மஞ்சாலுமூடு
மஞ்சாலுமூடு | |
---|---|
கிராமம் | |
மஞ்சாலுமூடு, கன்னியாகுமரி மாவட்டம், தமிழ்நாடு | |
ஆள்கூறுகள்: 8°22′35″N 77°13′23″E / 8.3763°N 77.2230°E | |
நாடு | ![]() |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | கன்னியாகுமரி |
ஏற்றம் | 78.62 m (257.94 ft) |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 6,840 |
மொழிகள் | |
• அலுவல் | தமிழ் |
• பேசும் மொழிகள் | தமிழ் மற்றும் மலையாளம் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
அஞ்சல் குறியீட்டு எண் | 629151 |
தொலைபேசிக் குறியீடு | +914651****** |
வாகனப் பதிவு | தநா 75 |
மஞ்சாலுமூடு (Manjalumoodu)[1] என்பது தமிழ்நாட்டின் கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள ஒரு சிறிய கிராமமாகும்.
அமைவிடம்
[தொகு]கடல் மட்டத்திலிருந்து சுமார் 78.62 மீ. உயரத்தில், (8°22′35″N 77°13′23″E / 8.3763°N 77.2230°E) என்ற புவியியல் ஆள்கூறுகள் கொண்டு மஞ்சாலுமூடு அமையப் பெற்றுள்ளது.
மக்கள்தொகை பரம்பல்
[தொகு]2011 இந்திய மக்கள் தொகைக் கணக்கெடுப்பு அடிப்படையில், மஞ்சாலுமூடு ஊரின் மொத்த மக்கள்தொகை 6,840 பேர் ஆகும். இதில் 3,300 பேர் ஆண்கள் மற்றும் 3,540 பேர் பெண்கள் ஆவர்.[2]
விபரங்கள்
[தொகு]கைதகம், உத்தரங்கோடு, மாலைக்கோடு, முக்கூட்டுக்கல், திடுமாந்தோட்டம் ஆகியவை மஞ்சாலுமூட்டை சுற்றியுள்ள கிராமங்களாகும். இது மேற்குத் தொடர்ச்சி மலையின் அடிவாரத்திற்கு மிக அருகில் உள்ளது. கிராமத்திலுள்ள நிலம் அனைத்தும் இரப்பர் அறுவடைக்குப் பயன்படுத்தப்படுகிறது. இரப்பர் மரத்தில் இருந்து இரப்பர் பால் (லேடெக்ஸ்) சேகரிக்கப்படும். இந்த பகுதியில் இரப்பர் தட்டுதல் முக்கிய தொழிலாகும். மஞ்சாலுமூடு கிராமத்திற்கு அருகில் விளவங்கோடு உள்ளது.
கல்வி
[தொகு]கல்லூரி
[தொகு]நாராயணகுரு பொறியியல் கல்லூரி மஞ்சாலுமூட்டிற்கு அருகில் உள்ளது.[3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Irenipuram Paul Rasaiya (2023-06-04). Panaiyolai. Pustaka Digital Media.
- ↑ "Manjalumoodu Census Town City Population Census 2011-2025". www.census2011.co.in. Retrieved 2025-01-12.
- ↑ Biju Mathew (2015-06-01). Campus Plus 2015 (in ஆங்கிலம்). Biju Mathew. ISBN 978-81-929470-0-6.