மணிமாறன் சித்தார்த்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மணிமாறன் சித்தார்த் (Manimaran Siddharth பிறப்பு: சூலை 3,1998) இந்தியத் துடுப்பாட்ட வீரர் ஆவார். உள்ளூர்ப் போட்டிகளில் தமிழ்நாடு அணிக்காகவும், இந்தியன் பிரீமியர் லீக்கில், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்காகவும் விளையாடுகிறார். இவர் ஓர் இடது கை வழமைச் சுழல் பந்து வீச்சாளராவார் .[1]

உள்ளூர்ப் போட்டிகள்[தொகு]

2019 நவம்பர் 22இல், சையத் முஷ்டாக் அலிக் கோப்பையில் தமிழ்நாடு அணிக்காக இருபது20 போட்டியில் அறிமுகமானார்.[2] 2019 திசம்பர் 9இல் ரஞ்சிக் கோப்பையில் முதல் தரத் துடுப்பாட்டப் போட்டியில் அறிமுகமானார்.[3] இவர் 20 பிப்ரவரி 2021இல் விஜய் அசாரே கிண்ணத்தில் பட்டியல் அ துடுப்பாட்டத்தில் அறிமுகமானார்.[4]

இந்தியன் பிரீமியர் லீக்[தொகு]

2020 ஐபிஎல் ஏலத்தில், 2020 இந்தியன் பிரீமியர் லீக்கிற்கு முன்னதாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியால் இவர் வாங்கப்பட்டார்.[5] 2021 ஏலத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியால் ஏலத்தில் எடுக்கப்பட்டார்.[6] காயம் காரணமாக இவருக்குப் பதிலாக குல்வந்த் கெஜ்ரோலியா நியமிக்கப்பட்டார்.[7]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Manimaran Siddharth". ESPNcricinfo. பார்க்கப்பட்ட நாள் 22 November 2019.
  2. "Super League Group B, Syed Mushtaq Ali Trophy at Surat, Nov 22 2019". ESPNcricinfo. பார்க்கப்பட்ட நாள் 22 November 2019.
  3. "Elite, Group B, Ranji Trophy at Dindigul, Dec 9-12 2019". ESPNcricinfo. பார்க்கப்பட்ட நாள் 9 December 2019.
  4. "Elite, Group B, Indore, Feb 20 2021, Vijay Hazare Trophy". ESPNcricinfo. பார்க்கப்பட்ட நாள் 20 February 2021.
  5. "IPL auction analysis: Do the eight teams have their best XIs in place?". ESPNcricinfo. பார்க்கப்பட்ட நாள் 20 December 2019.
  6. "IPL 2021 auction: The list of sold and unsold players". ESPNcricinfo. பார்க்கப்பட்ட நாள் 18 February 2021.
  7. "IPL 2021: Kulwant Khejroliya Replaces Injured Manimaran Siddharth In Delhi Capitals Squad". NDTV Sports. பார்க்கப்பட்ட நாள் 15 September 2021.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மணிமாறன்_சித்தார்த்&oldid=3920597" இலிருந்து மீள்விக்கப்பட்டது