதுண்டு.

மதுரை வீரன் கதை[தொகு]

[1]

கதைபாடல்[தொகு]

மதுரை வீரன் வடக்கில் (கதைபாடல் காசி என்கிறது) உள்ள ஒரு அரசருக்கு மகனாக பிறக்கின்றார் . ஆனால் மகன் வளர்ந்து பெரியவன் ஆனால் நாட்டிற்க்கு நல்லது இல்லை என்று ஜோதிடம் சொல்லிவிட அரசர் அவனை காட்டில் விட்டுவிடுகிறார் . சக்கிலியர் இனத்தவர்கள் இவரை காட்டில் கண்டெடுத்து வளர்கின்றனர் . திருச்சி பகுதியை ஆட்சி செய்துக் கொண்டிருந்த ராஜகம்பளம் இனத்தை சேர்ந்த பொம்மையா நாயக்கர் என்பவரின் மகள் பொம்மி வயதுக்கு வருகிறாள் . ராஜகம்பளம் சமுதாயத்தின் வழக்கப்படி வயதுக்கு வந்த அந்த பெண்ணை காட்டில் குடில் அமைத்து ஒரு மாதம் சக்கிலியர் இனத்தவர்கள் காவல் செய்ய வேண்டும் .[2] காவல் பொறுப்பை ஏற்ற மதுரை வீரன் பொம்மியை காதலித்தான். பொம்மியும் இவரின் வீரம் மற்றும் அழகில் மயங்க இருவரும் ஊரை விட்டு வெளியேறுகின்றனர் . இது பொம்மையா நாயக்கருக்கு தெரிந்தவுடன் மிகுந்த கோவத்தில் இருந்தார் மற்றும் இச்செய்தியை திருமலை நாயக்கர் மன்னரிடமும் தெரிவிக்கின்றார் . அவனை தொட்டிய நாயக்கர் சமூகத்தினர் தேடி வரும் நிலையில் மதுரை பகுதியில் கள்ளர் சமூகத்தினர் இருந்த நிலையில் அங்கு குடியமர்ந்த மதுரை வீரனும் பொம்மியும் , கள்ளர்களுடன் போரிட்டனர். இவரின் வீரத்தைக் கண்ட தொட்டிய நாயக்க இன பெண் வெள்ளையம்மாள் மதுரை வீரனை காதலித்து திருமணம் செய்து கொள்கிறார். அவன் அரசர் மகன் என்பதை அறியாமல் அருந்ததியர் இனம் என்று எண்ணி, உயர்ந்த சாதியினை சேர்ந்த பெண்களை திருமணம் செய்து கொண்டதற்காக திருமலை நாயக்கர் மன்னர் மதுரை வீரனை பிடித்து மாறுகால் , மாறுகை என்னும் முறையில் கொலை செய்து விடுகின்றார் . பின்னாளில் இங்குள்ள அருந்ததி மற்றும் தாழ்த்தபட்டோர் மக்களுக்கு குலதெய்வமாக ஆனார் . [3]ஒரு சிலர் அரசர் மகன் என்பது இடையில் சொருகிய செய்தி என்றும் சக்கிலியர் இனத்தில் பிறந்த ஒருவன் உயர் சாதியினரை திருமணம் செய்துகொள்வதை விரும்பாத ஆதிக்க சாதியினர் தங்களின் சாதி வெறியில் இவ்வாறு வரலாறுகளை மாற்றினர் என்றும் கூறுகிறார்கள் , என்றாலும் அதற்கு தகுந்த வரலாற்று சான்றுகள், ஆதாரங்கள் எதுவும் இல்லை. மதுரை வீரன் காட்டில் ஆதரவற்ற குழந்தையாக தான் கண்டெடுக்க பட்டார் என்பது வரலாற்று பதிவுகளின் அடிப்படையிலும், மதுரை வீரன் கதைப்பாடல்களின் அடிப்படையிலும் மற்றும் அருந்ததியர் இனத்து மக்கள் உட்பட அனைத்து சமூக மக்களாலும் ஏற்கப்பட்டு, கூறப்படும் செவிவழி செய்தியின் அடிப்படையிலும் உண்மையாக கருதப்படுகிறது.[4]

நூல்களில்[தொகு]

  • வாய்மைநாதன் எழுதிய மதுரை வீரன் நூல் [5]

திரைப்படங்களில்[தொகு]

  1. எம். ஜி. ஆர். நடித்த மதுரை வீரன்
  2. மதுரை வீரன் (1939 திரைப்படம்)

மேற்கோள்கள்[தொகு]

  1. http://www.tamilvu.org/slet/lB100/lB100pd1.jsp?book_id=238&pno=6 மதுரை வீரன் கதை].
  2. http://books.google.co.in/books?id=7XnXAAAAMAAJ&q=kallar+nayakkar&dq=kallar+nayakkar&hl=en&ei=1PrDTvi_EovtrQfz1rHnCw&sa=X&oi=book_result&ct=result&resnum=4&ved=0CD4Q6AEwAzgK
  3. http://books.google.co.in/books?id=HfNRO-LtsN4C&pg=PA174&dq=madurai+veeran+bommi&hl=en&ei=cP_DTvnpMIqnrAfahp3uCw&sa=X&oi=book_result&ct=result&resnum=5&ved=0CEUQ6AEwBA#v=onepage&q=madurai%20veeran%20bommi&f=false
  4. http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=3498:2010-02-12-06-15-43&catid=1:articles&Itemid=264
  5. http://www.noolulagam.com/product/?pid=562

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மதுரை_வீரன்&oldid=2089934" இருந்து மீள்விக்கப்பட்டது