கேப்டனின் மர பாம்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கேப்டனின் மர பாம்பு
உயிரியல் வகைப்பாடு
திணை: விலங்கு
பிரிவு: முதுகுநாணி
வகுப்பு: ஊர்வன
வரிசை: சுகுமோட்டா
குடும்பம்: பரேடே
துணைக்குடும்பம்: சைலோபினே
பேரினம்: சைலோபிசு
இனம்: சை. கேப்டனி
இருசொற் பெயரீடு
சைலோபிசு கேப்டனி
கவுர் & விங்லர், 2007[2]

கேப்டனின் மர பாம்பு (Captain's wood snake) அல்லது கேப்டனின் சைலோபிசு (சைலோபிசு கேப்டனி) என்பது 2007இல் விவரிக்கப்பட்ட பாம்பு சிற்றினங்களுள் ஒன்று. இது இந்தியாவில் மட்டுமே காணக்கூடிய அகணிய உயிரியாகும்.[3]

புவியியல் வரம்பு[தொகு]

இந்த ஹோலோடைப் கேரள மாநிலத்தில் உள்ள கோட்டயம் மாவட்டத்தில் உள்ள கானம் நகரில் 2000ஆம் ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்டது. உயரம் குறைவான மேற்குத் தொடர்ச்சி மலையின் தெற்குப் பகுதியின் பாலக்காட்டுக் கணவாய் பகுதியில் இந்த பாம்பு இருப்பது பதிவு செய்யப்பட்டுள்ளது.[2]

சொற்பிறப்பியல்[தொகு]

இந்த பாம்பின் சிற்றினப்பெயர் கேப்டனி மற்றும் பொதுவான கேப்டனின் மர பாம்பு, இந்தியாவில் பாம்புகள் குறித்த ஆய்வு செய்த இந்திய ஹெர்பெட்டாலஜிஸ்ட் அசோக் கேப்டனின் நினைவாக இடப்பட்டது.[2][4]

மேற்கோள்கள்[தொகு]

  1. Srinivasulu, C.; Srinivasulu, B.; Deepak, V.; Thakur, S. (2013). "Xylophis captaini". IUCN Red List of Threatened Species 2013: e.T172601A1349779. doi:10.2305/IUCN.UK.2013-1.RLTS.T172601A1349779.en. https://www.iucnredlist.org/species/172601/1349779. 
  2. 2.0 2.1 2.2 "Taxonomy of the Indian snake Xylophis Beddome (Serpentes: Caenophidia), with description of a new species". Hamadryad 31 (2): 315–329. 2007 இம் மூலத்தில் இருந்து 2008-12-03 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20081203032755/http://www.zm.uzh.ch/agwilson/People/Jasmin%20Winkler/Gower%26Winkler2007Hamadryad.pdf.  (Xylophis captaini, new species).
  3. Xylophis captaini at the Reptarium.cz Reptile Database
  4. Beolens B, Watkins M, Grayson M (2011). The Eponym Dictionary of Reptiles. Baltimore: Johns Hopkins University Press. xiii + 296 pp. ISBN 978-1-4214-0135-5. (Xylophis captaini, p. 47).
"https://ta.wikipedia.org/w/index.php?title=கேப்டனின்_மர_பாம்பு&oldid=3203879" இலிருந்து மீள்விக்கப்பட்டது