அசோக் கேப்டன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அசோக் கேப்டன்

அசோக் கேப்டன் (Ashok Captain; பிறப்பு: 4 செப்டம்பர் 1960) இந்திய விலங்கியலாளர் ஆவார். இவர் ஈரிடவாழ்விகள் குறித்த ஆய்வுகளில் ஈடுபட்டவர். இந்தியப் பாம்புகள் குறித்த புத்தகங்களையும் ஆவணங்களையும் எழுதியுள்ளார். இவர் 1977 முதல் 1989[1] வரை சைக்கிள் பந்தைய போட்டியாளராகவும் இருந்தார். இந்தியாவில் மட்டுமே காணப்படுகிற மர பாம்பிற்கும் (சைலோபிசு கேப்டனி- Xylophis captaini)[2] வெண்கல மர பாம்பிற்கும் (டென்ட்ரெலாபிசு அசோகி, Dendrelaphis ashoki)[3] இவருடைய பெயர் இடப்பட்டுள்ளது.

அசோக் கேப்டனின் படைப்புகள் வருமாறு:

  • விட்டேக்கர், ரோமுலஸ்; கேப்டன், அசோக் (2004). இந்தியாவின் பாம்புகள்: கள வழிகாட்டி. சென்னை: டிராகோ புக்ஸ். ப. 495. ஐ.எஸ்.பி.என் 978-81-901873-0-5. பார்த்த நாள் 9 ஜனவரி 2012.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Ashok Captain". Cycling Archives. de Wielersite. பார்க்கப்பட்ட நாள் 8 January 2012.
  2. Beolens, Bo; Watkins, Michael; Grayson, Michael (2011). The Eponym Dictionary of Reptiles. Baltimore: Johns Hopkins University Press. xiii + 296 pp. ISBN 978-1-4214-0135-5. ("Captain", p. 47).
  3. Gower DJ, Winkler JD (2007). "Taxonomy of The Indian snake Xylophis Beddome (Serpentes: Caenophidia), with description of a new species". Hamadryad 31 (2): 315–329. http://www.zm.uzh.ch/agwilson/People/Jasmin%20Winkler/Gower&Winkler2007Hamadryad.pdf. பார்த்த நாள்: 8 January 2012.  (Xylophis captaini, new species).

மேலும் படிக்க[தொகு]

  • சைலோபிசு
  • Vogel, Gernot; van Rooijen, Johan (2011). "Contributions to a Review of the "Dendrelaphis pictus" (Gmelin, 1789) Complex (Serpentes: Colubridae) — 3. The Indian Forms, with the Description of a New Species from the Western Ghats". Journal of Herpetology 45 (1): 100-110. (Dendrelaphis ashoki, new species).
"https://ta.wikipedia.org/w/index.php?title=அசோக்_கேப்டன்&oldid=3537244" இலிருந்து மீள்விக்கப்பட்டது