மண்ணுளிப் பாம்பு
மண்ணுளிப் பாம்பு Gongylophis conicus | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தொகுதி: | |
துணைத்தொகுதி: | |
வகுப்பு: | |
வரிசை: | செதிலுடைய ஊர்வன
Squamata |
துணைவரிசை: | பாம்புகள்
Serpentes |
குடும்பம்: | Boidae
|
துணைக்குடும்பம்: | Erycinae
|
பேரினம்: | Gongylophis
|
இனம்: | G. conicus
|
இருசொற் பெயரீடு | |
Gongylophis conicus (சினைடர், 1801) | |
வேறு பெயர்கள் [1] | |
|
மண்ணுளிப் பாம்பு[2] அயகரம்[3] (Gongylophis conicus) என்பது ஒரு நச்சுத் தன்மையற்ற பாம்பு. இது தன் இரையை நெரித்துக்கொன்று பின்னர் உட்கொள்ளும் என்பதால் இது ஒரு மலைப்பாம்பு வகையாகும். இதை மண் மலைப்பாம்பு என்றும், சிறிய மலைப்பாம்பு என்றும், மணியன் என்றும் அழைப்பர்.
உடலளவு
[தொகு]இந்த பாம்பின் நீளம் பிறக்கும் போது 12.5 செ. மீட்டராகவும், நன்கு வளர்ந்தபின் சுமாராக 50 செ. மீட்டராக இருக்கும். அதிக அளவாக 100 செ. மீட்டர் வரை இதனுடைய நீளம் இருக்கலாம்.
உடல் தோற்ற விளக்கம்
[தொகு]- சிறிய, தடித்த உடலுடையது.
- தலை மற்றும் வாலின் செதில்கள் அதிகளவு கீலுடையது [சில சமயங்களில் கணுக்களாகவும் இருப்பதுண்டு]
- சிறிய கண்ணும் செங்குத்தான கண்மணியும் உடையது.
- மிகச்சிறிய வாலுடையது.
நிறம்
[தொகு]- பல்வேறு நிறங்களையுடையது : செம்பழுப்பு, மஞ்சள் கலந்த வெள்ளை, கரும்பழுப்பு அல்லது கருப்பு; சீரற்ற திட்டுகள் இப்பாம்பை கண்ணாடி விரியனைப்போல தோற்றமளிக்கச் செய்கின்றன.
- உடலின் கீழ்ப்பகுதி மஞ்சள் கலந்த வெண்ணிறம்.
இயல்பு/பழக்கவழக்கம்
[தொகு]இவை மாலை நேரங்களிலும் சூரியன் மறையும் நேரத்திலும் இரவிலும் தீவிரமாக நடமாடக்கூடியது. இரையை நெரித்துக் கொல்லும் தன்மையுடையன. எலி, இந்தியப் பெருச்சாளி போன்ற கொறித்துண்ணிகளின் வளைகளில் அதிகளவு காணப்படும்.[4] பதுங்கியிருந்து தாக்கும் முறையைப் பின்பற்றி பறவைகள் மற்றும் ஊர்வன ஆகியவற்றையும் வேட்டையாடும்.
இனப்பெருக்கம்
[தொகு]இவை குட்டிகளை ஈனும் வகையினைச் சார்ந்தவை. 6 முதல் 8 குட்டிகளை மே முதல் சூலை வரை காலத்தில் ஈனுகின்றன.[5]
பிற முக்கிய இயல்புகள்
[தொகு]தொந்தரவு தரப்பட்டால், உடலை உப்பச்செய்து விரியன் பாம்புகளைப் போல் இவை கொத்தும். ஆனால் இவற்றிற்கு நஞ்சு இல்லாததால் மாந்தருக்கும் பிற பெரிய விலங்குகளுக்கும் உயிரிழக்கும் வாய்ப்பு இல்லை.
பரவல்
[தொகு]இவை இந்தியா முழுவதும் வடகிழக்கு, அந்தமான்-நிக்கோபார், இலச்சத்தீவுகள் நீங்கலாகவும், பாக்கித்தான், நேபாளம், வங்காளதேசம் மற்றும் இலங்கையில் காணப்படுகிறது.[1]
உருவ ஒற்றுமையுள்ள பிற பாம்புகள்
[தொகு]- சிறிய அயகரப்பாம்புகள் சுருட்டைப்பாம்புகளைப் போலவும், வளர்ந்தவை கண்ணாடி விரியன்களைப் போலவும் தோற்றம் அளிக்கின்றன.
இதனையும் காண்க
[தொகு]தகவல் உதவி
[தொகு]Snakes of India - The Field Guide -- இரோமுலசு விட்டேக்கர் மற்றும் அசோக் கேப்டன்
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 McDiarmid RW, Campbell JA, Touré T (1999). Snake Species of the World: A Taxonomic and Geographic Reference, Volume 1. Washington, District of Columbia: Herpetologists' League. 511 pp. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-893777-00-6 (series). பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-893777-01-4 (volume).
- ↑ "நல்ல பாம்பு 7: மண்ணுளியும் இருதலை மணியனும் ஒன்றா?". Hindu Tamil Thisai. பார்க்கப்பட்ட நாள் 2023-02-06.
- ↑ [1][தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ Das (2002).
- ↑ சிற்றினம் Eryx conicus at The Reptile Database. Accessed 3 June 2019.