உள்ளடக்கத்துக்குச் செல்

பர்மிய மலைப்பாம்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/மலைப்பாம்பு|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}} |machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}} |machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}
பர்மிய மலைப்பாம்பு
உயிரியல் வகைப்பாடு e
இனம்:
[[வார்ப்புரு:Taxonomy/மலைப்பாம்பு]][. பைவிட்டாடஸ்
இருசொற் பெயரீடு
பைவிட்டாடஸ்
ஹென்ரிச் குல், 1820
தென்கிழக்காசியா மற்றும் வடகிழக்கு இந்தியாவில் (பச்சை நிறப் பகுதியில்) பர்மியப் மலைப்பாம்புகளின் வாழிடங்கள்
வேறு பெயர்கள் [2]

பைத்தான் மொலுரஸ் பைவிட்டாடஸ் (Python molurus bivittatus), ஹென்ரிச் குல், 1820

பர்மிய மலைப்பாம்பு, மிகப்பெரிய பாம்பு இனங்களில் ஒன்றாகும். இது தென்கிழக்காசியாவைப் பூர்வீகமாகக் கொண்டது மற்றும் செம்பட்டியலில் உள்ளது.[1] 2009ம் ஆண்டு வரை, இது இந்திய மலைப் பாம்பின் கிளையினமாகக் கருதப்பட்டது. ஆனால் தற்போது இது ஒரு தனித்துவமான இனமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.[3] செல்லப்பிராணி வணிகத்தின் விளைவாக ஐக்கிய அமெரிக்க நாட்டின் புளோரிடா மாகாணத்தில் பர்மிய மலைப்பாம்புகளின் எண்ணிக்கை அதிகரித்து விட்டது.[4]

விளக்கம்[தொகு]

பர்மிய மலைப்பாம்பு என்பது கரிய நிறமுடைய விஷமற்ற பாம்பு ஆகும். இது பல பழுப்பு நிற புள்ளிகளைக் கொண்டது. காடுகளில் பர்மிய மலைப்பாம்புகள் பொதுவாக 7 மீட்டர் நீளம் வரை வளரும்.[5] பெண் பர்மிய மலைப்பாம்புகள், ஆண் பர்மிய மலைப்பாம்பைவிட சற்று நீளமாகவும், பருமனாகவும் இருக்கும். இதன் எடை நீளத்திற்கு தக்கவாறு 7 கிலோ கிராம் முதல் 36 கிலோ கிராம் வரை இருக்கும்.[6][7][8][9][10] பொதுவாக பர்மிய மலைப்பாம்புகள் 5 மீட்டர் நீளம் கொண்டிருக்கும்.[11] பர்மிய மலைப்பாம்புகளின் அதிகபட்ச நீளம் 5.79 மீட்டர் (19 அடி 0 அங்குலம்) மற்றும் தென் புளோரிடாவின் பிக் சைப்ரஸ் தேசியப் பாதுகாப்பில் 10 சூலை 2023ல் பிடிபட்டது. பல அடி நீளம் கொண்டிருக்கும். "பேபி" என்ற பெயருடைய ஒரு பர்மியப் பாம்பு 18 அடி, 10 அங்குலம் நீளம் மற்றும் 182.8 கிலோ கிராம் (403 பவுண்டுகள்) எடை பதிவு செய்யப்பட்டுள்ளது. உலகின் 19 அடி நீள பர்மிய மலைப்பாம்பு முதன்முறையாக, சூலை 2023ல் புளோரிடாவில் பிடிக்கப்பட்டது.[12] நீளம் குறைந்த பர்மிய மலைப்பாம்புகள் ஜாவா, பாலி மற்றும் சுலவேசியில் காணப்படுகிறது.

வாழிடங்கள்[தொகு]

மியான்மர் மற்றும் மியான்மரை ஒட்டிய வடகிழக்கு இந்தியா, தென்கிழக்கு நேபாளம், மேற்கு பூட்டான், தென்கிழக்கு பங்களாதேஷ், தாய்லாந்து, லாவோஸ், கம்போடியா, வியட்நாம், வடக்கு மலேசியா மற்றும் தெற்கு சீனா உள்ளிட்ட தென்கிழக்காசியா பகுதிகளில் பர்மிய மலைப்பாம்புகள் அதிக அளவில் காணப்படுகிறது.[13] மேலும் இது இந்தோனேசியாவின் ஜாவா, தெற்கு சுலவேசி, பாலி மற்றும் சும்பாவாவிலும் காணப்படுகிறது.[14]

நன்கு நீந்தும் பர்மிய மலைப்பாம்புகள் நீருக்கடியில் 30 நிமிடங்கள் வரை இருக்க முடியும்: ஆனால் பெரும்பாலும் நிலத்தில் இருக்கும். இவைகள் புல்வெளிகள், சதுப்பு நிலங்கள், பாறைகள் நிறைந்த மலையடிவாரங்கள், வனப்பகுதிகள், ஆற்றுப் பள்ளத்தாக்குகள் மற்றும் திறந்த வெளிகளுடன் கூடிய காடுகளில் வாழ்கிறது. இவைகள் மரங்களில் ஏறும் திறன் கொண்டது.

உணவு[தொகு]

எல்லா பாம்புகளையும் போலவே, பர்மிய மலைப்பாம்பும் மாமிச உண்ணி. அதன் உணவில் முதன்மையாக பறவைகள் மற்றும் பாலூட்டிகள் உள்ளது. இது ஒரே இடத்தில் காத்திருப்பு வேட்டையாடும் விலங்கு. அதாவது அதன் பெரும்பாலான நேரத்தை ஒப்பீட்டளவில் அசையாமல், இரையை நெருங்கும் வரை காத்திருந்து, பின்னர் வேகமாக தாக்கும்.[15] பாம்பு அதன் கூர்மையான பற்களால் வேட்டையாடும் விலங்கைப் பிடிக்கிறது. பின்னர் அதன் உடலைச் சுற்றி வளைத்து அதைக் கொன்றுவிடும்.[16] மலைப்பாம்பு அதன் இரையை முழுவதுமாக விழுங்குகிறது. இதன் உணவுக்கு ஆதாரமாக எலிகள் மற்றும் பிற பாம்புகள் இருப்பதால் இது பெரும்பாலும் மனித வாழ்விடங்கள் அருகே காணப்படுகிறது. புளோரிடாவில் பர்மிய மலைப்பாம்புகள் நரிகள், முயல்கள் மற்றும் ரக்கூன்கள் உள்ளிட்ட பல்வேறு சிறிய பாலூட்டிகளை உண்கிறது. அவற்றின் அதிக வேட்டையாடுதல் அளவுகள் காரணமாக, இப்பகுதியில் பல பாலூட்டி இனங்களின் வீழ்ச்சியிலும், காணாமல் போவதிலும் உள்ளாகியுள்ளது. பெரிய பர்மிய மலைப்பாம்புகள் பன்றிகள், ஆடுகள் போன்ற பெரிய விலங்குகளை வேட்டையாடி உண்கிறது. மேலும் புளோரிடாவில் முதலைகள் மற்றும் பெரிய மான்களையும் தாக்கி உண்டதாக அறியப்படுகிறது.[17][18]

புளோரிடாவில் பர்மிய மலைப்பாம்புகள்[தொகு]

2007ல் ஐக்கிய அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் (சிவப்பு நிறப் பகுதிகளில்) பர்மிய மலைப்பாம்புகளின் வாழிடங்கள்
புளோரிடாவின் எவர்கிலேட்ஸ் தேசியப் பூங்காவில் பிடிபட்ட பர்மிய மலைப்பாம்பு

ஐக்கிய அமெரிக்க நாட்டின் தெற்கு புளோரிடா மாநிலத்தில் பர்மிய மலைப்பாம்புகள் வேட்டை பரவலாக உள்ளது. தற்போது புளோரிடா மாநிலத்தில் அதிக எண்ணிக்கையிலான பர்மிய மலைப்பாம்புகள் காணப்படுகிறது.[19] புளோரிடா மாநிலத்தில் 1996 மற்றும் 2006 ஆண்டுகளுக்கு இடையில், பர்மிய மலைப்பாம்பு செல்லப்பிராணி வர்த்தகம் அதிகரித்தது. 90,000க்கும் அதிகமான பர்மிய மலைப்பாம்புகள் தென்கிழக்காசியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டது. புளோரிடா எவர்கிலேட்ஸ் தேசியப் பூங்காவில் தற்போதைய பர்மிய மலைப்பாம்புகளின் எண்ணிக்கை அதிகரித்து, ஒரு ஆக்கிரமிப்பு இனமாக மாறியுள்ளது.

பர்மிய மலைப்பாம்புகளை இறக்குமதி செய்வது அமெரிக்காவில் சனவரி 2012ல் தடைசெய்யப்பட்டது.[20] 2012ம் ஆண்டு அறிக்கையில் "பர்மிய மலைப்பாம்புகள் நன்கு வளர்ந்த பகுதிகளில், நரிகள், ரக்கூன்கள், மான்கள் மற்றும் முயல்கள் பெருமளவு மறைந்துவிட்டது. தெற்கு புளோரிடாவில் பர்மிய மலைப்பாம்புகளின் எண்ணிக்கையைக் குறைக்க ஆண்டுதோறும் ஆகஸ்டு மாதத்தில் மலைப்பாம்பு வேட்டை 2017ம் ஆண்டு முதல் அரசால் தொடங்கப்பட்டது. அதிகமான மலைப்பாம்புகளை வேட்டையாடுபவர்களுக்கு பரிசும் வழங்கப்படுகிறது.[21][22][23]

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

 1. 1.0 1.1 Stuart, B.; Nguyen, T.Q.; Thy, N.; Grismer, L.; Chan-Ard, T.; Iskandar, D.; Golynsky, E.; Lau, M.W. (2019). "Python bivittatus". IUCN Red List of Threatened Species 2019: e.T193451A151341916. https://www.iucnredlist.org/species/193451/151341916. பார்த்த நாள்: 6 April 2021. 
 2. Python bivittatus at the Reptarium.cz Reptile Database
 3. Jacobs, H.J.; Auliya, M.; Böhme, W. (2009). "On the taxonomy of the Burmese Python, Python molurus bivittatus KUHL, 1820, specifically on the Sulawesi population". Sauria 31 (3): 5–11. 
 4. Sarill, M. (2016). "Burmese Pythons in the Everglades". Berkeley Rausser College of Natural Resources. பார்க்கப்பட்ட நாள் 2021-03-17.
 5. Barker, D.G.; Barten, S.L.; Ehrsam, J.P.; Daddono, L. (2012). "The corrected lengths of two well-known giant pythons and the establishment of a new maximum length record for Burmese Pythons, Python bivittatus". Bulletin of the Chicago Herpetological Society 47 (1): 1–6. http://www.vpi.com/sites/default/files/Barker-et-al_CorrectPythonLengths_2.pdf. பார்த்த நாள்: 2020-03-02. 
 6. Van Mierop, L.H.; Barnard, S.M. (1976). "Observations on the reproduction of Python molurus bivittatus (Reptilia, Serpentes, Boidae)". Journal of Herpetology 10 (4): 333–340. doi:10.2307/1563071. 
 7. Barker, D.G.; Murphy J.B.; Smith, K.W. (1979). "Social behavior in a captive group of Indian pythons, Python molurus (Serpentes, Boidae) with formation of a linear social hierarchy". Copeia 1979 (3): 466–471. doi:10.2307/1443224. 
 8. Marcellini, D.L.; Peters, A. (1982). "Preliminary observations on endogeneous heat production after feeding in Python molurus". Journal of Herpetology 16 (1): 92–95. doi:10.2307/1563914. 
 9. Jacobson, E.R.; Homer, B.; Adams, W. (1991). "Endocarditis and congestive heart failure in a Burmese python (Python molurus bivittatus)". Journal of Zoo and Wildlife Medicine 22: 245–248. 
 10. Groot, T.V.; Bruins, E.; Breeuwer, J.A. (2003). "Molecular genetic evidence for parthenogenesis in the Burmese python, Python molurus bivittatus". Heredity 90 (2): 130–135. doi:10.1038/sj.hdy.6800210. பப்மெட்:12634818. https://archive.org/details/sim_heredity_2003-02_90_2/page/130. 
 11. Saint Girons, H. (1972). "Les serpents du Cambodge". Mémoires du Muséum national d'Histoire naturelle. Série A: 40–41. 
 12. A record-breaking Burmese python — as long as a giraffe is tall — caught in Florida
 13. Barker, D.G.; Barker, T.M. (2010). "The Distribution of the Burmese Python, Python bivittatus, in China". Bulletin of the Chicago Herpetological Society 45 (5): 86–88. http://usark.org/wp-content/uploads/2012/05/Burmese-China_BarkerBarker.pdf. பார்த்த நாள்: 2012-06-26. 
 14. Barker, D.G.; Barker, T.M. (2008). "The distribution of the Burmese Python, Python molurus bivittatus". Bulletin of the Chicago Herpetological Society 43 (3): 33–38. http://www.venomousreptiles.org/libraries/download/6157/distributionburmesepython.pdf. பார்த்த நாள்: 2012-10-17. 
 15. "Adaptive responses to feeding in Burmese pythons: pay before pumping". The Journal of Experimental Biology 198 (Pt 6): 1313–1325. June 1995. doi:10.1242/jeb.198.6.1313. பப்மெட்:7782719. https://jeb.biologists.org/content/198/6/1313. 
 16. Szalay J (February 2016). "Python Facts". livescience.com. பார்க்கப்பட்ட நாள் 2021-03-17.
 17. "Photo in the News: Python Bursts After Eating Gator (Update)". National Geographic News. 5 September 2006. பார்க்கப்பட்ட நாள் 8 April 2019.
 18. "Large Python Captured, Killed After Devouring Adult Deer | KSEE 24 News - Central Valley's News Station: Fresno-Visalia - News, Sports, Weather | Local News". Ksee24.com. 2011-10-31. Archived from the original on 2012-07-31. பார்க்கப்பட்ட நாள் 9 August 2012.
 19. "Top 10 Invasive Species". Time. 2010. Archived from the original on February 6, 2010. பார்க்கப்பட்ட நாள் 27 April 2010.
 20. (January 17, 2012). "Salazar Announces Ban on Importation and Interstate Transportation of Four Giant Snakes that Threaten Everglades". செய்திக் குறிப்பு.
 21. முதலை, சிறுத்தையைக் கூட உண்ணும் ராட்சத மலைப்பாம்புகளை இவர்கள் பிடிப்பது எப்படி?
 22. The python removal competition
 23. Python Elimination Program in South Florida
"https://ta.wikipedia.org/w/index.php?title=பர்மிய_மலைப்பாம்பு&oldid=3781783" இலிருந்து மீள்விக்கப்பட்டது