உள்ளடக்கத்துக்குச் செல்

மணிக்கூட்டுக் கோபுரம், பைசலாபாது

ஆள்கூறுகள்: 31°25′07.22″N 73°04′44.90″E / 31.4186722°N 73.0791389°E / 31.4186722; 73.0791389
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பைசாலாபாது மணிக்கூட்டுக் கோபுரம்
மணிக்கூட்டுக் கோபுரத்தின்
நெருக்கமான காட்சி, பைசலாபாத்
ஆள்கூறுகள்
இடம்பைசலாபாத், பஞ்சாப்
வகைஇந்தோ சரசனிக் பாணி
முடிவுற்ற நாள்14 நவம்பர் 1903

மணிக்கூட்டுக் கோபுரம், பைசாலாபாது (Clock Tower, Faisalabad) பாக்கித்தானின் பஞ்சாப் மாநிலத்திலுள்ள பைசலாபாத்தில் அமைந்துள்ள ஒரு மணிக்கூட்டுக் கோபுரம் ஆகும். இது பிரித்தானிய இராச்சியத்தின் காலத்திலிருந்து அதன் அசல் நிலையில் இன்றும் இருக்கும் பழமையான நினைவுச்சின்னங்களில் ஒன்றாகும். பத்தொன்பதாம் நூற்றாண்டில் தெற்கு ஆசியாவின் பெரும்பகுதியை ஆங்கிலேயர்கள் ஆண்டபோது இது கட்டப்பட்டது.

கம்பீரமான மணிக்கூட்டுக் கோபுரத்தின் அடித்தளம் 14 நவம்பர் 1903 அன்று பஞ்சாப் மாநிலத்தின் பிரித்தானிய துணை நிலை ஆளுநர் சர் சார்லஸ் ரிவாஸ் என்பவராலும், அப்துல்லாபூரின் மியான் குடும்பத்தைச் சேர்ந்த மிகப்பெரிய உள்ளூர் நில உரிமையாளராலும் அடிக்கல் நாட்டப்பட்டது. சதுர அடி ரூ.18 வீதம் நிலத்திற்கான நிதி சேகரிக்கப்பட்டது. இவ்வாறு திரட்டப்பட்ட நிதி நகராட்சி குழுவிடம் ஒப்படைக்கப்பட்டது.

கண்டா கர் சந்தைப் பகுதி எட்டு சந்தைப் பகுதிகள் கூடுமிடத்தில் வைக்கப்பட்டுள்ளது. இங்கு உள்ளூரில் விளைந்த பொருட்கள் வாங்கப்பட்டு விற்கப்படுகின்றன.

உள்ளூரில் "கண்டா கர்" என அறியப்படும் இது நகரின் பழைய பகுதியில் அமைந்துள்ளது. மணிக்கூட்டுக் கோபுரம் எட்டு சந்தைகளின் மையத்தில் வைக்கப்பட்டுள்ளது. இது ஒரு பறவைப் பார்வையிலிருந்து ஐக்கிய இராச்சியத்தின் தேசியக் கொடி[1]}}[2][3] போல் தெரிகிறது. இந்த சிறப்பு அமைப்பு இன்றும் உள்ளது. கூகுள் நிலப்படங்களின் சமீபத்திய மென்பொருளைப் பயன்படுத்தியும் இதனை பார்க்கலாம். எட்டு சந்தைகள் ஒவ்வொன்றும் தனித்துவமான தயாரிப்பு வகைகளை விற்பனைக்கு வைத்துள்ளன.

ஈகைத் திருநாளிலும், சுதந்திர தின விழாக்களிலும் பைசலாபாத் நகரத் தந்தை இந்த இடத்தில் உரை நிகழ்த்தி, கொடியை முழு கம்பத்தில் ஏற்றுவார்.

பைசலாபாத் வரலாற்றில் முக்கியத்துவம்

[தொகு]
இரவில் மணிக்கூட்டுக் கோபுரத்தின் காட்சி

மணிக்கூட்டுக் கோபுரம் அல்லது கண்டா கர் பைசலாபாத்தின் மிகவும் அங்கீகரிக்கப்பட்ட கட்டிடமாகும். இது நகரத்தின் மையம் மட்டுமல்ல, நகரத்தில் நடக்கும் அனைத்து நடவடிக்கைகளின் மையமும் ஆகும். தேர்தல் சமயத்தில், ஒவ்வொரு அரசியல் கட்சியும் இந்த இடத்தில் பேரணி நடத்த முயற்சிக்கிறது. எல்லா ஆர்ப்பாட்டங்களுக்கும் இதுவே முக்கிய இடமாகும். ஒவ்வொரு ஆண்டும் ஈகைத் திருநாளின் மத்திய பேரணி, முஃகர்ரம் பண்டிகையின் மிகப்பெரிய ஊர்வலம் ஆகியவை இங்கு நடைபெறும்.

இவற்றையும் பார்க்கவும்

[தொகு]

சான்றுகள்

[தொகு]
  1. "The official website of The British Monarchy". Royal.gov.uk. Archived from the original on 5 November 2015. பார்க்கப்பட்ட நாள் 2015-12-03.
  2. "The Union Jack or The Union Flag?". The Flag Institute. 2014-06-20. பார்க்கப்பட்ட நாள் 2015-12-03.
  3. "Union Jack". The British Monarchy. Archived from the original on 30 June 2013. பார்க்கப்பட்ட நாள் 2013-08-12.

வெளி இணைப்புகள்

[தொகு]
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Clock Tower, Faisalabad
என்பதில் ஊடகங்கள் உள்ளன.