உள்ளடக்கத்துக்குச் செல்

புயா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

புயாக்கள் (Puyas) என்பவை தொன்மையான மணிப்பூரி மொழி கையெழுத்துப் பிரதிகளைக் குறிக்கின்றன. [1] பரம்பரை, இலக்கியம், வரலாறு, அரசாட்சி, நிர்வாகம், உருவாக்கம் மற்றும் அண்டவியல், தத்துவம், கவிதை, மத நம்பிக்கைகள் போன்ற பல கருப்பொருள்களை இவை உள்ளடக்கியுள்ளன. [1]

இந்த புயாக்கள் எதுவும் தொழில்முறை வரலாற்றாசிரியர்களால் தேதியிடப்படவில்லை அல்லது தீவிர உரை-விமர்சன ஆய்வுக்கு உட்பட்டவை என்று 2005 ஆம் ஆண்டில் சரோச் பராட்டு என்ற ஆய்வாளர் குறிப்பிட்டுள்ளார். மணிப்பூரி வரலாற்றை புனரமைப்பதில் உள்ளூர் எழுத்தாளர்கள் புயாக்களை நம்பகமான ஆதாரங்களாக கருதும் போக்கை இவர் விமர்சித்தார்.[2] வரலாறு மற்றும் பாரம்பரியத்தை மீண்டும் கண்டுபிடிப்பதை ஆதரிப்பதற்காக மணிப்புரி மொழி தேசியவாதிகளால் புயாக்கள் போலியாக உருவாக்கப்பட்டவை என்றும் அறிஞர்கள் குறிப்பிடுகின்றனர்.[3][4][5]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 Laishram ().
  2. Parratt (2005), ப. 11.
  3. Parratt (2005), ப. 11,17.
  4. Brandt (2005), ப. 128.
  5. Naorem (2015), ப. 219.

நூல் விவர அட்டவணை

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=புயா&oldid=3590277" இலிருந்து மீள்விக்கப்பட்டது