உள்ளடக்கத்துக்குச் செல்

மணிப்பூர் மாநில அருங்காட்சியகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மணிப்பூர் மாநில அருங்காட்சியகம்
Manipur State Museum
மணிப்பூர் மாநில அருங்காட்சியகத்தின் நுழைவாயிலின் முன் தோற்றம்
Map
நிறுவப்பட்டது23 செப்டம்பர், 1969
அமைவிடம்இம்பால் போலோ விளையாட்டரங்கத்திற்கு அருகில் , இம்பால், மணிப்பூர்
வகைஅருங்காட்சியகம்
நிறுவியவர்மணிப்பூர் அரசு
மேற்பார்வையாளர்ஒய் பினிதா தேவி
உரிமையாளர்மணிப்பூர் அரசு

மணிப்பூர் மாநில அருங்காட்சியகம் (Manipur State Museum) இந்தியாவின் மணிப்பூர் மாநிலம், இம்பாலில் அமைந்துள்ளது. இது கலை, கலாச்சாரம், வரலாறு மற்றும் அறிவியல் கலைப்பொருட்கள் மற்றும் நினைவுச்சின்னங்களின் தொகுப்பைக் காண்பிக்கும் ஒரு நிறுவனம் ஆகும். இங்கு இயற்கை வரலாறு, இனவியல் மற்றும் தொல்பொருளியல் ஆகியவற்றின் வீட்டுப் பொருட்களும் உள்ளன.

கண்ணோட்டம்

[தொகு]

மணிப்பூர் மாநில அருங்காட்சியகத்தில் பண்டைய மணிப்பூர், இடைக்கால மணிப்பூர் மற்றும் நவீன மணிப்பூரின் ஆபரணங்கள், துணிகள், விவசாய உபகரணங்கள். சேகரித்து வைக்கப்பட்டுள்ளன [1] மேலும் இந்த அருங்காட்சியகம் மணிப்பூரி மக்களின் வாழ்க்கை வரலாற்றின் அனைத்தையும் உள்ளடக்கிய ஒரு தோற்றத்தையும் வழங்குகிறது. [2]

வரலாறு

[தொகு]

மணிப்பூர் மாநில அருங்காட்சியகம் 1969 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 23 ஆம் தேதியன்று தொடங்கப்பட்டது. [3] அப்போது இந்தியப் பிரதமராக இருந்த இந்திரா காந்தி அருங்காட்சியகத்தை திறந்து வைத்தார். தற்பொழுது இது ஒரு பல்நோக்கு அருங்காட்சியகமாக விரிவுபடுத்தப்பட்டுள்ளது. பல பிரிவுகளையும் உட்பிரிவுகளையும் தன்னகத்தே கொண்டுள்ளது. [1] ஒரு முக்கிய பிரிவு இனவியல் காட்சியகம் ஆகும். இந்த காட்சியகம் 2001 ஜனவரி 20 அன்று மணிப்பூர் ஆளுநராக இருந்த வேத் மர்வாவால் [1] மீண்டும் திறக்கப்பட்டது.

தொகுப்புகள்

[தொகு]

அரச குலத்தவர்களால் பயன்படுத்தப்பட்ட இயாங் இரென் எனப்படும் பந்தயப் படகுகள் இக்காட்சியகத்தில் மிகவும் பிரபலமானதாகும். இது 78 அடி நீளம் கொண்டு திறந்த காட்சியகமாக அமைந்துள்ளது.

பண்டைய மணிப்பூர், இடைக்கால மணிப்பூர் மற்றும் நவீன மணிப்பூரின் நாணயங்கள், கையெழுத்துப் பிரதிகள், கருவிகள், மட்பாண்டங்கள், ஆடைகள், ஓவியங்கள் மற்றும் ஆபரணங்கள் ஆகியவை மற்ற சேகரிப்புகளில் அடங்கும். [4]

அருங்காட்சியகத்தில் 500 எண்ணிக்கைக்கும் மேற்பட்ட அரிய வகை மந்தாரை இனங்கள் உள்ளன. அவற்றில் 472 மந்தாரைகள் மட்டுமே அடையாளம் காணப்பட்டுள்ளன. மணிப்பூரைப் போன்ற பல்வேறு வகையான மந்தாரை வகைகளை இந்தியாவில் எங்கும் யாரும் காண முடியாது என்று பல நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். [5]

அரச குலத்தவர் பயன்படுத்திய அம்பாரி , தற்போது மணிப்பூர் மாநில அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது, மணிப்பூரின் அரசரான சர் மெய்டிங்கு சுராசந்து சிங் தனிப்பட்ட முறையில் இதைப் பயன்படுத்தினார்.[6]

கண்காட்சிகள்

[தொகு]

முக்கியமாக கலாச்சார கருப்பொருள்கள் மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் இங்கு காட்சிப்படுத்தப்படுகின்றன. பழங்குடியினரின் ஆபரணங்கள், தலைக்கவசங்கள், விவசாயக் கருவிகள், வீட்டுக் கருவிகள், வேட்டையாடும் கருவிகள், புகைபிடிக்கும் குழாய்கள் மற்றும் விளக்குகள், சுடுமண் மட்பாண்டங்கள், தங்கம் மற்றும் வெள்ளி பாத்திரங்கள், சேணம், பாரம்பரிய நீர் குழாய், துணிகள் , பழங்குடிகள் நேரத்தை அளவிட்ட சாதனம் ஆகியவை சில இக் கண்காட்சியில் அடங்கும். பழங்கால தங்க முகமூடி, கலசங்கள், சவாரி இல்லாத குதிரை சிலைகள், ஆயுதங்கள் மற்றும் ஆயுதக் கூடை, பழங்குடியினர் உடைகள் போன்றவையும் இங்குள்ளன [1]

"தன்யீ பங்" மற்றும் "தன்யே சேய்" போன்ற நேரத்தை அளவிடும் கருவிகள் பண்டைய மணிப்பூர் நாகரிகத்தில் பண்டைய இனக்குழுவினரின் அறிவை நிரூபிக்கின்றன. [1]

மணிப்பூரின் சமூக அமைப்பை ஆய்வு செய்ய காட்சிப்படுத்தப்பட்ட ஆடைகள் முக்கியமானவையாகும். [1]

மணிப்பூர் அரசர் சுராசந்த் சிங் (1891-1941), பயன்படுத்திய அம்பாரி , தற்போது மணிப்பூர் மாநில அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. [6]

மணிப்பூர் மாநில அருங்காட்சியகம் பாரம்பரிய மணிப்பூரி சிற்பிகளுக்கான பட்டறைகளையும் ஏற்பாடு செய்கிறது - [7]

மேலும் பார்க்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 Lisam, Khomdan Singh (2011). Encyclopaedia Of Manipur (3 Vol.) (in ஆங்கிலம்). பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-7835-864-2.Lisam, Khomdan Singh (2011). Encyclopaedia Of Manipur (3 Vol.). ISBN 978-81-7835-864-2.
  2. Prakash, Col Ved (2007). Encyclopaedia of North-East India (in ஆங்கிலம்). பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-269-0706-9.
  3. McDonald, John D.; Levine-Clark, Michael (2017-03-15). Encyclopedia of Library and Information Sciences (in ஆங்கிலம்). CRC Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-000-03154-6.
  4. The Cultural Heritage of Manipur (in ஆங்கிலம்).
  5. Singh, Dr Th Suresh (2014-06-02). The Endless Kabaw Valley: British Created Visious Cycle of Manipur, Burma and India (in ஆங்கிலம்). பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-93-84318-00-0.
  6. 6.0 6.1 Devi, Dr Yumlembam Gopi. Glimpses of Manipuri Culture (in ஆங்கிலம்). பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-359-72919-7.
  7. Devi, Jamini (2010). Cultural History of Manipur: Sija Laioibi and the Maharas (in ஆங்கிலம்). பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-8324-342-1.

புற இணைப்புகள்

[தொகு]