மஞ்சுளா கட்டமனேனி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மஞ்சுளா கட்டமனேனி

மஞ்சுளா சுவரூப் ( Manjula Ghattamaneni நீ கட்டமனேனி; பிறப்பு 8 நவம்பர் 1970) ஓர் இந்தியத் திரைப்படத் தயாரிப்பாளர் மற்றும் நடிகை ஆவார். இவர் தெலுங்கு சினிமாவில் பணியாற்றியதற்கப் பரவலாக அறியப்பட்டவர். பிரபல தெலுங்கு நடிகர் கிருஷ்ணா கட்டமனேனிக்கு பிறந்த இவர், 1999 ஆம் ஆண்டு ராஜஸ்தான் திரைப்படத்தில் கௌரவ வேடத்தில் நடித்தன் மூலம் தனது நடிப்புத் தொழிலைத் தொடங்கினார் மற்றும் சம்மர் இன் பெத்லகேம் எனும் மலையாள திரைப்படத்தில் துணை நடிகராக நடித்தார். 2002 ஆம் ஆண்டில் ஷோ எனும் திரைப்படத்தினை நடித்து தயாரித்ததன் மூலம் அவர் பரவலாக புகழ் பெற்றார். இந்த படம் தெலுங்கில் சிறந்த திரைப்படத்திற்கான தேசிய திரைப்பட விருதையும், அந்த ஆண்டிற்கான சிறந்த திரைக்கதைக்கான தேசிய திரைப்பட விருதையும் வென்றது. இவர் தனது தாயின் பெயரில், இந்திரா புரொடக்ஷன்ஸ் என்ற திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தை நிறுவினார்.

தனிப்பட்ட வாழ்க்கை[தொகு]

அவர் மூத்த நடிகர் கிருஷ்ண கட்டமனேனி மற்றும் அவரது முதல் மனைவி இந்திரா தேவியின் மூன்று குழந்தைகளில் இரண்டாவது மகள் ஆவார். அவளுக்கு இரண்டு சகோதரர்களும் இரண்டு சகோதரிகளும் உள்ளனர். அவரது மூத்த சகோதரர் ரமேஷ் பாபு ஒரு திரைப்படத் தயாரிப்பாளர் மற்றும் அவரது தம்பி மகேஷ் பாபு பிரபல தெலுங்கு நடிகர் ஆவார்.

மஞ்சுளா தயாரிப்பாளரும் நடிகருமான சஞ்சய் சுவரூப்பை மணந்தார்.[1] இவர்களுக்கு ஜான்வி என்ற மகள் உள்ளார். [2] அவர் தனது மைத்துனி நம்ரதா சிரோட்கருடன் நல்ல நண்பர்களாக இருந்தார்.[3]

மஞ்சுளா ஒரு தியானிப்பாளர் ,20 வருடங்களாக தியானத்தைத் தொடர்கிறார். [4]

தொழில் வாழ்க்கை[தொகு]

மஞ்சுளா ஆரம்பத்தில் நடிகர் மா. நா. நம்பியாரின் பேரன் தீபக் உடன் இணைந்து நடிக்கும் படத்தில் அறிமுகமாக இருந்தார், ஆனால் படம் துவங்கப்படவில்லை. [5] ஆர்.கே.செல்வமணியின் ராஜஸ்தானில் ஒரு தீவிரவாதியாக கௌரவ வேடத்தில் தோன்றி தனது தொழில் வாழ்க்கையைத் தொடங்கினார். 1998 ஆம் ஆண்டு சுரேஷ் கோபி மற்றும் ஜெயராம் நடித்த சம்மர் இன் பெத்லகேமில் மலையாளத்தில் பெண் கதாநாயகிகளில் ஒருவராக நடித்தார். [6] மஞ்சுளா தனது வாழ்க்கையைத் தொடங்கியபோது, அவருடைய தந்தையின் ரசிகர்களிடமிருந்து எதிர்மறையான கருத்துக்களை எதிர்கொண்டாள் . [7]

2002 ஆம் ஆண்டில், ஷோ என்ற திரைப்படத்தை தயாரித்து அதில் நடித்தார். [8] நீலகண்டா இயக்கிய இந்தப் படம் தெலுங்கில் சிறந்த திரைப்படத்திற்கான தேசிய திரைப்பட விருதை வென்றது.[9]

எஸ். ஜே. சூர்யா இயக்கிய நானி (2004) அவரது இரண்டாவது தயாரிப்பு முயற்சி ஆகும். இந்த படத்தில் அவரது சகோதரர் மகேஷ் பாபு நடித்தார். [10] படம் வணிக ரீதியில் வெற்றி பெறவில்லை. . [10] [11] [12] 2006 ஆம் ஆண்டில், பூரி ஜெகன்நாத்துடன் அதிரடித் திரைப்படமான போக்கிரியை அவர் இணைந்து தயாரித்தார். அந்த திரைப்படம் வணிக ரீதியில் வெற்றி பெற்றது, அக்காலத்தில் தெலுங்கு திரையுலகில் அதிக வருவாய் ஈட்டிய திரைப்படம் எனும் பெயர் பெற்றது. [13]

2009 ஆம் ஆண்டில், அவர் தனது அடுத்த தயாரிப்பு முயற்சியான காவ்யாஸ் டைரியுடன் நடிப்புக்குத் திரும்பினார். 2010 ஆம் ஆண்டில், அவர் தனது கணவருடன் சேர்ந்து கௌதம் மேனனின் இயக்கத்தில் நாக சைதன்யாவுடன் காதல் காதல் கதையான யே மாயா சேசாவே தயாரித்தார். [14] இந்த படம் விமர்சன ரீதியாக பாராட்டப்பட்டது மற்றும் வணிக ரீதியில் வெற்றி பெற்றது. [15] அதே ஆண்டில், அவர் தனது கணவர் சஞ்சய் சுவரூப் உடன் ஆரஞ்சு திரைப்படத்திலும் தோன்றினார். [16]

சான்றுகள்[தொகு]

  1. "Didn't we tell you she's returning!". Entertainment section (தி டைம்ஸ் ஆஃப் இந்தியா). 2008-12-16. http://timesofindia.indiatimes.com/Entertainment/India_Buzz/Didnt_we_tell_you_shes_returning_/rssarticleshow/3841514.cms. 
  2. Mahesh Babu. "Mahesh Babu, Namratha's Son – Image". Whatslatest.com. பார்க்கப்பட்ட நாள் 2012-11-04.
  3. "Metro Plus Hyderabad : Smita does the talking". தி இந்து. 2009-09-12 இம் மூலத்தில் இருந்து 2014-04-19 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140419012015/http://www.hindu.com/mp/2009/09/12/stories/2009091251080600.htm. 
  4. "About Me • Manjula Ghattamaneni".
  5. "Rediff On The NeT, Movies: Gossip from the southern film industry". www.rediff.com.
  6. NARASIMHAM, M.L. ""Show" time!". தி இந்து. Archived from the original on 1 July 2003. பார்க்கப்பட்ட நாள் 7 December 2012.
  7. "Gamanichara". Telugu Cinema. Archived from the original on 19 August 2010. பார்க்கப்பட்ட நாள் 7 December 2012.
  8. "Show" – via www.imdb.com.
  9. Rajamani, Radhika (2003-08-18). "Celluloid Dreams". தி இந்து (Chennai, India) இம் மூலத்தில் இருந்து 2003-10-24 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20031024094533/http://www.hindu.com/thehindu/mp/2003/08/18/stories/2003081800730100.htm. 
  10. 10.0 10.1 Rajamani, Radhika (2004-04-29). "Entertainer all the way". தி இந்து (Chennai, India) இம் மூலத்தில் இருந்து 2004-06-29 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20040629124454/http://www.hindu.com/mp/2004/04/29/stories/2004042901150100.htm. 
  11. Murthy, Neeraja (2008-12-06). "Living life to the fullest". தி இந்து (Chennai, India) இம் மூலத்தில் இருந்து 2009-02-03 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20090203115832/http://hindu.com/mp/2008/12/06/stories/2008120651820400.htm. 
  12. Hooli, Shekhar H (2008-07-24). "Mahesh Babu - the Prince of Telugu Cinema". Star Profile இம் மூலத்தில் இருந்து 2012-03-15 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20120315082903/http://entertainment.oneindia.in/celebrities/star-profile/2008/mahesh-babu-profile-biography-240708.html. 
  13. "'Pokiri' crosses magical 365-day mark". தி இந்து (Chennai, India). 2007-05-02 இம் மூலத்தில் இருந்து 2007-05-04 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20070504044318/http://www.hindu.com/2007/05/02/stories/2007050219160200.htm. 
  14. "Ye Maya Chesave film review - Telugu cinema Review - Naga Chaitanya & Samantha". Idlebrain.com. 2010-02-26. பார்க்கப்பட்ட நாள் 2012-11-04.
  15. "Telugu365.com". Telugu365.com. Archived from the original on 2021-09-18. பார்க்கப்பட்ட நாள் 2012-11-04.
  16. "Mahesh Babu Sister as Ram Charan sister in Б─≤OrangeБ─≥". Supergoodmovies.com. 2010-07-17. Archived from the original on 31 October 2010. பார்க்கப்பட்ட நாள் 2012-11-04.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மஞ்சுளா_கட்டமனேனி&oldid=3763317" இலிருந்து மீள்விக்கப்பட்டது