உள்ளடக்கத்துக்குச் செல்

விஜய் அசாரே கிண்ணம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
விஜய் அசாரே கிண்ணம்
நாடு(கள்) இந்தியா
நிர்வாகி(கள்)பன்னாட்டுத் துடுப்பாட்ட அவை
வடிவம்பட்டியல் அ துடுப்பாட்டம்
முதல் பதிப்பு2002–03
கடைசிப் பதிப்பு2018-2019 விஜய் அசாரே வாகையாளர் கோப்பை
போட்டித் தொடர் வடிவம்தொடர் சுழல் முறை, மிகையாட்டம் (பிளே ஆஃப்)
மொத்த அணிகள்37
தற்போதைய வாகையாளர்மும்பை துடுப்பாட்ட அணி
அதிகமுறை வெற்றிகள்தமிழ்நாடு துடுப்பாட்ட அணி (5 முறை)
வலைத்தளம்Bcci.tv

விஜய் அசாரே கோப்பை (The Vijay Hazare Trophy) ரஞ்சிக் கோப்பை ஒருநாள் போட்டி எனவும் அழைக்கப்படும் இந்தத் தொடரானது குறைந்த பட்ச ஓவர்களைக் கொண்டு விளையாடப்படும் ஒரு உள்ளூர்ப் போட்டித் தொடராகும்.[1] இதில் ரஞ்சிக் கோப்பையில் விளையாடும் அணிகள் இதில் விளையாடுகின்றன. இது 2002- 2003 ஆம் ஆண்டு முதலாக விளையாடப்பட்டு வருகிறது. விஜய் அசாரேவின் நினைவாக இந்தப் பெயர் வைக்கப்பட்டுள்ளது.

இந்தத் தொடரில் தமிழகத் துடுப்பாட்ட அணி 5 முறை கோப்பை வென்று அதிகமுறை கோப்பை வென்றவர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளது. 2018 -19 ஆம் ஆன்டிற்கான விஜய் அசாரே துடுப்பாட்டத் தொடரின் இறுதிப் போட்டியில் தில்லித் துடுப்பாட்ட அணியை வீழ்த்தி மும்பை அணி வாகையாளரானது. [2]


சான்றுகள்[தொகு]

  1. "viay hazare trophy 2018-19".
  2. "Dubey, Tare the stars as Mumbai lift Vijay Hazare title after 12 years". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 20 October 2018.
"https://ta.wikipedia.org/w/index.php?title=விஜய்_அசாரே_கிண்ணம்&oldid=3388171" இலிருந்து மீள்விக்கப்பட்டது